விமான கம்பெனிய வாங்குனா ஆண்டி தாங்க..! ட்விட்டரில் கலாய்த்த Anand Mahindra..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: மஹிந்திரா குழுமத்தின் தலைவராக இருக்கும் ஆனந்த் மஹிந்திராவை (Anand Mahindra) டேக் செய்து ஒரு நெட்டிசன் ட்விட்டி இருக்கிறார்.

 

அந்த ட்விட்டில் "நீங்க தான் இந்த Jet Airways கம்பெனிய வாங்கி மஹிந்திரா ஏர்வேஸ்-ன்னு மாத்தனும். இது வேலைக்கு ஆகும்-ன்னு நினைக்கிறேன்" எனச் சொல்லி இருக்கிறார். இந்த ட்விட்டர் வாசி ஜூன் 29, 2019 மதியம் 12.38 மணிக்கு ட்விட்டி இருக்கிறார்.

விமான கம்பெனிய வாங்குனா ஆண்டி தாங்க..! ட்விட்டரில் கலாய்த்த Anand Mahindra..!

அதற்கு வழக்கம் போல தன் ஹியூமர் சென்ஸ் உடன் பதிலளித்த ஆனந்த் மஹிந்திரா "நீங்க லட்சாதிபதி ஆகணும்னா மொதல்ல கோடீஸ்வரன் ஆயிட்டு, அதுக்கு அப்புறம் இந்த விமான சேவை நிறுவனங்கள தொடங்கணும், இல்ல விமான சேவை நிறுவனங்கள வாங்கணும்" என கலாய்த்து ஜூன் 29, 2019 மதியம் 2.58 மணிக்கு பதில் ட்விட்டி இருக்கிறார் ஆனந்த் மஹிந்திரா.

"If you want to be a millionaire, start with a Billion dollars and then start (buy) an airline!" தமிழாக்கத்தை விட அவர் எழுதிய ஆங்கில பழமொழியே அருமையாக இருக்கிறது. இது தான் ஆனந்த் மஹிந்திராவின் வார்த்தைகள்

ஆக Jet Airways நிறுவனத்தை வாங்கினால் ஆண்டியாக வேண்டியது தான் எனச் சொல்லாமல் சொல்லி கலாய்த்துக் தள்ளி இருக்கிறார் ஆனந்த் மஹிந்திரா. இந்த ட்விட் உடனடியாக பிசினஸ் சமூகங்களாலும், இணையவாசிகளாலும் கவனிக்கப் பட, டிரெண்டாகி விட்டது. அதோடு இந்திய விமானத் துறையில் இருக்கும் அசாத்தியமான அழுத்தத்தையும், போகிற போக்கில் வெளிப்படையாகப் பேசி இருக்கிறது Anand Mahindra-வின் ட்விட்.

கடந்த பல மாதங்களாக சம்பளப் பிரச்னை தொடங்கி கடன் கொடுத்தவர்கள், லீஸ் கொடுத்தவர்கள், வெளிநாட்டில் டாலரில் கடன் கொடுத்தவர்கள் என பலருக்கும் Jet Airways நிறுவனம் கடன் பாக்கி கொடுக்க முடியாமல் தவித்தது. இப்போது, கடைசியில், இருக்கும் சொத்துக்களை விற்று கடன்காரர்களுக்கு முடிந்த வரை கடனைக் கொடுக்க முன் வந்திருக்கிறது.

 

இதற்கு முன் எப்படியாவது Jet Airways நிறுவனத்தை ஒரு நல்ல முதலீட்டாளரிடம் விற்று தங்கள் கடனை மீட்டுக் கொள்ளலாம் என வங்கிகள் முயற்சித்தன. ஆனால் Jet Airways-க்கு இருந்த கொடூரமான கடன் மற்றும் பாக்கிகளால் நினைத்த படி முதலீட்டாளர்களிடம் விற்க முடியவிலை.

நம் Anand Mahindra-வை சுமார் 70 லட்சம் பேர், ட்விட்டரில் பின் தொடர்கிறார்கள். பொதுவாகவே நம் ஆனந்த் மஹிந்திரா கொஞ்சம் இணையத்தில் ஆக்டிவ் என்பதால் அவருக்கு போட்ட ஃபுல் டாஸ் பந்தை, தன் பதில் ட்விட்டில் சிக்ஸர் அடித்திருக்கிறார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

anand mahindra satire if a billionaire buy an airline company then he may become as millionaire

anand mahindra satire if a billionaire buy an airline company then he may become as millionaire
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X