டெல்லி : விமான நிறுவனங்கள் ஒரு புறம் சலுகையை வாரி வழங்கி வந்தாலும், மறுபுறம் விமான கட்டணங்கள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அதிலும் சர்வதேச விமான கட்டணங்கள் மிக அதிகமாக அதிகரித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதிலும் ஜெட் ஏர்வேஸ் விமானம் நிறுவனம் தனது சேவையை நிறுத்தியதிலிருந்தே, மற்ற நிறுவனங்களுக்கு கொண்டாட்டம் தான். அதிலும் சர்வதேச விமான கட்டணங்கள் தான் அதிரடியாக ஏற்றம் கண்டுள்ளனவாம்.

குறிப்பாக கடந்த ஆண்டு ஜீன் மாதத்தோடு ஒப்பிடும் போது, இந்த வருடம், சில விமான கட்டணங்கள் அதிகப்படியாக 157 சதவிகிதம் அதிகரித்துள்ளதாம்.
குறிப்பாக நியூயார்க், லண்டன் சிட்னி, துபாய் உள்ளிட்ட நாடுகளுக்கு விமான கட்டணங்கள் அதிகளவில் அதிகரித்துள்ளதாகவும் தெரிகிறது. இதற்கு ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் தனது சேவையை நிறுத்தியதே காராணம் என்றும் கருதப்படுகிறது.
அதிலும் மும்பை - நியூயார்க் வரை செல்லும் விமானங்களுக்கான கட்டணம் சுமார் 58 சதவிகிதம் வரை அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கிளியர்டிரிப் வெளியிட்டுள்ள இந்த அறிக்கையில் மூலம் ஜீன் மாதம் வரையிலான இந்த கட்டணம் அதிகபட்சமாக 58 சதவிகிதம் அதிகரித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதே மும்பை -டோராண்டோ- நியூயார்க் மார்க்கமாக வரை செல்லும் இந்த விமானங்களுக்கான கட்டணம் 49 சதவிகிதம் வரை அதிகரித்துள்ளதாகவும், மும்பை - சிங்கப்பூர் 36 சதவிகிதமாக அதிகரித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த ஏப்ரல் 17ம் தேதி ஜெட் ஏர்வேஸ் விமானம் தனது 140 விமான சேவைகளை ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே சர்வேத விமான சேவையில் 120 விமானங்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில், திடீரென ஜெட் ஏர்வேஸ் விமான சேவைகள் முடக்கப்பட்டதால் ஒட்டுமொத்த விமான கட்டணங்களும் அதிகரிக்க தொடங்கியுள்ளன.
உள்நாட்டு விமான சேவைகளில், இது அந்த அளவு எதிரொலிக்கா விட்டாலும், சர்வதேச விமான கட்டணங்கள் பல மடங்கு அதிகரித்துள்ளது எனவும் கூறலாம். .
பல வங்கிகளில் கடனை வாங்கிவிட்டு கடனை திரும்ப செலுத்த முடியாமல் தவித்து வரும் ஜெட் ஏர்வேஸை, வாங்க கூட யாரும் முன்வரவில்லை என்பதே மிக துரதிஷ்டவசமான ஒரு செயல் என்றே கூறலாம்.
எஸ்.பி.ஐ ஒரு புறம் இந்த விமான நிறுவனத்தினை விற்க தீவிரமாக முயற்சி செய்து வந்தாலும், மறுபுறம், ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தினை யாரும் வாங்க முன் வரவில்லை என்பதே உண்மை. ஆரம்பத்தில் சில நிறுவனங்கள ஆர்வம் காட்டினாலும், பின்னர் ஏனோ அதை அப்படியே விட்டு விட்டன.


Click it and Unblock the Notifications