சபாஷ் சாணக்கியா.. Bellatriz aerospaceல் முதலீடு செய்யும் பிரபலங்கள்.. கலக்கும் இந்தியர்கள்!

டெல்லி : இந்தியாவைச் சேர்ந்த தனியார் ஸ்டார்டப் நிறுவனமான Bellatrix Aerospaceல் சில நிறுவனங்களும், பாலிவுட் சூப்பர் ஸ்டாரான தீபிகா படுகோனும் கிட்டதட்ட 3 மில்லியன் டாலர்களை முதலீடு செய்துள்ளனராம்.

இந்த ஸ்டார்டப் நிறுவனம், நானோ செயற்கைகோள்களுக்கான ஒரு துவக்கியையும், செயற்கைக் கோள்களுக்கான மின்சார உந்துவிசையும் உருவாக்கியுள்ளது.

அதோடு தற்போது திரப்பட்டுள்ள இந்த நிதியினை வைத்து இன்னும் சிறப்பாக விண்வெளிப் பயணத்திற்கான சிறப்பான பொருட்களை உருவாக்க முடியும் என்றும் இந்த நிறுவனம் கூறியுள்ளது.

உலக அளவில் விரிவு படுத்துவோம்!

உலக அளவில் விரிவு படுத்துவோம்!

அதோடு அடுத்து வரும் மாதங்களில், நாங்கள் எங்களது உந்துதலை (thrusters) கடுமையான சோதனைக்கு உள்ளாக்குவோம் என்றும், மேலும் எங்களது உற்பத்தி பொருட்களை தனித்துவமாக்குவோம். ஆமாங்க.. கண்டுபிடிப்புகளை தனித்துவமாக்குவோம் என்றும் கூறியுள்ளது இந்த ஸ்டார்டப் நிறுவனம். அது மட்டுமல்ல எங்களது உற்பத்தியை உலகளாவிய அளவில் விரிவு படுத்துவோம் என்றும் இந்த ஸ்டார்டப் நிறுவனத்தின் இணை நிறுவனர் ரோஹன் கணபதி கூறியுள்ளார்.

நானோ செயற்கைகோள்களுக்கான ஏவுகணை துவக்கிகளை உருவாக்கம்

நானோ செயற்கைகோள்களுக்கான ஏவுகணை துவக்கிகளை உருவாக்கம்

பெல்லாட்ரிக்ஸ் முதன் முதலில் அதன் மின்சார உந்துதலை செயற்கைக் கோள்களுக்காக உருவாக்கியது. இது வழக்கமான ரசாயன உந்துதல்களை விட அதிக எடை சேமிப்பை வழங்குகிறது. அதோடு மேலும் நீண்ட ஆயுளையும் கொண்டுள்ளது. தற்போது இந்த ஸ்டாரப் நிறுவனம் நானோ செயற்கைகோள்களுக்கான ஏவுகணை துவக்கிகளை உருவாக்கத்தில் இறங்கியுள்ளது.

பலரும் முதலீடு!

பலரும் முதலீடு!

கடந்த 2016ல் தொடங்கப்பட்ட இந்த ஸ்டார்டப் நிறுவனமானது, இஸ்ரோவுடன் இணைந்தும் செயல்பட்டுள்ளது. இஸ்ரோவின் மின்சார செயற்கைக் கோள் உந்துதலுக்காகம், இஸ்ரோவுடன் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது. இந்த ஸ்டார்டப்பில் தான் தற்போது IDFC-Parampara, StartupXseed தீபிகா படுகோன் உள்ளிட்டோரும் 3 பில்லியன் டாலர் முதலீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தனித்துவமான கண்டுபிடிப்புகள்!

தனித்துவமான கண்டுபிடிப்புகள்!

அதோடு பெல்லாட்ரிக்ஸ் ஒரு புதுமையான விண்வெளி தொழில்நுட்ப நிறுவனமாக உள்ளது. அதோடு தனித்துவமான தொழில்நுட்ப முதலீடுகளுடன் ஒத்திருக்கிறது. மேலும் இந்த நிறுவனத்தின் தனித்துவமான கண்டுபிடிப்புகளுக்கு, உலகளவில் மிகப்பெரிய வாய்ப்பும் உள்ளது என்றும் StartupXseed நிறுவனத்தின் நிர்வாக பங்குதாரான பி.வி நாயுடு கூறியுள்ளார்.

வணிக ரீதியான நிறுவனங்கள் அதிகம் இல்லை

வணிக ரீதியான நிறுவனங்கள் அதிகம் இல்லை

அதோடு பெல்லாட்ரிக்ஸ் ஸ்டார்டப் நிறுவனங்களில் ஒன்றாகும், இது வேகமாக வளர்ந்து வரும் உலகளாவிய சந்தையை கவனித்து வருகின்றன. இது சிறந்த தகவல் தொடர்பு, பூமி கண்காணிப்பு மற்றும் ஆராய்ச்சி உள்ளிட்ட தேவையால் இயக்கப்படுகிறது. இந்தியாவின் விண்வெளித்துறை இன்னும் அதிகளவில் வளரவில்லை. வணிகரீதியாக செயற்கை கோள்களை ஏவுவதற்கான சந்தையில் இந்தியாவின் ஒரே போட்டியாளராக இஸ்ரோ மட்டுமே உள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+