புளூம்பெர்க்: சீனாவில் உள்ள பிற வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் தங்களின் தொழில்களை நடத்த முன்வந்தால், வரிச் சலுகை மற்றும் வரி விடுமுறை என வெளிநாட்டு நிறுவனங்கள் விரும்பும் அனைத்துவிதமான சலுகைகளும் வழங்கப்படும் என்று வர்த்தக அமைச்சகம் அழைப்பு விடுத்துள்ளது.
அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு இடையில் ஏற்பட்டுள்ள வர்த்தப் போர் தீவிரிமடைந்துள்ள வேளையில், இதன் பயனை அறுவடை செய்ய விரும்பிய இந்தியா நடுவில் புகுந்து, எங்கள் நாட்டில் தொழில் தொடங்க வருமாறு, மலேசியா வியட்நாம் போன்ற நாடுகளுக்கு தூண்டில் போட்டுள்ளது.
இந்தியாவின் இந்த சித்து வேலை வெற்றி பெற்றால், மோடி நினைப்பதுபோல் மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலம் உற்பத்தித் துறையின் வளர்ச்சி மேலும் 25 சதவிகிதம் வரை அதிகரித்து பொருளாதார வளர்ச்சியும் வரும் 2020ஆம் ஆண்டில் எதிர்பார்த்த இலக்கை எட்டக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவுக்கு பொருந்தும்
ஊர் ரெண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்று சொல்வதுண்டு. இது யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ இந்தியாவுக்கு நிச்சயமாகப் பொருந்தும். உலக வல்லரசு நாடுகளான அமெரிக்கா மற்றும் சீனா நாடுகளுக்கு இடையில் கடந்த சில மாதங்களாக நடந்து வரும் வர்த்தகப்போர் அடுத்த கட்டத்தை எட்டி தொழில்நுட்பப் போராக உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதை இந்தியா தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ளப் பார்க்கிறது.
சீனாவுக்கு நெருக்கடி
சீனாவுடன் மேற்கொண்டுள்ள ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகத்தால் ஏற்பட்ட பற்றாக்குறையை குறைக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கிய அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான இறக்குமதி வரியை குறைக்க வேண்டும் என்று சீன அதிபரை நிர்பந்தம் செய்யத் தொடங்கினார்.
ட்ரம்ப்பின் கோபம்
அமெரிக்காவின் நிர்பந்தத்திற்கு மசியாமல் சீனா எப்போதும் போல், தொடர்ந்து அமெரிக்க பொருட்களுக்கு கூடுதல் இறக்குமதி வரி விதிப்பை தொடர்ந்து. இதனால் ஆத்திரமடைந்த ட்ரம்ப் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சுமார் 14 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்களுக்கு சுமார் 4.23 லட்சம் கோடி ரூபாய் இறக்குமதி வரி விதிப்பதாக உத்தரவிட்டார். இதைப் பொறுக்காத சீனாவும் பதிலுக்கு அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு மேலும் கூடுதல் வரி விதித்து ட்ரம்ப்புக்கு மேலும் ஆத்திரத்தை கூட்டியது
ஹூவாவேக்கு தடை
சீனாவின் இந்த நடவடிக்கையால் மேலும் ஆத்திரமடைந்த ட்ரம்ப், சீனாவின் தகவல் தொடர்பு சாதன நிறுவனமான ஹூவாவே உட்பட 70 நிறுவனங்களுக்கு அமெரிக்காவில் தடைவிதித்து உத்தரவிட்டார். இதைப்பார்த்த சீனா மின்னணு சாதன உற்பத்திக்க தேவைப்படும் அரிய வகை உலோக ஏற்றுமதிக்கு கட்டுப்பாடு விதித்தது. இப்படி இரு நாடுகளும் மாறி மாறி போட்டி போட்டு வர்த்தகப்போரை உக்கிரமாக்கிக் கொண்டுள்ளன.
சினாவிலிருந்து வெளியேறிவிடுங்கள்
அடுத்ததாக, அமெரிக்கா சீனாவில் உள்ள பிற வெளிநாட்டு நிறுவனங்களுக்கு மறைமுகமாக மிரட்டல் விடுத்து வருகின்றது. சீனாவில் உள்ள பிற நாடுகளின் கிளைகள் மற்ற நாடுகளுக்கு மாற்றிவிடுவது அந்தந்த நிறுவனங்களின் எதிர்கால வளர்ச்சிக்கு நல்லது என்று ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்து பயத்தை ஏற்படுத்தினார். இது மற்ற நாடுகளுக்கு சற்று கிலியை ஏற்படுத்தத் தொடங்கியது.
