டெல்லி : இந்தியாவில் கடனை வாங்கி விட்டு வெளி நாடுகளுக்கு தப்பி ஓடியவர்களில் நிரவ் மோடியும் ஒருவர். இவரின் 283.16 கோடி ரூபாய் மதிப்புள்ள நீரவ் மோடி, அவரது சகோதரி பூர்வி மோடியின் வங்கி கணக்கை சுவிஸ் அதிகாரிகள் முடக்கியுள்ளனர்.
பிரபல இந்திய வைர வியாபாரியான நிரவ் மோடி மற்றும் அவரது உறவினர் மொகுல் சோக்சியும் பஞ்சாப் நேஷனல் வங்கியிடம் ரூ.13,000 கோடி கடன் வாங்கி மோசடியில் ஈடுபட்டதோடு, அவர்கள் தப்பி லண்டனுக்கு சென்று விட்டனர்.
ஆமாங்க.. இந்த மோசடி வெளியில் தெரியும் முன்னரே நிரவ் மோடி லண்டனுக்கு தப்பிச் சென்றார். இந்த விவகாரம் தொடர்பாக நிரவ் மோடி மற்றும் அவரது உறவினருமான மொகுல் ஷோக்சியின் மீதும் வழக்கு பதிவு செய்து சிபிஐ, அமலாக்கத் துறை மற்றும் வருமான வரித்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சுவிஸ் அதிகாரிகள் முடக்கம்!
அது மட்டுமல்லாமல் இந்தியாவில் உள்ள அவர்களது பல்வேறு சொத்துகளும் முடக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் 283.16 கோடி ரூபாய் மதிப்புள்ள நிரவ் மோடி, சகோதரி பூர்வி மோடியின் வங்கி கணக்கை சுவிஸ் அதிகாரிகள் முடக்கியுள்ளனர். குறிப்பாக நிரவ் மோடி மற்றும் அவரது சகோதரி பூர்வி மோடியின் 3,74,11,596 அமெரிக்க டாலர் மற்றும் GBP27,38,136 (RS 283.16 கோடி ரூபாய்) இருப்பு தொகை வைத்திருக்கும் வங்கிக் கணக்குகளை சுவிஸ் வங்கி அதிகாரிகள் முடக்கியுள்ளனர்.
சுவிட்சர்லாந்தில் நான்கு கணக்குகள்
ஆமாங்க.. லண்டனுக்கு தப்பி ஓடிய வைரவியாபாரி நிரவ் மோடிக்கு சுவிட்சர்லாந்தில் நான்கு கணக்குகள் இருந்துள்ளன. PMLA சட்டத்தின் கீழ் அமலாக்க இயக்குனரகத்தின் கோரிக்கையைத் தொடர்ந்து சுவிஸ் அதிகாரிகள் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் கருதப்படுகிறது. அதோடு பஞ்சாப் நேஷனல் வங்கி மற்றும் பிற வங்கிகளிடமிருந்து சட்டவிரோதமாக வெளியேற்றப்பட்ட பணத்தில் இருந்து இந்த வங்கிக் கணக்குகளில் பணம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது என்ற அடிப்படையில் இந்த கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாம்.
நிரவ் மோடி சிறையில் உள்ளார்
இதை தொடர்ந்து, நிரவ் மோடி இன்று லண்டனில் ரிமாண்ட் விசாரணைக்கு ஆஜர்படுத்தப்பட உள்ள நிலையில், ரூ.13,000 கோடி பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி வழக்கு தொடர்பாக மார்ச் மாதம் கைது செய்யப்பட்ட பின்னர் அவர் தற்போது இங்கிலாந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
நிரவுக்கு ஜாமீன் இல்லை
இதுவரை நிரவ் மோடி நான்கு முறை ஜாமீன் பெற முயன்றும், ஒவ்வொரு முறையும் தோல்வியுற்றார். இந்த நிலையில் நாடு முழுவதும் நிரவ் மோடியின் சொத்துக்கள் மூலம் பஞ்சாப் நேஷனல் வங்கியில் மோசடி செய்யப்பட்ட பணத்தை மீட்கும் முயற்சியில் இறங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications