எங்களயா பகச்சுகிறீங்க.. அடிச்சு தூள் கிளப்பிடுவோம்.. இது அமெரிக்காடா.. எச்சரிக்கும் Trump!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வாஷிங்டன் : எப்படியும் தினசரி ஒரு அதிரடியாக பேட்டியோ அல்லது ஒரு ட்விட்டரிலோ தராவிடில், அதிலும் மத்தவங்களுக்கு பீதிய கிளப்பலன்னா தூக்கம் வராது போல நம்ம அமெரிக்கா ஜனாதிபதி டிரம்புக்கு? அதிலும் ஈரானிடம் சண்டையிடுவதில் அலாதி பிரியம் என்றே கூறலாம். பாவம் ஈரானுக்கு அணு ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகியதிலிருந்தே ஏழரைச் சனி ஸ்டார்ட் ஆகிடுச்சு போல.

ஒரு புறம் என்னதான் அமெரிக்காவுடன் மல்லுகட்டிக் கொண்டு நின்றாலும், மறுபுறம் ஈரானின் பொருளாதாரத்தை சீர்குலைக்கும் நடவடிக்கையிலும் அமெரிக்கா ஈடுபட்டுக் கொண்டே இருக்கிறது. இதனால் ஈரான் சற்று ஆட்டம் கண்டுள்ளது என்றே கூறலாம்.

அதிலும் ஈரானுக்கு முக்கிய வருமான வாய்ப்பாக இருந்த எண்ணெய் ஏற்றுமதியிலேயே கைவைத்தது அமெரிக்கா. ஒரு புறம் தான் மட்டும் அல்ல, மற்ற நாடுகளும் ஈரானிடம் இருந்து எண்ணெய் வாங்க கூடாது என்றும் கூறியது.

அமெரிக்காவை எதிர்க்க முடியாதே?

அமெரிக்காவை எதிர்க்க முடியாதே?

என்னதான் வலுவாக இருந்தாலும், இந்தியா போன்றதொரு வளர்ந்து வரும் நாடுகள் அமெரிக்காவை பகைத்துக் கொள்ள விரும்பவில்லை. ஆக ஈரானை பகைத்துக் கொண்டன. இதனால் இந்திய உள்ளிட்ட பல நாடுகள் ஈரானிடம் எண்ணெய் வாங்குவதை தவிர்த்து விட்டன. இந்த நிலையில் மலையாய் நம்பியிருந்த பொருளாதாரம் சரிய தொடங்கியதும் ஈரான் தற்போது ஆட்டம் காண தொடங்கியுள்ளது.

பல்வேறு நடவடிக்கை?

பல்வேறு நடவடிக்கை?

எப்படியாவது ஈரானையும் தன் கைக்குள் வைத்துக் கொள்ள வேண்டும் என்று அமெரிக்கா கங்கனம் கட்டுக் கொண்டு அலைய, மறுபுறம் நீ சொல்லி நான் கேட்பதா? என ஈரான் திமிறிக் கொண்டு நின்றது. அப்படியா என்னயே எதிர்க்கிறாயா? என்று அமெரிக்கா தொடர்ந்து ஈரான் மீது பிரச்சனைகளின் அழுத்தத்தை அதிகரித்துக் கொண்டே போகிறது அமெரிக்கா.

பொருளாதார தடை?
 

பொருளாதார தடை?

ஈரான் ஒரு புறம் கிளர்ச்சியாளர்காளுக்கு மறைமுகமாக நிதியுதவி செய்வதாகவும், அதிலும் ஈரானில் உள்ள முக்கிய எண்ணெய் நிறுவனங்கள் மூலம் உதவியதாகவும் கருதியது. இந்த நிலையில் அணு ஒப்பந்தமும் ரத்தாகவே, ஈரான் மீது பொருளாதார தடையை விதித்தது அமெரிக்கா. அதோடு பிரச்சனை முடிந்த பாடில்லை, இன்னும் மோசமான நிலைக்கே போய்க் கொண்டிருக்கிறது. அதிலும் தற்போது இரு நாடுகளுக்கு இடையே போர் மூலும் அபாயத்தில் உள்ளது.

இரண்டாவது முறை பொரூளாதார தடை?

இரண்டாவது முறை பொரூளாதார தடை?

ஏற்கனவே ஒரு முறை பொருளாதார தடைக்கே ஆட்டம் காணத் தொடங்கியுள்ள ஈரானுக்கு தற்போது இரண்டாவது முறையாக கடுமையான பொருளாதார தடைகளை அமெரிக்கா விதித்துள்ளது. அதோடு ஈரானிய தலைவர் மற்றும் அதிகாரிகள் அமெரிக்காவில் நிதி பரிவர்த்தனை செய்யவும் தடை விதிக்கப்பட்டது. இதற்கான கோப்புகளிலும் டிரம்ப் கையெழுத்து இட்டுள்ளாராம்.

ஏதற்கு இந்த தடை?

ஏதற்கு இந்த தடை?

ஏற்கனவே இரு நாடுகளுக்கும் இடையில் தீ கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருன்டஹ் நிலையில், ஈரான் வான் எல்லையில் பறந்து கொண்டிருந்த அமெரிக்க உளவு விமானத்தை ஈரான், கடந்த சில தினங்களுக்கு முன்பு சுட்டு வீழ்த்தியது. இதனால் கடும் கோபமடைந்த அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஈரான் மீது தாக்குதல் நடத்த உத்தரவிட்டார். இந்த நிலையில் கடைசி நிமிடத்தில் அந்த தாக்குதலில் இருந்து தப்பியது ஈரான். எப்படியோ மனம் மாறிய டிரம்ப் அதை கடைசி நிமிடத்தில் நிறுத்தினார்.

அடுத்து என்ன செய்யலாம்?

அடுத்து என்ன செய்யலாம்?

தாக்குதலை நிறுத்தினாலும் டிரம்பின் மனம் இன்னும் மாறவில்லை. எப்படியேனும் ஈரானுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்று, சில தினங்களுக்கு முன்பு ஈரானின் பாதுகாப்பு படையில் உள்ள கம்யூட்டர்களை சைபர் அட்டாக் மூலம் தாக்குதல் நடத்தியதில் அனைத்து கம்ப்யூட்டர்களும் செயலிழந்ததாக கருதப்பட்டது. இந்த நிலையில் இது போதாது என்றுதான், இந்த இரண்டாவது பொருளாதார தடையினையும் விதித்துள்ளது அமெரிகக. .

ஈரானை அணு ஆயுதங்கள் வைத்திருக்க விடமாட்டோம்?

ஈரானை அணு ஆயுதங்கள் வைத்திருக்க விடமாட்டோம்?

இது குறித்து தனது ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், ஈரான் உள்பட எந்த நாட்டுடனும் நாங்கள் மோதலை விரும்பவில்லை. எனினும் ஈரான் ஒருபோதும் அணு ஆயுதம் வைத்திருக்க நாங்கள் விடமாட்டோம் என்பதை மட்டும் என்னால் கூற முடியும் என்று கூறியுள்ளாராம்.

டிரம்ப் மீது கடுப்பு

டிரம்ப் மீது கடுப்பு

ஒரு புறம் இந்த இரு நாடுகளும் நீயானா நானா என அடித்துக் கொண்டிருக்க, இதனால் அதிகம் பாதிக்கப்படுவது ஈரானிய மக்களே. ஒரு புறம் அடிப்படை ஆதாரங்களுக்கே கஷ்டப்படும் நிலை, மறுபுறம் இனி என்ன செய்ய போகிறோம் என்ற கவலை. அதோடு அமெரிக்க அதிபர் டிரம்ப் மீது மிகுந்த கடுப்பிலும் உள்ளனராம். மேலும் அமெரிக்க அதிபர் பிரச்சனை நீடித்தால் போர் தொடுக்கவும் தயாங்க மாட்டோம் என்று கூறியிருப்பது கவலை அளிப்பதாகவும் கூறுகின்றனராம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Now Iran is in a very dangerous economic position

Now Iran is in a very dangerous economic position
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X