ஐயா மோடி.. இந்தியாவின் தலையெழுத்தே உங்க கையில்.. அடுத்து என்ன செய்ய போறீங்க?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி : மிக மோசமான பொருளாதார சிக்கலில் இருக்கும் இந்தியாவின் தற்போதைய பொருளாதார நிலையில், மத்தியில் இரண்டாவது முறையாக அமைந்துள்ள மோடி 2.0 அரசுக்கு தர விருக்கும் முதல் பட்ஜெட்டும் ஜூலை 5ம் தேதி தாக்கல் செய்யவிருக்கும் நிலையில் மோடி அரசுக்கு எந்த மாதிரியான சவால்கள் காத்திருக்கின்றன.

 

அதை பற்றிய கண்னோட்டத்தினை இங்கு காண்போம். மோடி தலைமையிலான மத்திய ஆட்சியில், நிதியமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள நிர்மலா சீதாராமன், தன்னுடைய முதலாவது பட்ஜெட்டை ஜூலை 5-ல் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யவிருக்கிறார். இதற்காக பல்வேறு துறை அதிகாரிகளுடன், பொருளாதார நிபுனர்களுடனும், பிரதமர் மோடியும் சரி, நிதியமைச்சரும் தீவிர ஆலோசனை நடத்தினர்.

ஒரு புறம் இந்தியாவின் நடப்பு கணக்கு பற்றாக்குறையும் சரி, ஜி.டி.பியும் மிக கவலைக்கிடமாகவே உள்ளது. அதேசமயம் கடந்த ஆட்சியில் மோடி அரசு பல துறைகளில் வரி விலக்கும் அளித்ததால் அரசுக்கு வர வேண்டிய வரி வருமான விகிதமும் குறையலாம் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.

மெதுவான வளர்ச்சி?

மெதுவான வளர்ச்சி?

ஒரு புறம் மெதுவான பொருளாதார வளர்ச்சி என்பது ஏற்கனவே தெரிந்த விஷயம் என்றாலும், அரசு அதை சரிசெய்ய பல புதிய திட்டங்களை வகுத்து வருவதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் மறுபுறம் குறிப்பிட்ட துறைகளுக்கு வரி விலக்கு அளித்தது மோடி தலைமையிலான அரசு. இதனால் வரி வசூல் கடந்த ஆண்டிலை காட்டிலும் இன்னும் குறையாலாம் என்றும் கருதப்படுகிறது. பொருளாதார வளர்ச்சி குறைவு மறுபுறம் வரி குறைவு இரண்டுமே மேலும் பொருளாதாரத்தினை குறைக்கும், இது நடப்பு கணக்குப் பற்றாக்குறையை இன்னும் அதிகரிக்கும் என்றே கருதப்படுகிறது.

தேர்தல் வாக்குறுதிகள்

தேர்தல் வாக்குறுதிகள்

ஒரு புறம் வளர்ந்து வரும் நடப்பு கணக்கு பற்றாக்குறையே பெரிய சவால் எனில், மறுபுறம் மோடி தேர்தல் சமயங்களில் கொடுத்த வாக்குறுதிகளும் மிகப்பெரிய சவாலாகவே இருந்து வரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இது மோடி அரசுக்கு மேலும் அழுத்தத்தையே கொடுக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக சாலைகள் மற்றும் வீடுகள், தனி நபர்களுக்கான வரி விதிப்பு மற்றும் நிறுவனங்களுக்கான வரி குறைப்பு போன்ற வாக்குறுதிகளை செயல்படுத்துவதில் பெரிய சவாலே இருக்கிறது மோடி அரசுக்கு.

பொருளாதாரத்தினை அதிகரிப்பதே ஒரே வழி
 

பொருளாதாரத்தினை அதிகரிப்பதே ஒரே வழி

ஒரு புறம் பிரச்சனைகள் என்பது நீண்டு கொண்டே போனாலும் மறுபுறம் அதற்காக விடைகளையும் தேட வேண்டும் என்கிறார்கள் பொருளாதார நிபுனர்கள், குறிப்பாக பட்ஜெட் கூட்டத்தில் கலந்து கொண்ட மூத்த அதிகாரிகளில் ஒருவர் இதுபற்றி கூறிய கருத்தில் கட்டாயம் பொருளாதார வளர்ச்சியை அதிகரிப்பது மற்றும் தனியார் முதலீட்டை புதுபிப்பது என செய்தால் மட்டும் வளர்ச்சி காண முடியும் என்றும் கருதப்படுகிறது.

ஜி.டி.பியை ஊக்குவிக்க வேண்டும்?

ஜி.டி.பியை ஊக்குவிக்க வேண்டும்?

நடப்பு கணக்கு பற்றாக்குறையை சமாளிக்க, ஜி.டி.பியை ஊக்கப்படுத்த வேண்டும் என்றும் கருதப்படுகிறது. இந்த நிலையில் ஜி.டி.பியை 3.6 சதவிகிதமாக அதிகரிக்க வேண்டும் என்றும் முன்னர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால் இது கடந்த பிப்ரவரியில் இடைக்கால பட்ஜெட் தாக்கலின் போது 3.4 சதவிகிதமாக குறைத்து மாற்றி அமைக்கப்பட்டது. இது கடந்த 2018ம் ஆண்டு 3.3 சதவிகிதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

3% அதிகரித்துள்ளது.

3% அதிகரித்துள்ளது.

ஒரு புறம் பல நாட்டு சந்தைகள் வீழ்ச்சியடைந்து வந்தாலும், இந்தியாவில் 10 வருட பாண்டுகளில், அடிப்படை புள்ளியிலிருந்து 3 புள்ளிகள் அதிகரித்துள்ளது லாபம். ஆமாங்க.. 6.87 சதவிகிதமாக அதிகரித்தது. இது கடந்த வியாழக்கிழமையன்று 6.79 சதவிகிதமாகவும் முடிவடைந்தது. எனினும் தற்போதைய பொருளாதார நிலை ரூபாயின் மதிப்பினை குறைக்கும் என்றும், இது நடப்பு ஆண்டில் முதலீட்டு சந்தையினையும், பத்திர சந்தையினையும் வெகுவாக பாதிக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

பற்றாக்குறை நிலவுகிறது

பற்றாக்குறை நிலவுகிறது

1 டிரில்லியன் ரூபாயை தாண்டக்கூடிய வரி வசூலில், நடப்பு ஆண்டில் குறையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதிலும் கடந்த பிப்ரவரில் இடைக்கால பட்ஜெட் கிட்டதட்ட 6 சதவிகிதம் குறையலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. இது இன்னும் பொருளாதாரத்தினை பலவீனமாக்கும் என்றும் கருதப்படுகிறது. இதனால் பொருளாதார அழுத்தம் மேலும் அதிகரிக்கலாம் என்றும் கருதப்படுகிறது. கடந்த நிதியாண்டிலேயே வரி வசூல் 11 சதவிகிதம் வீழ்ச்சி கண்டது. அதோடு இது நடப்பு ஆண்டில் இன்னும் குறையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

2024ல் $5 டிரில்லியன் இலக்கு

2024ல் $5 டிரில்லியன் இலக்கு

இந்தியாவின் பொருளாதாரத்தை 2024ம் ஆண்டுக்குள் 5 டிரில்லியன் டாலராக (ரூ.349 லட்சம் கோடி) உயர்த்துவது என இலக்கு நிர்ணயித்துள்ளார் பிரதமர் மோடி. இது கடந்த மார்ச் மாதத்தில் 2.7 டிரில்லியன் டாலராக இருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போதைய பொருளாதார சூழ்நிலையில் இது அடைய வெகு சவால்களை சமாளிக்க வேண்டி இருக்கும் மோடி தலைமையிலான அரசு.

இந்த துறைகளில் வரியை குறைங்க?

இந்த துறைகளில் வரியை குறைங்க?

குறிப்பாக பட்ஜெட்டுகு முந்தைய ஆலோசனைகளில் கலந்து கொண்ட பொருளாதார வல்லுனர்கள், அரசாங்க ஆலோசகர்கள், சிந்தனையாளர்கள் மற்றும் அதிகரிகாரிகள் கூறியதாவது, குறிப்பாக சிறு வணிகங்கள், உணவு பதப்படுத்துதல், மின்சார வாகனங்கள், ஏற்றுமதியாளர்கள், சுற்றுலாத்துறை, விவசாயிகள் மற்றும் கிராமப்புறத் துறைகளுக்கு பொது வரிக்கு பதிலாக துறை சார்ந்த தொகுப்புகளை பரிந்துரைத்துள்ளனராம்.

வருவாயை அதிகரிக்க உதவும்?

வருவாயை அதிகரிக்க உதவும்?

நடப்பு நிதியாண்டில் ஒட்டுமொத்த வருவாயை உயர்த்துவதோடு, மத்திய வங்கியின் வங்கியின் ஈவுத் தொகையை 690 பில்லியன் ரூபாயிலிருந்து 1 டிரில்லியன் ரூபாயாக அதிகரிப்பதோடு, அதோடு தனியார் மையமாக்கல் கொள்கையினையும் மேற்கொள்ளும் போது 900 பில்லியன் ரூபாயையும் திரட்டும் போது இது ஒட்டுமொத்த வருவாயையும் மேம்படுத்த உதவும் என்றும் கூறப்பட்டுள்ளது.

வாகன விற்பனை வீழ்ச்சி?

வாகன விற்பனை வீழ்ச்சி?

இதில் பெரிய பிரச்சனையே என்னவெனில் தனியார் முதலீடும் சரி, நுகர்வோர் தேவையும் சரி நீடித்த மந்த நிலையே நிலவி வருகிறது. அதோடு ஒட்டுமொத்த வாகன விற்பனையிலும் 20 சதவிகிதம் கடந்த மே மாதத்தில் வீழ்ச்சி கண்டுள்ளது. இவை அனைத்துமே ஜி.டி.பியை பாதிக்கும் காரணிகளாகவே உள்ளன என்பது குறிப்பிடத்தக்க விஷயம்.

உற்பத்தி பாதிக்கும்

உற்பத்தி பாதிக்கும்

இந்த சூழ்நிலையில் நாட்டில் சரியான பருவமழையும் இல்லாததால் ஒட்டுமொத்த உற்பத்தியும் பாதிக்கும் என்றும் கருதப்படுகிறது. இதனால் ஏற்றுமதியும் குறையலாம் என்றும் கருதப்படுகிறது. இதனால் அடிப்படை வீட்டு தேவைகளும் கூட பாதிக்கப்படலாம் என்றும் கருதப்படுகிறது. இது இருக்கும் சிக்கல் பத்தாது என்று இன்னும் மேலும் சிக்கலை அதிகரிக்க கூடும் என்றும் கருதப்படுகிறது.

வரிகளை குறைக்க வேண்டும்?

வரிகளை குறைக்க வேண்டும்?

ஒரு புறம் என்ன தான் பொருளாதார சிக்கல் நிலவி வந்தாலும், மறுபுறம் பொருளாதாரத்தை ஊக்குவிக்க தொழில்துறையை ஊக்குவிக்க வேண்டும். குறிப்பாக தொழில் குழுமங்களை ஊக்குவிக்கும் வகையில் கர்ப்பரேட் வரி விகிதங்களை குறைக்க வேண்டும். அதோடு புதிய முதலீடுகளை அதிகரிக்க சலுகைகளை அளிக்க வேண்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

சிறு வணிகங்களுக்கு நிதியளிக்க வேண்டும்?

சிறு வணிகங்களுக்கு நிதியளிக்க வேண்டும்?

மத்திய வங்கி முக்கிய வட்டிவிகிதத்தினை 75 புள்ளிகள் குறைத்தாலும், வங்கிகள் கடனுக்கான வட்டி விகிதங்களை 10 - 15 புள்ளிகள் குறைத்திருக்கின்றன. இது போன்ற தடைகளை கருத்தில் கொண்டு அரசு, மொத்த உள் நாட்டு உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கு வகிக்கும் பொருளாதார பெரும்பகுதிக்கு, குறிப்பாக சிறு வணிகங்களுக்கு நிதியுதவியை அளிக்க நடவடிக்கை எடுக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

பட்ஜெட்டில் எதிர்பார்ப்பு

பட்ஜெட்டில் எதிர்பார்ப்பு

ஆக பொருளாதாரச் சீர்திருத்தத்தை நோக்கிய பல்வேறு அறிவிப்புகள் இந்த பட்ஜெட்டில் இடம்பெறக்கூடும் என்றும், வேலைவாய்ப்பை அதிகரிக்கக்கூடிய தனியார் நிறுவனங்களின் முதலீட்டுக்கும், திறன் மேம்பாட்டுத் திட்டங்களுக்கும் ஊக்கமளிக்கும் வகையில் மத்திய பட்ஜெட்டின் அம்சங்கள் இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

PM Narendra Modi may in under pressure after Budget 2019

PM Narendra Modi may in under pressure after Budget 2019
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X