டெல்லி : நாளுக்கு நாள் இந்தியாவில் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் அதிகரித்து வரும் நிலையில், கடந்த 2019ம் ஆண்டில் மட்டும் ஜூன் மாதம் வரையிலான காலத்தில் முதலீடுகளை அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஆமாங்க கடந்த ஆறு மாதங்களில் மட்டும் முதலீட்டாளர்களிடமிருந்து 3.9 பில்லியன் டாலர்களை திரட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

உலகின் மிகப் பெரிய முதலீட்டாளர்களும் முதலீடுகளை அதிகரித்திருப்பதாகவும், அதிலும் கடந்த ஆண்டு பிளிப்கார்ட் - வால்மார்ட் ஒப்பந்தத்தால், இன்னும் முதலீடு அதிகரித்துள்ளதாகவும் கருதப்படுகிறது.
இந்த முதலீடுகள் 2018ம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் கிட்டதட்ட 292 ஒப்பந்தம் மூலம், 2.7 பில்லியன் டாலர்களை ஸ்டார்ட் அப்கள் முதலீடை பெற்றிருந்தன.
இதுவே 2018 - 2019ம் ஆண்டில் கிட்டதட்ட 4.2 பில்லியன் டாலர் முதலீடுகளை மட்டுமே பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் கடந்த 2016 - 2017லியே 4.3 பில்லியன் டாலர் முதலீட்டை மட்டுமே பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
அதிலும் கடந்த 6 மாதத்துடன் ஒப்பிடும் போது இது மிக அதிகமாகும். இதோடு இவ்வாறு அதிகரிக்கும் முதலீடுகளால் வர்த்தகங்கள் தொடர்ந்து நல்ல முறையில் வளரும் என்றும் கருதப்படுகிறது. அதோடு நல்ல லாபமும் அதிகரிக்கும் என்றும் கருதப்படுகிறது.
இந்த வகையில் குறிப்பாக நுகர்வோர் நிறுவனங்கள் தொடர்ந்து பெரிய அளவில் மூலதனத்தை திரட்டிக் கொண்டிருக்கின்றன என்றும் கூறப்பட்டுள்ளது. அதோடு பிசினஸ் டூ பிசினஸ் (business-to-business) நிறுவனங்களில் தளவாடங்கள் மற்றும் மென்பொரூள் துறை சார்ந்த நிறுவனங்கள் அதிக முதலீடுகளைக் பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
அண்மையில் டைகர் குளோபல் வெளியிட்டுள்ள அறிக்கையில், விண்வெளி குறித்தான ஸ்டார் அப்களில் ( பிசினஸ் டூ பிசினஸ் (business-to-business) நிறுவனங்கள்), முதலீட்டாளர்கள் தங்களது முதலீடுகளை செய்ய ஆர்வமாக உள்ளனர் என்றும் கூறியுள்ளது.
குறிப்பாக சீன முதலீட்டாளர்கள் வளர்ந்து வரும் நாடான இந்தியாவை இன்னும் அழுத்தமாக வளர்ச்சிக்கு தள்ளுகின்றன என்றும், அதாவது முதலீடுகளை அதிகரிப்பதன் மூலம் வளர்ச்சிக்கு வித்திடுகின்றன என்றும் கருதப்படுகிறது.
அதோடு தற்போது இந்த ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கான முதலீடு, முந்தைய காலகட்டங்களை ஒப்பிடும் போது தற்போது மிக அதிகம் என்றும், ஒரு முதலீட்டாளராக, நல்ல வணிகத்திற்கு சற்று அதிக விலை கொடுத்தேனும் பெறுவேன் என்றும் லைட் பாக்ஸில் நிறுவனத்தின் மூர்த்தி கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications