டெல்லி : மத்தியில் மோடி தலைமையிலான அதிரடியான பல திட்டகளுக்கு நடுவில், ஒரே நாடு, ஒரு ரேஷன் காடு திட்டத்தினை மத்திய அமலுக்கு கொண்டு வந்துள்ளது மத்திய அரசு.
அதிலும் மாநில அரசுகள் ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை அடுத்தாண்டு ஜீன் 30க்குள் அனைத்து மாநில அரசுகளும் அமல்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது மத்திய அரசு.
இது குறித்து அறிக்கையில் கருத்து தெரிவித்துள்ள மத்திய உணவுத் துறை அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் அடுத்த ஜீன் வரை ,அனைத்து மாநிலங்களுக்கும் கெடு விதித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
மக்களுக்கு மானியம் சரியாக கிடைக்க வேண்டும்?
ரேஷன் கடைகளில் பொருள் விநியோகத்தில் கிடைக்கும் அரசின் மானியம் பயாளிகளுக்கு முழுமையாக செல்ல வேண்டும் என்றும், அதிலுள்ள முறைகேடுகளை தடுப்பதற்காகவும் நவீன தொழில் நுட்பங்களை மத்திய மாநில அரசுகள் அறிமுகப்படுத்தி வருகின்றன.
ஓரே நாடு, ஒரே ரேஷன் கார்டு?
நாடு முழுவதும் மக்கள் எந்த ரேஷன் கடைகளில் வேண்டுமானலும் பொருட்களை வாங்கிக் கொள்ளும் வகையில், ஒரே நாடு ஒரே அட்டை திட்டத்தினை மத்திய அரசு வகுத்துள்ளது. இதற்காக அனைத்து மாநிலங்களில் இருந்தும் ரேசன் கார்டுகள் தொடர்பான தகவல்கள் பெறப்பட்டு கணினியில் பதிவு செய்து மிகப்பெரிய ஆன்லைன் புள்ளி விபர தொகுப்பை மத்திய அரசு உருவாக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.
இன்னும் ஓராண்டுக்குள் அமல் படுத்த வேண்டும்?
இந்த நிலையில், ரேசன் அட்டை வைத்திருப்பவர்கள் நாடு முழுவதும் பொருட்களை வாங்கி பயனடையும் திட்டத்தை மாநில அரசுகள் இன்னும் ஓராண்டுக்குள் அமல்படுத்த வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.
ஒருங்கிணைந்த திட்டத்தில் மாநிலங்கள்
இதுதொடர்பாக, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ராம்விலாஸ் பஸ்வான், ‘தற்போது ஆந்திரா, குஜராத், அரியானா, ஜார்க்கண்ட், கர்நாடகா, கேரளா, மராட்டியம், ராஜஸ்தான், தெலுங்கானா, திரிபுரா ஆகிய 10 மாநிலங்கள் மத்திய பொது விநியோக திட்டத்தின் ஒருங்கிணைந்த நிர்வாகத்தில் தங்களை இணைந்துள்ளன.
நாட்டின் எந்த பகுதிக்கு சென்றாலும் பொருள்
பொதுவாக இந்த திட்டத்தில் ரேஷன் அட்டை வைத்துள்ளவர்கள் நாட்டின் எந்தப் பகுதிக்கு, சென்றாலும், குறிப்பாக ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு குடிபெயர்ந்தவர்கள் அந்த பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்க இயலும் என்றும் தெரிவித்துள்ளார். இதனால் மக்களுக்கு பயனே என்றும் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications