ஐயா மோடி.. இது சரியல்ல.. எங்களுக்கான வரிய குறைச்சிடுங்க.. இதை ஏற்றுக் கொள்ள முடியாது.. டிரம்ப்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நியூயார்க் : ஐயா மோடி, அமெரிக்காவா பகைச்சுகாதீங்க. அப்புறம் நீங்க தாங்க மாட்டீங்க? என்பது போல, அமெரிக்கா ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் இது குறித்து டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளாராம். இந்தியாவின் இந்த வரி விதிப்பு ஒரு போதும் ஏற்றுக் கொள்ள கூடியதாக இல்லை என்றும் ட்வீட் செய்துள்ளாராம்.

 

ஒரு புறம் அமெரிக்கா சீனா பிரச்சனை, மறுபுறம் ஈரானுடன் மல்லுக்கட்டிக் கொண்டு நிற்கும் டிரம்ப்புக்கு இந்தியாவையும் அவ்வப்போது எச்சரிப்பது ஒரு வழக்கமே.

ஐயா மோடி.. இது சரியல்ல.. எங்களுக்கான வரிய குறைச்சிடுங்க.. இதை ஏற்றுக் கொள்ள முடியாது.. டிரம்ப்!

அதிலும் பிரதமர் மோடியை குறிப்பிட்டு ட்வீட் செய்துள்ளார் இந்த கோபக்கார மனுசன். ஆமாங்க ஜப்பானில் நடக்கும் ஜி 20 மாநாட்டிற்கு செல்லும் அவசரத்தில் கூட இந்தியாவையும் மோடியையும் மறக்காமல் ட்வீட் செய்து விட்டு போயிருக்கிறார் டிரம்ப்.

அதில் இந்தியா பல ஆண்டுகளாகவே, அமெரிக்காவுக்கு எதிராக அதிக கட்டணங்களை விதித்துக் கொண்டு இருக்கிறது. இது ஏற்றுக் கொள்ள கூடியது அல்ல.

எனினும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் பேச நான் ஆவலாக காத்திருக்கிறேன். எனினும் இந்தியாவின் இந்த ஏற்றுக் கொள்ள முடியாத கட்டண விகிதத்தை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது. இதை இந்தியா மாற்றிக் கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

ஆக இந்தியா இதை விரைவில் திரும்ப பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளாராம்.

எனினும் ஜப்பானில் நடக்கவிருக்கும் மாநாட்டில் கலந்து கொள்ளவிருக்கும் இரு நாட்டு தலைவர்களும் இதை பற்றி பேசலாம் என்றும், இதையடுத்து ஒரு சுமூகமான தீர்வு காணப்படலாம் என்றும் நம்பப்படுகிறது.

அதோடு இந்தியர்களுக்கான H-1பி விசா மற்றும் இரு நாடுகளின் ஈராணும் மற்றும் ஈரானிடமிருந்து எண்ணெய் வாங்கும் விவகாரம், இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு மற்றும் வணிக ரீதியான கருத்தாய்வுகளின் அடிப்படையில் இந்த பேச்சு வார்த்தை நடக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

 

இந்த நிலையில் அமெரிக்கா சாதகமாக இருந்தால், பல பெரிய நிறுவனங்கள் இந்தியாவுக்கு திரும்பலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான பதில்கள் இந்த இரு நாட்டு தலைவர்களின் பேச்சு வார்த்தைக்கு பின்னரே தெரியவ்ரும் என்றும் எதிர் பார்க்கப்படுகிறது. எது எப்படியோ இந்தியாவுக்கு சாதகமாக இருந்தால் சரிதான்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Donald Trump said Indian tariffs unacceptable

Donald Trump said Indian tariffs unacceptable, also he tweet “This is unacceptable and the Tariffs must be withdrawn"
Story first published: Thursday, June 27, 2019, 13:08 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X