டெல்லி : சுவிஸ் வங்கிகளில், கடந்த 2018ல் தான் இந்தியர்களின் முதலீடு 6 சதவிகிதம் குறைந்து, 955 மில்லியன் சுவிஸ் சுவிஸ் பிராங்குகள் (இந்திய மதிப்பில் 6,757 கோடி ரூபாய் ) குறைந்துள்ளதாக அந்த வங்கி வெளியிட்டுள்ளது.
முதல் முறையாக முதலீடு செய்யப்பட்ட தொகை 6 சதவிகிதம் சரிந்துள்ளதாக, அந்நாட்டு வங்கிகளின் ஆண்டறிக்கைகள் கூறியுள்ளன.

ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தில் உள்ள வங்கிகளில், கடந்த ஆண்டு முறையாக செய்யப்பட்ட முதலீடுகள் குறித்து, அந்த நாட்டின் மத்திய வங்கிகள் ஆணையம் ஒர் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அதில் உலகம் முழுவதிலும் இருந்து, 2018ல் சுவிஸ் வங்கிகளில் 1.4 சுவிஸ் சுவிஸ் பிராங்குகள் (கிட்டதட்ட 99 லட்சம் கோடி ரூபாய்) முதலீடு செய்யப்பட்டதாகவும், இது, வழக்கத்தை விட, 4 சதவிகிதம் குறைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்தியாவை பொறுத்த வரை கடந்த 2017ல் இந்தியாவின் முதலீடுகள் 50 சதவிகிதம் அதிகரித்தது, அதிலும் அந்த வருடம் மொத்த முதலீடு 1.07 பில்லியன் சுவிஸ் சுவிஸ் பிராங்குகள் (இந்திய ரூபாயில் கிட்டத்தட்ட 7000 கோடி) அதிகரித்தது.
ஆனால் அதன் பின்னர் அடுத்து வந்த 3 வருடங்களுமே, இதற்கு எதிர்மாறாக இருக்கிறது. முதலீடுகள் குறைய தொடங்கியுள்ளன என்றும் அவ்வங்கி கூறியுள்ளது.
கடந்த, 20 ஆண்டுகளில், இரண்டாம் முறையாக, இப்படியொரு சரிவு ஏற்படுவதாக சுவிஸ் வங்கி தெரிவித்துள்ளது.
சுவிஸ் வங்கிகளில் இந்தியர்கள் வைத்திருக்கிம் மொத்த நிதிகள், கடந்த 2006ம் ஆண்டில் 6.5 பில்லியன் சுவிஸ் பிராங்குகள் ( இந்திய மதிப்பில் ரூ.23,000 கோடி) ஆக இருந்தது. ஆனால் இது ஒரு தசாப்தத்தில் பத்தில் ஒரு பங்காக குறைந்துள்ளது என்றும் கூறியுள்ளது சுவிஸ் வங்கி.
இதுவே கடந்த 2011ல் 12 சதவிகிதமும், 2013ல் 43 சதவிகிதமும், இதற்கு அடுத்தாற்போல் கடந்த 2017ம் மட்டுமே அதிகமாக இருந்ததாம்.
இந்தியாவில் தான் இப்படியெனில் பாகிஸ்தானில் இருந்து முதலீடு 33 சதவிகிதம் குறைந்து 744 மில்லியன் சுவிஸ் பிராங்குகலாக (ரூ.5300 கோடி ) இருந்துள்ளது. இது கடந்த 2017ஆம் ஆண்டிலேயே 20 சதவிகிதம் குறைந்திருந்ததாகவும், தற்போது இது இன்னும் அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications