கடந்த ஜூன் 18 முதல் 20 வரை அஜய் குப்தாவின் மகன் சூர்யகாந்துக்கும், ஜூன் 20 முதல் 22 வரை அதுல் குப்தாவின் மகன் சஷாங்-க்கும் உத்தராகண்ட் மாநிலத்தில் ஆலி (Auli) என்னும் இடத்தில் திருமணம் நடத்தினார்கள்.
இந்த குப்தாக்கள் பெரிய பணக்காரர்கள். தென்னாப்பிரிக்காவின் அரசியலையே ஆளும் அளவுக்கு செல்வாக்கு படைத்த பணக்காரர்கள். இந்த திருமணத்துக்கு மட்டும் சுமார் 200 கோடி ரூபாய் செலவழித்து இருக்கிறார்களாம்.
இந்த ஆலி நகராட்சியில், இமய மலையின் அடிவாரத்தில் அமைந்திருக்கும் ஒரு திறந்த வெளி இடத்தில் தான் கோடி கணக்கில் செலவழித்து சினிமா செட் போல போட்டு திருமணத்தை நடத்தி இருக்கிறார்கள் இந்த குப்தாக்கள்.
எதிர்ப்பு
குப்தா குடும்பத்தின் இரண்டு வாரிசுகளின் திருமணத்தை திட்டமிட்டுக் கொண்டிருக்கும் போதே, சில சூழலியல் எதிர்ப்புகள் எழுந்திருக்கின்றன. ஆலி (Auli) பகுதி இமயமலை அடிவாரத்தில் இருப்பதால், இங்கு ஐந்து நாட்களுக்கு செயற்கையாக செட் போல போட்டு திருமணம் நடத்துவதனால் சூழலியல் பெரிய அளவில் பாதிக்கப்படும் என ஒரு பொது நல வழக்கு கூட போட்டார்களாம். வழக்கம் போல வழக்கு போட்டவனை பைத்தியக்காரன் என ஒதுக்கிவிட்டது நீதிமன்றம்.
விருந்தாளிகள்
தென்னாப்பிரிக்காவின் 7-வது பெரிய பணக்காரர் என்றால் விருந்தாளிகள் பட்டியல் மட்டும் என்ன எப்ப சப்பையாக இருக்குமா என்ன..? உத்தராகண்ட் மாநிலத்தின் முதல்வர் தொடங்கி பாலிவுட் நடிகர் நடிகைகள், சக பணக்காரர்கள், வியாபாரிகள், பிரபலங்கள், யோகா குரு ராம் தேவ் வரை பலரும் ஆஜராகி இருந்தனர். வந்திருந்த அனைவருக்கும் ஒரு மணி நேர இலவச யோகா வகுப்பு வேறு எடுத்திருக்கிறார் பாபா ராம் தேவ்.
எல்லாம் எனக்கு தான்
பெரிய வீட்டு கல்யாணம் என்றால் அலப்பறைகள் இல்லாமலா..? ஆலி பகுதியைச் சுற்றி உள்ள அனைத்து ஹோட்டல்கள், ரிசார்ட்கள் என அனைத்தையும் ஒற்றை செக்கில் புக் செய்து விலை பேசி இருக்கிறார்கள். அடுத்த சில மணி நேரங்களில் வாடிப் போகும் மலர்கள் தானே என அலட்சியம் செய்யாமல் ஸ்விட்சர்லாந்திலிருந்து மலர்களை இறக்குமதி செய்திருக்கிறார்கள். இதெல்லாம் படிக்க பிரமாதமாக இருந்தாலும் கடைசியில் முகம் சுழிக்கும் விதத்தில் ஒரு 4000 கிலோ குப்பைகளையும் அங்கேயே விட்டுச் சென்றிருக்கிறார்கள் என் ஆர் ஐ பணக்காரர்களான குப்தாக்கள்.
வெறும் 20 பேர்
அந்தத் திருமண நிகழ்வில் உற்பத்தியான குப்பைகளை அப்புறப்படுத்த முடியாமல் விழிபிதுங்கி நிற்கிறது அந்த நகராட்சி நிர்வாகம். அதைச் சுத்தம் செய்யும் பணியில் 20 பேரைக் கொண்ட குழு ஈடுபட்டிருக்கிறதாம். இவ்வளவு செலவு செய்தவர்கள் அதில் உற்பத்தியான டன் கணக்கிலான குப்பைகளைச் சுத்தம் செய்ய சரியாக திட்டமிடவில்லை என கோபிக்கிறார்கள் மக்கள். தற்போது ஆலி நகராட்சி வெறும் 20 பேரை நியமித்து இந்த டன் கணக்கிலான குப்பைகளை சுத்தம் செய்து கொண்டிருக்கிறார்களாம்..! இந்த இடத்தில் தான் ஆலி கிராம மக்கள், தங்கள் ஆடு மாடுகளை மேய்ச்சலுக்கு விடுவார்களாம். அந்த நிலமே இப்போது ஒரே குப்பையாக இருந்தால் எப்படி பொறுத்துக் கொள்வார்கள்.
உயர் நீதிமன்றம்
தற்போது உத்தராகண்ட் உயர் நீதிமன்றமே இந்த பிரச்னையில் தலையிட்டிருக்கிறது. மாவட்ட நிர்வாகம் மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம், இந்த குப்தாக்கள் திருமணம் நடத்திய இடத்தில் உண்டான கழிவுப் பொருட்களால் ஏற்பட்ட சூழலியல் பிரச்னை குறித்து கேட்டிருக்கிறார்களாம். இந்த வழக்கு வரும் ஜூலை 8-ம் தேதிக்கு விசாரணைக்கு வருகிறதாம். குப்தா குடும்பமோ "குப்பைகளைச் சுத்தம் செய்ய ஆகும் செலவை நாங்கள் முழுமையாக ஏற்றுக் கொள்கிறோம். அதோடு ஆலி நகராட்சிக்கு ஒரு வாகனத்தையும் தருகிறோம்"எனச் சொல்லி இருக்கிறார்களாம்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications