டெல்லி: பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்த பின் கொண்டு வரப்பட்ட மோட்டார் வாகனச் சட்டம், சாலை விதி மீறல்களுக்கான அபராதங்களை (Traffic fine) அசால்டாக பல மடங்குகள் உயர்த்தி இருக்கின்றன.
இந்த மோட்டார் வாகனச் சட்டம் கடந்த 16-வது மக்களவை காலத்திலேயே, மாநிலங்களவையில் அனுமதி வழங்கப்படாமல் காலாவதியானது. ஆனால் இப்போது மோடி அரசு மீண்டும் பதவிக்கு வந்த உடன் மோட்டார் வாகனச் சட்டத்துக்கு அனுமதி கொடுத்திருக்கிறார்கள்.

அவசரமாக பயணிக்கும் வாகனங்களுக்கு (Emergency Vehicle) வழி விடவில்லை என்றால் 10,000 ரூபாய் அபராதம் எனச் சொல்லி இருக்கிறார்கள். அதே போல இன்னொரு அதிரடி விஷயமாக, ஓலா உபர் போன்ற அக்ரிகேட்டார்களுக்கு வழங்கிய உரிமங்களின் விதிகளை மீறினால் ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என திருத்தப்பட்ட மோட்டார் வாகனச் சட்டத்தில் சொல்லி இருக்கிறார்களாம்.
அதிவேகமாக வாகனம் ஓட்டினால் 1000 - 2000 ரூபாய் அபராதம். வாகனத்துக்கு இன்ஷூரன்ஸ் இல்லாமல் ஓட்டினால் 2000 ரூபாய் அபராதம்.
ஹெல்மெட் இல்லாமல் வாகனம் ஓட்டினால் 1,000 ரூபாய் அபராதம் + 3 மாத ஓட்டுநர் உரிமம் தற்காலிக ரத்து செய்யப்படும்.
ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்ட பின்பும் வாகனம் ஓட்டினால் 10,000 ரூபாய் அபராதம் என அபராத மழை பொழிகிறார்கள்.
18 வயதுக்கு உட்பட்டவர்கள் வாகனம் ஓட்டி தவறு செய்தால் அவர்களின் பாதுகாவலர்கள் அல்லது வாகன உரிமையாளர்கள் தான் குற்றம் செய்ததாக கருதப்படுவார்கள். அதோடு அவர்களுக்கு 25,000 ரூபாய் அபராதம் + 3 ஆண்டு சிறை தண்டனை + வாகனத்தின் பதிவுகள் ரத்து செய்யப்படுமாம்.
சாலை விதிகளை மீறினால் 500 ரூபாய், அதிகாரிகள் சொல்வதைக் கேட்கவில்லை என்றால் 2,000 ரூபாய், ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டினால் 5,000 ரூபாய், குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் 10,000 ரூபாய், சீட் பெல்ட் அணியவில்லை என்றால் 1,000 ரூபாய் என அபராதத்திலேயே தாளித்து எடுக்க வழி வகை செய்திருக்கிறார்கள்.
இதில் கவனிக்க வேண்டிய மற்றொரு விஷயம் இந்த தவறுகளை கண்டு பிடித்து அபராதம் விதிக்க வேண்டிய அதிகாரிகளே இந்த தவறுகளைச் செய்தால் மேலே சொன்ன அபராதங்கள் அப்படியே இரண்டு மடங்காக விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கிறது புதிய மோட்டார் வாகனச் சட்டம்.


Click it and Unblock the Notifications