டெல்லி : மோடி 2.0 ஆட்சியில் எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளும் அதிரடியாகவே இருந்து வருகிறது. இந்த நிலையில் புதிய நிதியமைச்சராக பதவியேற்றதிலிருந்தே ஒரே அதிரடியான நடவடிக்கைகளை எடுக்கும் நிர்மலா சீத்தாராமன் தற்போது மீண்டும் ஒரு கறுப்பு பண முதலைகளுக்கு தூண்டில் போட்டுள்ளார்.
ஆமாங்க.. கணக்கில் வராத கறுப்பு பணத்தின் மூலம் வெளி நாடுகளில் சொத்து சேர்த்ததாக, வருமான வரித்துறையின் சார்பில் 380 வழக்குகள் சம்பந்தபட்டோருக்கு நோட்டீஸ் அனுப்பட்டுள்ளதாகவும் நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கூறியுள்ளார்.
மோடி அரசு ஏற்கனவே கறுப்பு பண முதலைகளை பிடிக்க நடவடிக்கை எடுத்து வரும் இந்த நிலையில், இந்த அதிரடியான நடவடிக்கை பலருக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
வெளிநாட்டு கறுப்பு பண சட்டம்
இவ்வாறு கணக்கில் காட்டப்படாத 12,260 கோடி ரூபாய் சொத்துகள் மீதான 380 பேருக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகவும் , அதோடு வெளிநாட்டு கறுப்பு பண சட்டத்தின் கீழ் தான் (under the foreign black money act) இந்த நோட்டீஸ் அனுப்பபட்டுள்ளதாகவும் நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கூறியுள்ளார்.
மக்களவையில் பதில்
இது குறித்து முன்னர் மக்களவையில் கேள்வி எழுப்பப்பட்ட போது, இது வரை 68 வழக்குகள் தொடரப்பட்டுள்ளதாகவே கூறியிருந்தார். ஆனால் இந்த கறுப்பு பணம் (வெளியிடப்படாத வெளி நாட்டு வருமானம் மற்றும் சொத்துக்கள்) மற்றும் வரிச் சட்டம் 2015 கீழ் வருமான வரித்துறை மேற்கொண்ட நடவடிக்கையின் படி, கடந்த ஏப்ரல் 30, 2019 நிலவரப்படி, 380க்கும் மேற்பட்ட வழக்குகளின் மூலம், வெளியிடப்படாத சொத்துக்கள் மற்றும் வருமானம் 12,260 கோடிக்கு மேல் என்றும் நிதியமைச்சர் கூறியுள்ளார்.
இந்த நோட்டீஸ் யாருக்கெல்லாம்?
இவ்வாறு வருமான வரித்துறை மூலமாக அனுப்பட்ட நோட்டீஸ்கள், தேடல்கள், கணகெடுப்புகள், விசாரணைகள், வருமானத்தை மதிப்பீடு செய்தல், வரி வட்டி, அபராதம் வசூலித்தல் மற்றும் கறுப்பு பணம் வைத்திருப்போருக்கு எதிராக வழக்குத் தொடருதல் உள்ளிட்ட நடவடிக்கைகளின் அடிப்படையில் இந்த நோட்டீஸ் அனுப்பட்டுள்ளதாம்.
வருமானம் –வழக்கு
வருமான வரித்துறை வெளியிட்ட இந்த அறிக்கையின் படி, கடந்த 2018 - 2019ல் 983 குழுக்கள் இந்த தேடலில் ஈடுபட்டதாகவும், இதன் மூலம் 1,584 கோடி ரூபாயை வருமான வரித்துறை கைப்பற்றியுள்ளது என்றும் கூறியுள்ளார். இதுவே கடந்த 2017 - 2018ம் ஆண்டில் 582 வழக்குகள் மூலம் 993 கோடியை வருமான வரித்துறை கைப்பற்றியது என்றும் அறிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications