கவலை படாதீங்க.. 2024ல் இலக்கை அடைந்து விடலாம்.. வாய்ப்புகள் நிறைய இருக்கு.. மோடி இருக்க பயமேன்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி : இந்தியாவின் பொருளாதார நிலை மிக கவலைக்கிடமான நிலையில் இருந்தாலும், அடுத்த 2024ம் ஆண்டு பொருளாதாரத்தினை 5 டிரில்லியன் டாலராக உயர்த்த வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்திருந்தார் பிரதமர் மோடி.

 

இந்த நிலையில் போகிற போக்கில் இது சாத்தியமா? என்றே சந்தேக பார்வையிலேயே பார்க்கப்பட்டு வருகிறது. ஆனால் பிரதமர் மோடி கடந்த வாரம் வெளியிட்டுள்ள அறிக்கையில் நமது இலக்கை அடைவது சாத்தியமானது தான்.

ஆனால் இதில் இரண்டு விஷயங்களை நாம் கவனிக்க வேண்டும். இது குறித்து பிரதமர் மோடி கூறியதாவது, நமக்கு இன்னும் இந்த நியாமான இலக்கை அடைவதற்கு இன்னும் வாய்ப்புகள் உள்ளன என்றும் கூறியுள்ளாராம்.

இரண்டு வாய்ப்புகளா?

இரண்டு வாய்ப்புகளா?

இந்த இரண்டு விஷயங்களில் முதலாவதாக சராசரியான உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தியை 7.1 முதல் 7.3 வரையிலேயே கொண்டு செல்ல வேண்டும். அதோடு சராசரி பெயரளவிலான ஜி.டி.பி 11.7 ஆக இருக்க வேண்டும் என்றும், இரண்டாவதாக இந்திய ரூபாயின் மதிப்பு. டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு நிலையானதாக 71 - 72 வரம்பிற்குள்ளேயே இருக்க வேண்டும். இதற்கு தற்போது இருக்கும் உலக பொருளாதாரமும் நமக்கு உறுதுணையாக இருக்கும் என்றும் கூறியுள்ளாராம்.

நடுத்தர கால வர்க்கம் சாதகமாக உள்ளது?

நடுத்தர கால வர்க்கம் சாதகமாக உள்ளது?

ஒரு புறம் சர்வதேச அளவிலான பொருளாதார வளர்ச்சி மந்தமான நிலையில் இருந்தாலும், மறுபுறம் அது இந்தியாவுக்கு சாகமாக இருக்கிறது. அதோடு இந்தியாவின் நடுத்தர கால பார்வை மிக ஆக்கபூர்வமாக உள்ளதாகவே நம்புகிறோம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலீடுகளை ஈர்க்கும்?
 

முதலீடுகளை ஈர்க்கும்?

இந்தியா முன்பை விட சாதகமான வெளிப்புற கொள்கைகளினால், பிரச்சனைகளை சமாளிக்கும் திறனை கொண்டுள்ளது. அதோடு மற்ற வளர்ந்து வரும் சந்தைகளோடு ஒப்பிடுபோது இந்தியா நல்ல மூறையில் வளர்ந்து வருகிறது. ஆக அன்னிய முதலீடுகளை ஈர்க்க இது சாதகமாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

வருமானத்தை அதிகரிக்க வேண்டும்?

வருமானத்தை அதிகரிக்க வேண்டும்?

அடுத்து தனி நபர் வருமானத்தை அடுத்த 2024 - 2025க்குள் இரடிப்பாக்க வேண்டும். குறிப்பாக 2024ல் இந்தியாவில் தனிநபர் வருமானம் 3500 டாலராகவும், இதுவே 2025ல் 4000 டாலராகவும் உயர்த்த வேண்டும். அதிலும் இந்தியா போன்ற முறைசாரா துறை வேலைவாய்ப்பு கொண்ட நாடுகளில், பொதுவாக தனி நபர் வருமானம் என்பது குறைவாகவும் இருக்கும் என்றும் கருதப்படுகிறது.

ஜி.எஸ்.டி கைகொடுக்கும்?

ஜி.எஸ்.டி கைகொடுக்கும்?

தனி நபர் பொருளாதாரத்தை அதிகரிக்க, அரசு கொள்கைகளை முறைப்படுத்துவதையே நோக்கமாக கொண்டுள்ளன. இதனால் தனிநபர் வருமானம் வளர்ச்சி காணும் என்றும் கருதப்படுகிறது. ஏற்கனவே இந்த முறையில் ஜி.எஸ்.டி மற்றும் டிமாண்டைசேஷன் (demonetisation) முறைகள் இதில் மிக கைகொடுக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஆர்.பி.ஐ பணவீக்க இலக்கு?

ஆர்.பி.ஐ பணவீக்க இலக்கு?

இந்திய ரிசர்வ் வங்கி பணவீக்க விகிதத்தை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்றும், இதற்கான இலக்கை ஆர்.பி. ஐ அடைவதற்காக உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

2024 சேமிப்பை உயர்த்த திட்டம்?

2024 சேமிப்பை உயர்த்த திட்டம்?

அடுத்த 2024க்குள் மொத்த வீட்டு சேமிப்பில், நிதி சேமிப்பின் பங்கு 2024ல் 50 இலக்கு வைக்க வேண்டும். அதோடு நடப்பில் இது 38.5 சதவிகிதமாக இருக்கிறது என்றும் கூறப்பட்டுள்ளது.

அன்னிய கையிருப்பை அதிகரிக்க வேண்டும்?

அன்னிய கையிருப்பை அதிகரிக்க வேண்டும்?

பொதுவாக வீட்டுக்கடன் பணவீக்கத்தினையும் குறைக்க வேண்டும். அதோடு அன்னிய கையிருப்பை உயர்த்த வேண்டும். தற்போது 425 பில்லியன் டாலாராக உள்ளது. இதுவே 2024 - 2025ல் 600 பில்லியன் டாலாராக உயர்த்த வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

India’s per capita income should rise to $3,500 by 2024, and als0 double to $4,000 by 2025

India’s per capita income should rise to $3,500 by 2024, and als0 double to $4,000 by 2025
Story first published: Monday, July 1, 2019, 10:47 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X