சென்னை : தகவல் தொழில் நுட்ப துறையில் முன்னணி நிறுவனமான காக்னிசண்ட் நிறுவனம் இந்தியாவுக்கு செலுத்த வேண்டிய டிவிடெண்ட் டிஸ்ரிபூயூசன் டேக்ஸான ரூ.2,912.25 கோடியை கட்டாமல் இழுத்து வரும் நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்திலும் இதற்கெதிராக முன்னரே வழக்கு தொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. .
தகவல் தொழில்நுட்ப ஜாம்பவனாக விளங்கும் காக்னிசண்ட் டெக்னாலஜி சொல்யூசன்ஸ் ( Cognizant Technology Solutions ) நிறுவனம் அமெரிக்கா மற்றும் மொரிசியஸ் நாடுகளில் வசிக்கும், இந்தியர்களிடம் 94 லட்சம் பங்குகளை விற்பனை செய்திருந்தது.
இந்த நிலையில் இந்த பங்குகளை கடந்த மே 2016ம் ஆண்டு காக்னிசண்ட் நிறுவனம் திரும்ப பங்குதாரர்களிடம் இருந்து மீண்டும் வாங்கியது.
15% வரிய கட்டு?
இவ்வாறு திரும்ப வாங்கப்பட்ட 94,00,543 பங்குகளின் மதிப்பு 19,415 கோடி ரூபாய் பணத்தையும் எனவும், அதை சம்பந்தப்பட்ட பங்குதாரர்களுக்கு வழங்கியது எனவும் கூறப்பட்டுள்ளது. எனினும் இவ்வாறு திரும்ப செலுத்தப்பட்ட இந்த தொகைக்கு 15 சதவிகித வரியை செலுத்த வேண்டும் என்று வருமான வரித்துறை காக்னிசண்ட் நிறுவனத்திற்கு முன்னரே நோட்டீஸ் அனுப்பியது குறிப்பிடத்தக்கது.
வரிய கட்ட முடியாது?
இந்த நிலையில், வருமான வரித்துறை கூறியபடி, 2,912.25 கோடி ரூபாய் தொகையை வருமான வரித்துறைக்கு செலுத்த முடியாது என்றும், அதோடு இந்த வருமான வரி நோட்டீசை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் காக்னிசண்ட் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.
சம்பந்தபட்ட துறையிலேயே கேளுங்கள்?
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதி மன்ற நீதிபதி கல்யாணசுந்தரம், வருமான வரித்துறை நோட்டீசை எதிர்த்து முறையீடு செய்ய வேண்டுமெனில், சம்பந்தப்பட்ட துறையிலேயே பல்வேறு வாய்ப்புகள் இருக்கின்றன. அதைவிட்டு ஏன் நேரடியாக உயர்நீதிமன்றத்தை அணுக வேண்டும் என்று காக்ணிசன்ட்டை கண்டித்தும், அதோடு வழக்கையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளராம் நீதிபதி கல்யாண சுந்தரம்.
வரி கட்டியாச்சு?
இது குறித்து கருத்து கூறியுள்ள காக்ணிசன்ட், தனது குடியேற்ற பங்குதாரர்களுக்கு அனுப்பிய 19,415 கோடி ரூபாய்க்கு, மூலதன ஆதாய வரியாக வரி விலக்கு போக 898.01 கோடி ரூபாய் ஏற்கனவே வரி செலுத்தியதாக கூறியுள்ளது. இந்த நிலையில் ஒரு புறம் வருமான வரித்துறை வரி கட்ட வேண்டும் என்று கூறுவதும், மறுபுறம் வரியை கட்ட முடியாது என்று கூறுவதும், இனி என்ன நடக்குமோ என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஏற்கனவே ஒரு புறம் அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் புகைந்து கொண்டிருக்கும் நிலையில் இந்து மாதிரியான பிரச்சனைகள் இன்னும் இதை அதிகரிப்பதாகவே இருக்கிறது என்கிறார்கள் நிபுனர்கள்.
More From GoodReturns

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

GPay யூஸ் பண்றீங்களா? PocketMoney ஐகான் கிளிக் பண்ணா மொத்த பணமும் போய்டுமா?வைரலாகும் வாட்ஸ்அப் ஆடியோ



Click it and Unblock the Notifications