அதிர்ஷ்டக்காற்று இந்தியாவின் பக்கம்
இப்படி அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு இடையில் நடைபெறும் வர்த்தக சண்டையில் இடையில் நுழைந்து இந்தியா சந்தடி சாக்கில் அறுவடை செய்யத் தொடங்கியுள்ளது எனலாம். இதற்கு காரணமும் உள்ளது. ஆயத்த ஆடைகள் தயாரிப்பு மற்றும் ஏற்றமதியில் சீனாவுக்கு அடுத்து இந்தியா தான் அதிக வளங்களைப் பெற்றுள்ளது. இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி இந்தியா அதிக அளவிலான ஏற்றுமதி ஆர்டர்களை பெற்று அனைத்து நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்வதற்கு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.
வரிச்சலுகை, வரி விடுமுறை
அடுத்ததாக இந்தியா, சீனாவில் கிளைபரப்பி உள்ள பிற நாடுகளுக்கு தூண்டில் போடத் தொடங்கியுள்ளது. அதாவது, சீனாவில் உள்ள நிறுவனங்கள் அங்குள்ள கூடாரத்தை காலி செய்துவிட்டு இந்தியாவில் கூடாரம் போட்டால், அதிகப்படியான சலுகைகள் குறிப்பாக வரிச்சலுகை, வரிக்குறைப்பு மற்றும் வரி விடுமுறை அதாவது வரிச்சுமையில் இருந்து முற்றிலும் விலக்கு அளிக்கப்படும் என்று ஆசை வார்த்தையை தூவியுள்ளது.
உற்பத்தி நிறுவனங்களுக்கு முக்கியத்துவம்
சீனாவின் அண்டை நாடான வியட்நாம் கூட இதே அனுகுமுறையைப் பின்பற்றி சீனாவிலிருந்து பிற நாடுகளின் நிறுவனங்களை தம் நாட்டிற்கு கவர்ந்திழுத்தது. தற்போது இந்தியாவும் அதே பாணியைப் பின்பற்றி சீனாவிலுள்ள பிற நாடுகளின் நிறுவனங்களுக்கு வலை விரிக்கத் தொடங்கியுள்ளது என்று இது பற்றிய முழு விவரம் தெரிந்த நபர், தன்னைப் பற்றிய விவரங்கள் எதுவும் வெளியிடக்கூடாது உத்தரவாதத்தோடு மேற்கண்ட விவரங்களைத் தெரிவித்தார். குறிப்பாக மின்னணு பொருட்கள், நுகர்வோர் பொருட்கள், மின்சார வாகனங்கள், பொம்மைகள், காலனிகள் போன்றவற்றை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு வரிச் சலுகை மற்றும் வரி விடுமுறை போன்றவை அளிக்கப்படும் என்று இந்தியா உறுதியளித்துள்ளது.
வாய்ப்பை தவறவிட்ட இந்தியா
வியட்நாம், மலேசியா ஆகிய நாடுகள் இதே உத்திகளைப் பயன்படுத்தி வரிச்சலுகை மற்றும் வரி விலக்கு போன்ற சலுகைகளை வழங்கி பிற நிறுவனங்களை ஈர்த்துள்ள வேளையில், இந்தியா இந்த அரிய வாய்ப்பினைப் பயன்படுத்தி முதலீட்டு வாய்ப்புகளை தவறவிட்டுள்ளது. அதே சமயம், தற்போது வர்த்தக அமைச்சகம் எடுத்துள்ள இந்த முயற்சி இறக்குமதியைக் குறைத்து ஏற்றுமதியை அதிகரிக்கும் ஒரு முயற்சியாகவே பார்க்கப்படுகிறது. இதற்காக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் ஒப்புதலும் அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது.
மேக் இன் இந்தியா
இந்தியாவின் இந்த சித்து வேலை வெற்றி பெற்றால், மோடி நினைப்பதுபோல் மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலம் உற்பத்தித் துறையின் வளர்ச்சி மேலும் 25 சதவிகிதம் வரை அதிகரித்து பொருளாதார வளர்ச்சியும் வரும் 2020ஆம் ஆண்டில் எதிர்பார்த்த இலக்கை எட்டக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications