தேசிய சேமிப்புத் திட்டம், கிஷான் விகாஸ் பத்திரம், பொது சேமநல நிதியம் (Public Provident Fund) போன்ற பொது மக்களுக்கான சிறு சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதம் (Interest rate) 0.1 சதவிகிதம் அல்லது 10 அடிப்படைப் புள்ளிகளைக் மத்திய நிதி அமைச்சகம் குறைத்திருக்கிறார்கள்.
ஒவ்வொரு காலாண்டும் இது போன்ற மக்கள் சிறு சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை மத்திய நிதி அமைச்சகம் நிர்ணயிப்பார்கள். கடந்த காலாண்டில் இந்திய அரசாங்கம் வெளியிட்டிருக்கும் கடன் பத்திரங்களில் கிடைக்கும் வருமானத்தைப் பொருத்து இந்த சிறு சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை நிர்ணயிப்பார்கள்.

பொது சேமநல நிதியம் (Public Provident Fund) திட்டத்துக்கு கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையான காலாண்டில் 8 சதவிகிதம் வட்டி வழங்கினார்கள். இந்த ஜூலை - செப்டம்பர் காலாண்டுக்கு 7.9 சதவிகிதமாக நிர்ணயித்திருக்கிறார்கள்.
அதே போல ஐந்து ஆண்டுகளுக்கான தேசிய சேமிப்புச் சான்று (National Saving Certificate) திட்டத்துக்கான வட்டி கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையான காலாண்டில் 8 சதவிகிதம் வட்டி வழங்கினார்கள். இந்த ஜூலை - செப்டம்பர் காலாண்டுக்கு 7.9 சதவிகிதமாக குறைத்திருக்கிறார்கள்.
செல்வமகள் திட்டத்துக்கு (Sukanya Samridhi Yojana) கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையான காலாண்டில் 8.5 சதவிகிதம் வட்டி வழங்கினார்கள். இந்த ஜூலை - செப்டம்பர் காலாண்டுக்கு 8.4 சதவிகிதமாக நிர்ணயித்திருக்கிறார்கள்.
கிஷான் விகாஸ் பத்திரம் (Kisan Vikas Patra) திட்டத்துக்கு கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையான காலாண்டில் 7.7 சதவிகிதம் வட்டி வழங்கினார்கள். இந்த ஜூலை - செப்டம்பர் காலாண்டுக்கு 7.6 சதவிகிதமாக நிர்ணயித்திருக்கிறார்கள். அதோடு 112 மாதங்களில் முதிர்வடைய வேண்டிய திட்டம் இனி 113 மாதங்களில் முதிர்வடையும் எனவும் சொல்லி இருக்கிறார்கள்.
ஐந்து வருட டேர்ம் டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதம் 7.8-ல் இருந்து 7.7 ஆகவும், ஐந்து வருட ஆர் டி டெபாசிட்டுகள் 7.3 சதவிகிதத்தில் இருந்து 7.2 சதவிகிதமாகவும், ஐந்து வருட மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதம் 8.7-ல் இருந்து 8.6 சதவிகிதமாகவும் குறைத்திருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications