டெல்லி : மானியமில்லாத சிலிண்டர்கள் 100 ரூபாய் குறைக்கப்பட்டு, தற்போது 637 ரூபாய்க்கு விற்பனையாகிறது என்று இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவித்துள்ளது.
சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை, சந்தை நிலவரத்துக்கு ஏற்ப அவ்வப்போது ஏற்ற இறங்கங்களை சந்தித்து வருகிறது. இந்த நிலையில் இன்று முதல் சிலிண்டர் ரூ.637-க்கு விற்பனை செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் மானியத்துடன் கூடிய சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையில் மாற்றமின்றி ரூ.494.35-க்கு விற்பனை செய்யப்படும் என்றும் எண்ணெய் நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த நிலையில் நேற்று நள்ளிரவு முதல் இந்த விலை குறைப்பு அமலுக்கு வந்துள்ளது. சர்வதேச சந்தையில் ஏற்பட்ட விலை மாற்றத்தின் காரணமாக இந்த விலை குறைப்பு ஏற்பட்டுள்ளதாக எரிவாயு நிறுவனங்கள் கூறியுள்ளன.
ஒரு குடும்பத்திற்கு ஓராண்டுக்கு மானியத்துடன் கூடிய 14.2 கிலோ எடையுள்ள எரிவாயு சிலிண்டர் 6 மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது, அதோடு இவ்வாறு பெறப்படும் 6 சிலிண்டர்களுக்கும் மட்டுமே 890 ரூபாய் கொடுத்து வாங்க வேண்டியிருந்தது.
அதேபோல் ஒரே நபர் பல பெயர்களில் சிலிண்டர் இணைப்பு வைத்திருத்தல், வெவ்வேறு முகவரியில் வெவ்வேறு ஏஜெஞ்சியில் இணைப்பு பெற்றிருப்பதை தடுக்கும் வகையில் புதிய எரிவாயு இணைப்பு, மானியம் இல்லாத சிலிண்டர் மட்டுமே வழங்க பெட் ரோலிய அமைச்சகம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது.
எனினும் மானிய சிலிண்டர்களின் எண்ணிக்கையை 6 லிருந்து 9 ஆக அதிகரிக்க மா நில அரசுகள் கோரிக்கை விடுத்து வந்தன. ஏனெனில் மானியம் இல்லாத சிலிண்டர்களின் விலை அதிகமாக இருப்பதால் இக்கோரிக்கையை விடுத்து வந்தன.
இந்த நிலையில் பெட்ரோலிய அமைச்சகமோ இது குறித்து எந்த விதமான கருத்தோ அல்லது அதிகாரப்பூர்வ அறிவிப்பையோ வெளியிடாத நிலையில் மானியம் இல்லாத சிலிண்டர்களின் விலையை குறைத்து தற்போது வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக மும்பையில் ரூ 608.50 பைசாகவும், சென்னையில் ரூ 652.50 பைசாகவும், கொல்கத்தாவில் ரூ 662.50 பைசாகவும் விற்பனை செய்யப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதே மானியத்துடன் கூடிய சிலிண்டர்களின் விலை தற்போது டெல்லியில் 494.35 ரூபாயாகவும், மும்பையில் 497.37 ரூபாயாகவும், கொல்கத்தாவில் 497.47 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
More From GoodReturns

எல்பிஜி பற்றாக்குறை.. பிணங்கள் எரியூட்டு தகன மேடைகள் மூடப்பட்டது.. நிலைமை மோசமாகிறதா..?!

தீவிரமடையும் சிலிண்டர் தட்டுப்பாடு: அவசர ஆலோசனை நடத்திய மோடி.. கமிட்டி அமைத்த மத்திய அரசு..!!

தமிழ்நாட்டில் LPG சிலிண்டர் விலை ஏன் அதிகம்? மும்பை, டெல்லியை விட ரூ.15–ரூ.25 அதிகம்..!

பெங்களூரு வித்யார்த்தி பவன்-க்கு வந்த நிலைமையை பாத்தீங்களா..? மோசமாகும் எல்பிஜி பற்றாக்குறை பிரச்சனை..!!

மக்களே இனி ஹோட்டல் பக்கமே போக முடியாது!! ஈரான் போரால் பிரியாணி முதல் பரோட்டா வரை விலை மாற போகுது!!

சிலிண்டர் தட்டுப்பாடு: சென்னை, பெங்களூருவில் ஹோட்டல்கள் மூடல்!! அப்போ வீட்டு உபயோக சிலிண்டர் நிலைமை?

மோடி இந்த பிரச்சனையை எப்படி சமாளிக்க போகிறார்..? தேர்தல் நெருங்கும் நேரத்தில் பெரும் சவால்..!!

சிலிண்டர் தட்டுப்பாடு: ESMA சட்டத்தை அமல்படுத்திய மத்திய அரசு!! இந்த தப்ப செஞ்சா 7 வருஷம் ஜெயில்!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!



Click it and Unblock the Notifications