Nitin Sandesara-வின் ரூ.14,400 கோடி மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல்! அசால்ட் செய்யும் அமலாக்க துறை!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: இந்தியாவில் கடன் வாங்கிவிட்டு, ஒழுங்காக திருப்பிச் செலுத்தாமல் இந்தியாவை விட்டே ஓடிப் போன பணக்காரரர்களில் ஒருவர் (Nitin Sandesara) நிதின் சந்தேஸரா.

இவர் நிறுவனத்தின் பெயர் Sterling Biotech. இந்த நிறுவனம் மற்றும் அதன் துணை நிறுவனங்களின் பெயரில் நைஜீரியாவில் இருக்கும் பல சொத்துக்களை, நேற்று (ஜூன் 26, 2019) அமலாக்கத் துறை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்திருக்கிறது.

நைஜீரியாவில் சுமார் 9,700 கோடி ரூபாய் மதிப்புள்ள நான்கு எண்ணெய் கிணறுகள், ஒரு எண்ணெய் வயல், கப்பல்கள், விமானங்கள், லண்டனில் இருக்கும் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு வீடு என கிடைத்த சொத்துக்களை எல்லாம் இந்திய அமலாக்கத் துறை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்திருக்கிறது.

மொத்தம் 14,400 கோடி

மொத்தம் 14,400 கோடி

கடந்த 2018-ம் ஆண்டிலேயே இந்திய அமலாக்கத் துறை, (Nitin Sandesara)நிதின் சந்தேஸராவின் 4,730 கோடி ரூபாய் மதிப்பிலான பல நிறுவன சொத்துக்களை, Prevention of Money Laundering Act (PMLA) பணச் சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ், அமலாக்கத் துறை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. ஆக, (Nitin Sandesara)நிதின் சந்தேஸராவுக்கு சொந்தமான, 14,400 கோடி ரூபாய்க்கு மேலான சொத்துக்களை அமலாக்கத் துறை தன் வசம் வைத்திருக்கிறது.

வழக்குகள்

வழக்குகள்

இதில் கவனிக்க வேண்டும் முக்கியமான விஷயம், இந்த ஸ்டெர்லிங் பயோ டெக் 5,383 கோடி ரூபாய்க்கு வங்கி மோசடி செய்ததாகத் தான் சிபிஐ வழக்கு தொடுத்திருக்கிறது. அதன் அடிப்படையில் தான் அமலாக்கத் துறையும் Prevention of Money Laundering Act (PMLA) பணச் சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள். அமலாக்கத் துறையின் வாதப்படி Nitin Sandesara)நிதின் சந்தேஸரா, சுமார் 4,500 கோடி ரூபாய்க்கு பணச் சலவை செய்திருப்பதாகச் சொல்கிறார்கள்.

பித்தலாட்டம்

பித்தலாட்டம்

வெளிநாட்டுக்கு ஓடிப் போன நிதின் சந்தேஸரா வெறும் வங்கிக் கடன் மோசடி மற்றும் பணச் சலவை மோசடி மட்டும் செய்யவில்லை.
1. 247 போலி நிறுவனங்களை இந்தியாவில் நடத்தியது
2. 96 போலி நிறுவனங்களை அமெரிக்கா, இங்கிலாந்து, மொரீஷியல், பனாமா என பல்வேறு நாடுகளில் நடத்தியது
3. ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டுக்கு பணத்தை அனுப்பி பெரிய பிசினஸ் செய்வதாக போலி கணக்கு காட்டியது
4. இல்லாத இயந்திரங்களுக்கு தேய்மானம் ஆனதாக பொய் சொல்லி வரி கட்டாமல் தப்பியது... என Nitin Sandesara)நிதின் சந்தேஸரா செய்த தவறுகளை அடுக்குகிறார்கள் அமலாக்கத் துறை அதிகாரிகள்.

சந்தேகம்

சந்தேகம்

விசாரணையில் தான் (Nitin Sandesara) நிதின் சந்தேஸரா, பல்வேறு வழிகளில் பதுக்கிய பணம் நைஜீரியாவில் இருப்பதாகத் தகவல் கிடைத்திருக்கிறது. அதனால் தான் அதிரடியாக களம் இறங்கி, (Nitin Sandesara)நிதின் சந்தேஸராவின் பல்வேறு சொத்துக்களை தன் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்திருக்கிறது அமலாக்கத் துறை. அதோடு நிதின் சந்தேஸரா மற்றும் சேத்தன் சந்தேஸரா ஆகிய இருவர் தான் கடன் வாங்கிய ஸ்டெர்லிங் பயோ டெக்கின் புரொமோட்டர்கள். இவர்கள் இருவரும் நைஜீரியாவில் பதுங்கி இருப்பதாகவும் இந்திய தரப்பு அதிகாரிகள் சந்தேகிக்கிறார்களாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

nitin sandesara assets worth 14400 crore attached with indian enforcement directorate till date

nitin sandesara assets worth 14400 crore had attached with enforcement directorate till date
Story first published: Thursday, June 27, 2019, 14:34 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X