டெல்லி : ஒரு புறம் இந்தியர்களின் சில்லறை வர்த்தகத்தை முறியடித்து, தனது சாம்ராஜ்யத்தை நடத்திக் கொண்டிருக்கும் இ-காமர்ஸ் நிறுவனங்கள், சலுகை என்ற பெயரில் சிறு வணிகர்களின் வாழ்க்கையில் விளையாடிக் கொண்டிருக்கிறது.
அவர்களின் கதறலும் குமுறலும் தற்போது தான் இந்திய அரசிற்கு கேட்டிருக்கும் போல, அட ஆமாங்க.. நமது இந்திய அரசு இ- காமர்ஸ் நிறுவனங்களான அமேசான், வால்மார்ட் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதாம்.
முன்னரே இந்த இ-காமர்ஸ் நிறுவனங்களால் பெருத்த நஷ்டத்தில் இயங்கி வந்த இந்த சிறு குறு நிறுவனங்கள், பல கடையை சாத்திவிட்டு, அன்னிய நாடுகளிடம் கை கட்டி வேலை பார்க்க சென்று விட்டன. இதனாலேயே உள்ளூர் அண்ணாச்சி கடைகளுக்கு மவுசு குறைந்து விட்டது..
தள்ளுபடியால் முடங்கும் வர்த்தகர்கள்
ஒரு புறம் வாரி வழங்கும் தள்ளுபடியால் மக்கள் ஆன்லைன் வர்த்தகத்தையே விரும்புகின்றனர். இதனால் முடங்கி போவது உள்ளூர் வர்த்தகர்களே. இவ்வாறு அதிகரிக்கும் அன்னிய நேரடி முதலீட்டால் முடங்கிக் போன உள்ளுர் அண்ணாச்சி கடைகள் ஏராளம். ஆக இதை தடுக்கும் விதத்தில் அன்னிய முதலீடுகளுக்கான விதிகளை மாற்றியமைக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளதாம்.
பியூஷ் கோயல் கோரிக்கை?
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல், அன்னிய முதலீடுகளுக்கான விதிகளை அரசாங்கம் கேட்க தயாராக உள்ளது. அதோடு சிறு நிறுவனங்களையும், வியாபாரிகளையும் கொள்ளை அடிக்கும் வெளிநாட்டு நிதி மூலம் இயங்கும் நிறுவனங்களிடமிருந்து காக்க உறுதி கொண்டுள்ளதாகவும் அரசு வட்டாரத்தில் தெரிவிக்கப்படுகின்றனவாம்.
இன்னும் பிரச்சனை தீரல?
ஏற்கனவே கடந்த பிப்ரவரி 1 முதல் இ-காமர்ஸ் நிறுவனங்களுக்கான அன்னிய முதலீடுகளுக்கு புதிய விதிகளை அமல்படுத்தியது. பல ஆயிர கணக்கான சிறு வணிகர்களுக்கு உதவும் வகையிலேயே இந்த விதிகள் அமல்படுத்தப்பட்டன. ஆனால் இது வரை சிறு வியாபாரிகள், சில்லறை வர்த்தகர்களிடத்தில் இந்த பிரச்சனை தீர்ந்தவாறு இல்லை. அது நீடித்துக் கொண்டே தான் இருக்கிறது.
வலது சாரிக் குழு கருத்து!
இது குறித்து கருத்து கூறியுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு நெருக்கமான ஒரு வலதுசாரி குழு, சில்லறை வர்த்தகர்கள் பிரச்சனைகள் இன்னும் நீண்டு கொண்டே தான் இருக்கிறது. அதிலும் ஆன்லைன் சில்லறை விற்பனையாளர்கள் சிக்கலான வணிக கட்டமைப்பை பயன்படுத்துகிறார்கள் என்றும், அதோடு பல ஆஃபர்களை வழங்குவதற்காக லட்சக்கணக்கான டாலர்கலை வாரி இறைப்பதாகவும் இந்த குழு குற்றம் சாட்டுகிறது.
நாங்கள் எப்போதும் விதிகளை மீற மாட்டோம்?
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அமேசான், பிளிப்கார்ட் நாங்கள் அரசின் விதிகளை கடைபிடித்து தான் வருகிறோம், அதை ஒரு போதும் மீற வில்லை என்று கூறுகின்றன. அதோடு அரசின் புதிய விதிகளூக்கு அந்த சமயத்தில் போர்க் கொடிகளும் தூக்கினாலும், வியாபாரம் பாதிக்குமே என்று இந்த இரு நிறுவனங்களும் அமைதியாகிவிட்டனவாம். அதோடு அரசின் இந்த இ-காமர்ஸ் வணிக நிறுவனங்கள் கட்டாயம் இந்த தள்ளுபடி சலுகைகளை மாற்ற வேண்டும் என்றும் கூறியுள்ளனவாம்.
சில்லறை வர்த்தகர்களை பாதிக்கும் கொள்கைக்கு துணை போக மாட்டோம்?
இது குறித்து கடந்த திங்கட்கிழமையன்று நடந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பியூஸ் கோயல், இது குறித்து கூறியுள்ளதாவது, சிறு வர்த்தகர்களை வதைக்கும் கொள்கைகளுக்கு இந்திய அரசு ஒரு போதும் துணை போகாது என்றும், அதோடு இது போன்ற கொள்கைகளுக்கு ஒரு போதும் அரசு அனுமதிக்காது என்றும் கூறியுள்ளாராம்.
பிளிப்கார்ட் நேர்மறையான கருத்து.
கடந்த திங்கட்கிழமையன்று நடந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பிளிப்கார்ட் நிறுவனத்தின், தலைமை செயல் அதிகாரி கல்யாண் சுந்தரம், நாங்கள் அரசுடன் இணைந்தே பணியாற்ற விரும்புகிறோம் என்ற நேர்மறையான கருத்தையும் கூறியுள்ளாராம். அதோடு பல முற்போக்கான கருத்துக்களை கூறியுள்ளதாம் பிளிப்கார்ட் நிறுவனம்.
இந்தியாவின் கொள்கைகளை வரவேற்கும் அமேசான்
ஒரு புறம் பிளிப்கார்ட் பல நேர்மறையான கருத்துகளைக் கூறினாலும், மறுபுறம் அமேசான் நிறுவனம் இந்திய அரசின் திறந்த மற்றும் நேர்மையான கலந்துரையாடல்கள், தொடர்ச்சியான வர்த்தக ஈடுபாட்டின் முயற்சியை வரவேற்பதாகவும் கூறியுள்ளதாம். அதோடு இந்தியாவின் பல்வேறு முன்முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதாகவும் கூறியுள்ளதாம்.
சில்லறை வர்த்தகர்கள் வளர இது உதவும்?
கடந்த செவ்வாய்கிழமையன்று அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், இ-காமர்ஸில் அன்னிய நேரடி முதலீடு தொடர்பான பிரச்சனைகள் குறித்த குறைகளை கேட்க ஒரு குழுவைக் அமைத்துள்ளதாகவும், இது சில்லறை விற்பனையாளர்கள் நாட்டில் செழித்து வளர உதவும் என்றும் கூறியுள்ளதாம். நல்லது நடந்தால் சரியே.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications