மும்பை : ஒரு புறம் கொடிகட்டு பறந்து கொண்டிருக்கும் முகேஷ் அம்பானி எதை தொட்டாலும் வெற்றி என்ற நிலையில், அனில் அம்பானி எதை தொட்டாலும் நஷ்டம் என்ற நிலையிலேயே இருந்து வருகிறது. அதோடு பல சொத்துகளையும் விற்று கடனை கட்டி வருவதும் குறிப்பிடத்தக்கது.
கடன் பிரச்சனையின் எல்லைக்கே சென்றுள்ள அனில் அம்பானி, தனது பல சொத்துக்களையும், வணிகங்களையும் கடன் கட்டி வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தனது சொத்துக்கு சொத்தாக மும்பையில் இருக்கும் Santacruz headquarters அலுவலகத்தை விற்கவோ அல்லது குத்தகைக்கு விடவோ திட்டமிட்டுள்ளாராம். இதற்காக பலரிடம் பேச்சு வார்த்தையும் நடத்தி வருகிறாராம்.
பிளாஸ்டோனுடன் பேச்சு வார்த்தை?
உலகளாவிய நிறுவனங்களுடனும் மற்றும் பிளாஸ்டோன் நிறுவனத்துடனும் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே கடன் பிரச்சனை காரணமாக பல சொத்துகளை விற்று கடனை கட்டியுள்ள அனில் அம்பானி தற்போது மீண்டும் ஒரு சொத்தை விற்க பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த இடம் பிரச்சனையில் உள்ளது?
இதற்கிடையில் ஏற்கனவே கடன் பிரச்சனையால் சிக்கித் தவித்து வரும் அனில் அம்பானிக்கு சில சட்ட சிக்கல்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. அட ஆமாங்க.. இந்த அலுவலக சொத்தை விற்க முடிவெடுத்திருந்தாலும் இதில் சில சட்ட சிக்கல்கள் இருப்பதாக கூறப்படுகிறது. 7,00,000 சதுர அடிகளை கொண்டுள்ள இந்த இடம் மும்பையின் வெஸ்டர்ஸ் எக்ஸ்பிரஸ் சாலையில் அமைந்துள்ளது. இன்றைய விலைக்கு இந்த இடம் 1500 - 2000 கோடி ரூபாய் வரைக்கும் போகலாம் என்றும் கருதப்படுகிறது.
அலுவலகத்தை மாற்ற திட்டம்?
சொத்து ஆலோசனை நிறுவனமான, JLL நிறுவனத்தினை ஆலோசனை வழங்குவதற்கு அனில் அம்பானி நியமித்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த சூழ்நிலையில் அனில் அம்பானி தனது அலுவலகத்தை தெற்கு மும்பையில் உள்ள தனது பல்லார்ட் ஸ்டேட் அலுவலகத்திற்கு மாற்றம் செய்ய யோசித்து வருவதாகவும், இது குறித்து ஆலோசித்து வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
விற்று பணமாக்க முடிவு?
கடந்த 2005 ரிலையன்ஸ் சாம்ராஜ்ஜியத்தையே இரண்டாக பிரிக்க முடிவெடுத்த அண்ணன் தம்பிகளில், அனில் அம்பானிக்கே இந்த அலுவலக சொத்து கிடைத்ததாகவும் கூறப்படுகிறது. அதோடு அனில் அம்பானி இதை தற்போது விற்று காசு பார்க்க நினைக்கிறார் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.
லட்சாதிபதி!
கடந்த 2008ல் 42 பில்லியன் டாலர் சொத்துக்களை கொண்ட அனில் அம்பானி, அந்த சமயத்தில் உலகின் ஆறாவது பணக்காரராக இருந்தார். இந்த நிலையில் தற்போது லட்சாதிபதி எனும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். அதோடு அவரின் பங்கு மதிப்பு சுமார் 3651 கோடி ரூபாயாகவும் சரிந்துள்ளது. எனினும் கடந்த மார்ச் 2018ல் இந்த குழுமத்தின் கடன் 1.7 லட்சம் கோடி ரூபாயை கொண்டிருந்தது. இந்த நிலையில் தற்போது பல சொத்துக்களையும் வணிகங்களையும் விற்பனை செய்ததன் மூலம் இந்த நிறுவனம் தற்போது கடனை வெகுவாக குறைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications