டெல்லி: வங்கிகளில் கடனை வாங்கிவிட்டு, திருப்பிக் கொடுக்க போதுமான பணம் கையில் இருந்தும், எனக்கு பிசினஸ் வந்தால் தான் வங்கிக்கு பணம் கொடுப்பேன் என வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தாமல் இருப்பவர்களுக்குப் பெயர் தான் Wilful Defaulters எனச் சொல்வார்கள்.
இப்படி இந்தியாவில் பொதுத் துறை வங்கிகளில் Wilful Defaulters-களாக பட்டியலிடப்பட்டிருப்பவர்களின் எண்ணிக்கை கடந்த மார்ச் 2019 நிலவரப்படி 8,582 பேராக அதிகரித்திருக்கிறார்களாம்.
கடந்த 2014 - 15 ஆண்டுகளில் இந்தியாவின் பொதுத் துறை வங்கிகளில் Wilful Defaulters-களாக இருந்தவர்களின் எண்ணிக்கை 5,349.
60% அதிகரிப்பு
ஆக கடந்த ஐந்து வருடங்களில் இந்த Wilful Defaulters-களின் எண்ணிக்கை 60 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது என நிர்மலா சீதாராமன் எழுத்துப் பூர்வமாக மக்களவையில் பதிலளித்திருக்கிறார். அதோடு ஒவ்வொரு ஆண்டும் எப்படி Wilful Defaulters-களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. ஒவ்வொரு நிதி ஆண்டிலும் அரசால் அறிவிக்கப்பட்ட Wilful Defaulters-களின் எண்னிக்கை என்ன என்பதையும் சொல்லி இருக்கிறார்.
எண்ணிக்கை
2014 - 15-ம் ஆண்டில் இருந்து ஒரே அடியாக 60 சதவிகிதம் அளவுக்கு அதிகரிக்கவில்லை. 2014 - 15-ல் 5,349 பேரில் இருந்து 2015 - 16ம் ஆண்டில் 6,575 பேராகவும், 2016 - 17ம் ஆண்டில் 7,079 பேராகவும், 2017 - 18-ம் ஆண்டில் 7,535 பேராகவும் அதிகரித்திருக்கிறார்களாம். ஆக கடந்த ஐந்து ஆண்டிலும் நிலையாக Wilful Defaulters-களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது என விளக்கமாகவே பதில் கொடுத்திருக்கிறார்.
வங்கி நடவடிக்கை
"தற்போது ஆர்பிஐ சட்டப்படி ஒருவர் Wilful Defaulter-ஆக அறிவிக்கப்பட்டால் எந்த நிதி நிறுவனமும் மேற் கொண்டு கடன் கொடுக்காது. எந்த புதிய பிசினஸையும் தொடங்க முடியாது. பங்கு சந்தைகளிலும் ஈடுபட முடியாது. தன் சொத்துக்களை விற்று வங்கி கடனை எடுத்து கொள்ளச் சொல்லும் Insolvency and Bankruptcy சட்டப்படியான நடவடிக்கைகளில் ஈடுபட முடியாது, வெளிநாட்டுக்கு ஓடினால், Fugitive Economic Offenders Act 2018-ன்படி அவர்களின் சொத்துக்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்படும்" என்பதையும் சொல்லி இருக்கிறார். அதோடு கடந்த ஐந்து ஆண்டுகளில் 7,654 கோடி ரூபாய் கடன் தொகையை இந்த Wilful Defaulters-களிடம் இருந்து பொதுத் துறை வங்கிகள் வசூலித்திருப்பதையும் மக்களவையில் சொல்லி இருக்கிறார்.
கடன் மீட்பு நடவடிக்கை
Wilful Defaulters-களுக்கு எதிராக சுமார் 8,120 வழக்குகள் தொடுக்கப்பட்டிருக்கின்றனவாம். அதே போல சொத்துக்களை பிணையாகக் கொடுத்திருக்கும் கடன்களுக்கு SARFAESI சட்டம் மூலம் சொத்துக்களை விற்று கடன் தொகையை மீட்க நடவடிக்கை எடுத்து வருகிறார்களாம். 2,915 பேர் மீது முதல் தகவல் அறிக்கையே தாக்கல் செய்துவிட்டார்களாம். இதை எல்லாம் விட முக்கியமாக 50 கோடி ரூபாய்க்கு மேல் கடன் வாங்கும் நிறுவனத்தின் புரொமோட்டர்கள் wilful defaulter-களானால் அவர்களின் புகைப்படங்களோடு Wilful defaulter-களின் பட்டியலை வெளியிடவும் அனுமதி கொடுத்திருக்கிறார்களாம்.
பாராட்டுக்கள்
Wilful defaulter எண்ணிக்கை அதிகரித்தால், பாஜக அரசில் தான் நிறைய பேர் கடன் வாங்கி ஏமாற்றிவிட்டார்கள் என பொருள் கொள்ள முடியவில்லை. காரணம் 2013-க்குப் பிறகு தான் ரகுராம் ராஜன் ஆர்பிஐ ஆளுநராக பொறுப்புக்கு வந்து வாராக் கடன்களை விரட்டி விரட்டி வசூலிக்கச் சொன்னார். ஆகையால் இப்போது தான் கடனை வேண்டும் என்றே திருப்பிச் செலுத்தாதவர்கள் பெயர்கள் வெளியே வரத் தொடங்கி இருக்கிறது. அந்த விதத்தில் பொதுத் துறை வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு வேண்டும் என்றே செலுத்தாதவர்கள் மீது கடுமை காட்டும் பாஜக அரசை நிச்சயம் பாராட்ட வேண்டும்.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!



Click it and Unblock the Notifications