மும்பை : Jioவின் தனி சாம்ராஜ்யம் மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு பிரச்சனை தான். அதிலும் ஜியோ ஆரம்பித்ததிலிருந்தே மற்ற தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு கண்ட சனி ஆரம்பித்தது.
இந்த சனியில் தொலைந்து போன நிறுவனங்கள் ஏராளம். ஒரு புறம் பல தொலைத் தொடர்பு நிறுவனங்கள் கடையை சாத்திவிட்டு வேறு வேலை பார்க்க சென்று விட்டன. மறுபுறம் தப்பி தவறி ஏதோ ஒன்றிரண்டு நிறுவனகளே இருக்கின்றன.
இந்த நிலையில் இருக்கும் சில நிறுவனங்களும் ஜியோ நிறுவனத்துடன் போட்டி போட முடியாமல் தவித்து வருகின்றன. நாளுக்கு நாள் கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக ஆகி வருகின்றன.
வாடிக்கையாளர்கள் அதிகரிப்பு!
இந்தியாவின் தொலைத் தொடர்பு ஒழுங்கு ஆணையமான டிராய் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஏப்ரல் மாதத்தில் மொபைல் போன் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 4,90,000 ஆக அதிகரித்து, மொபைல் சந்தாதாரர்களின் எண்ணிக்கை 1.16 பில்லியனாகவும் அதிகரித்துள்ளதாக வெளியிட்டுள்ளது.
அம்பானி தான் டாப்!
இவ்வாறு அதிகரித்த சந்தாதாரர்களில் ரிலையன்ஸ் முகேஷ் அம்பானிக்கு சொந்தமான ஜியோ நிறுவனத்திற்கே அதிகளவு சேர்ந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அட ஆமாங்க.. கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் ஜியோ நிறுவனம் எட்டு மில்லியன் புதிய வாடிக்கையாளர்கள் இணைந்துள்ளதாகவும், இதோடு சேர்ந்து மொத்த 314.8 மில்லியன் வாடிக்கையாளர்கள் இணைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
வீழ்ச்சி கண்ட ஏர்டெல்?
ஒரு புறம் ஜியோ தனது ஆதிக்கத்தை வலுவாக நிலை நாட்டிக் கொண்டே செல்லும் நிலையில், மறுபுறம் ஜியோவின் போட்டியை சமாளிக்க முடியாமல் தவித்து வருகிறது ஏர்டெல். ஜியோ எட்டு மில்லியன் பயனர்கள் அதிகரித்துள்ளது. அதே சமயம் ஏர்டெல் 3.3 மில்லியன் இழந்துள்ளது பார்தி ஏர்டெல். ஆமாங்க.. 3.3 மில்லியன் வாடிக்கையாளர்களை இழந்து மொத்த சந்தாரர்களை 321.9 மில்லியனாக கொண்டுள்ளது. முன்னர் இதன் மொத்த பயனர் என்ணிக்கை 393.3 மில்லியனாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
பி.எஸ்.என்.எல்லுக்கு புதிய வாடிக்கையாளர்கள்!
மத்திய அரசுக்கு சொந்தமான பி.எஸ்.என்.எல் நிறுவனம் பெரிய அளவில் வளர்ச்சி காணாவிட்டாலும், 0.2 மில்லியன் புதிய சந்தாதாரர்களை இணைத்துள்ளதுதாகவும், அதோடு சேர்த்து மொத்தம் பி.எஸ்.என்.எல்லுக்கு 115.9 மில்லியன் வாடிக்கையாளர்கள் உள்ளனர் என்றும் கூறியுள்ளது.
எவ்வளவு இணைப்புகள் செயல்பாட்டில் உள்ளன?
கடந்த ஏப்ரல் மாதத்தோடு சேர்ந்து மொத்தம் செயல்பாட்டில் உள்ள மொபைல் சந்தாதாரர்களின் என்ணிக்கை 999.7 மில்லியன்களாகும். இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவெனில் கடந்த ஏப்ரல் 30ம் தேதி நிலவரப்படி மொபைல் இணைப்புகள் அல்லது வயர்லஸ் சந்தாதாரர்களின் என்ணிக்கை 100க்கு 88.42 ஆக உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
நகர்புறங்களில் டெலி அடர்த்தி அதிகம்!
இந்தியாவில் கிராமப்புறங்களை விட நகர்ப்புறங்களில் மொபைல் போன் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாகவும், கிராமப்புறங்களில் குறைவாகவே உள்ளதாகவும் டிராய் வெளியிட்டுள்ளது. நகர்புறங்களில் கடந்த மார்ச் மாதத்தில் 650.49 மில்லியனாக இருந்த வயர்லெஸ் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை, கடந்த ஏப்ரல் மாதத்தில் 652.35 மில்லியனாக அதிகரித்துள்ளதாம்.
கிராமப்புறங்களில் பயன்பாடு குறைந்தது
ஒரு புறம் நகர்புறங்களில் மொபைல் வாடிக்கையாளர் சேவையாகட்டும், வயர்லெஸ் சேவையாகட்டும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. ஆனால் மறுபுறம் கிராமப்புறங்களில் இதற்கு எதிராகவே உள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் 511.32 மில்லியனாக இருந்த வயர்லெஸ் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை, கடந்த ஏப்ரல் மாதத்தில் 509.95 மில்லியனாக குறைந்துள்ளது எனவும் டிராய் கூறியுள்ளது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!



Click it and Unblock the Notifications