Maruti suzuki: இந்தியப் பொருளாதார சரிவுக்கு சாட்சி சொல்லும் மாருதி சுஸிகி..!

சுமார் 37 லட்சம் பேருக்கு வேலை கொடுக்கும் பெரிய துறை ஆட்டோமொபைல். இந்தியப் பொருளாதாரத்தில் 4.8 லட்சம் கோடி ரூபாய்க்கு வியாபாரம் கொடுக்கும் துறை ஆட்டோமொபைல்.

இந்தியப் பொருளாதாரத்தில் ஜிடிபி மதிப்பீட்டில் 7.5 சதவிகிதம் நம் ஆட்டோமொபைலின் பங்கு. இந்திய உற்பத்தித் துறையில் 49 சதவிகிதம் ஜிடிபியைக் கொடுக்கும் துறை இந்த ஆட்டோமொபைல்.

அதனால் தான் இந்தியாவில் ஆட்டோமொபைல் துறை சரிகிறது என்றால், மொத்த இந்தியப் பொருளாதாரமே சரிகிறது என்று சொல்கிறார்கள் அனலிஸ்டுகள். அந்த சரிவை அழுத்தமாகச் சொல்வது, இந்திய ஆட்டோமொபைல் துறையில் 50 சதவிகிதத்தை தன் வசம் வைத்திருக்கும் மாருதி சுஸிகி (Maruti suzuki)-யின் விற்பனை விவரங்கள் தான்.

விற்பனை சரிவு

விற்பனை சரிவு

அப்படி இந்திய ஆட்டோமொபைல் துறையின் மிகப் பெரிய நிறுவனம் மாருதி சுஸிகி (Maruti suzuki). இப்போது ஜூன் 2019 மாருதி சுஸிகி நிறுவன விற்பனை விவரங்கள் வெளிவந்திருக்கின்றன. மீண்டும் கடந்த ஜூன் 2018-ஐ விட 14 சதவிகிதம் விற்பனை சரிந்திருக்கிறது. கடந்த ஜூன் 2018-ல் 1,44,981 வாகனங்களை விற்றது மாருதி சுஸிகி (Maruti suzuki). ஆனால் இந்த ஜூன் 2019-ல் வெறும் 1,24,708 வாகனங்களை மட்டுமே விற்பனை செய்திருக்கிறது.

மினி செக்மெண்ட்

மினி செக்மெண்ட்

மாருதி சுஸிகி (Maruti suzuki) நிறுவனத்தின் உள்நாட்டு வியாபாரத்தை மட்டும் கணக்கில் எடுத்துக் கொண்டால், கடந்த ஜூன் 2018-ல் 1,35,662 வாகனங்களை விற்றிருக்கிறார்கள். ஜூன் 2019-ல் வெறும் 1,14,861 வாகனங்களை விற்றிருக்கிறார்கள். சுமார் 15 சதவிகிதம் சரிவு. மாருதி சுஸிகி (Maruti suzuki)-ன் மினி செக்மண்ட் கார்களான ஆல்டோ மற்றும் வேகனார் ரக கார்களின் விற்பனையே ஜூன் 2018-ஐ விட 36.2 சதவிகிதம் குறைவாக விற்பனை செய்திருக்கிறார்களாம். ஜூன் 2018-ல் 29,381 கார்கள். ஜூன் 2019-ல் 18,733 கார்கள் விற்பனை செய்திருக்கிறார்களாம்.

காம்பெக்ட்

காம்பெக்ட்

மாருதி சுஸிகி (Maruti suzuki) நிறுவனத்தின் காம்பேக்ட் ரக வாகனங்களான புதிய வேகனார், செலிரியோ, இக்னிஸ், ஸ்விஃப்ட், பலேனோ, டிசையர் போன்ற கார்களின் வியாபாரமும் கடந்த ஜூன் 2018-ஐக் காட்டிலும் ஜூன் 2019-ல் 12.1 சதவிகித விற்பனைச் சரிவைச் சந்தித்திருக்கிறதாம். ஜூன் 2018-ல் 71,570 கார்கள், ஜூன் 2019-ல் 62,897 கார்கள் விற்பனை செய்திருக்கிறார்களாம்.. செடான் ரக சியாஸ் கார்கள் மாருதியின் நடுத்தர கார்களில் ஒன்றாக வருகின்றன. இந்த கார்களின் விற்பனை கடந்த ஜூன் 2018-ஐ விட ஜூன் 2019-ல் சுமார் 47 சதவிகிதம் அதிகரித்திருக்கிறதாம். ஜூன் 2018-ல் 1,579 கார்கள், ஜூன் 2019-ல் 2,322 கார்கள் விற்பனையாகி இருக்கிறதாம்.

வணிக வாகனம்

வணிக வாகனம்

மாருதி சுஸிகி (Maruti suzuki) நிறுவனத்தின் ஜிப்ஸி, எர்டிகா, விட்டாரா ப்ரஸ்ஸா, எஸ் க்ராஸ் போன்ற யுடிலிட்டி ரக கார்களின் விற்பனை கடந்த ஜூன் 2018-ஐ விட ஜூன் 2019-ல் சுமார் 8 சதவிகிதம் சரிந்திருக்கிறதாம். ஜூன் 2018-ல் 19,321 கார்கள், ஜூன் 2019-ல் 17,797 கார்கள் விற்பனை செய்திருக்கிறார்களாம். இது போக மாருதி சுஸிகி நிறுவனத்தின் வேன் ரகங்களான ஆம்னி, ஈகோ ரகங்கள் ஜூன் 2018-ஐ விட ஜூன் 2019-ல் 24% சரிந்திருக்கிறது. வணிக வாகனமாக விற்கப்படும் மாருதி சுஸிகியின் சூப்பர் கேரி ரக வாகனங்கள் ஆச்சர்யமாக கடந்த ஜூன் 2018-ஐ விட ஜூன் 2019-ல் 24 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது. ஜூன் 2018-ல் 1,626 ஜூன் 2019-ல் 2,017 வாகனங்களை விற்றிருக்கிறார்களாம். மாருதி சுஸிகி (Maruti suzuki)-ன் ஏற்றுமதியும் கடந்த ஜூன் 2018-ஐ விட ஜூன் 2019-ல் 5.7 சதவிகிதம் அதிகரித்திருக்கிறதாம். ஜூன் 2018-ல் 9,319 ஜூன் 2019-ல் 9,847 வாகனங்களை ஏற்றுமதி செய்திருக்கிறார்களாம்.

மந்த நிலை

மந்த நிலை

கடந்த சில மாதங்களாக நிலவும் மந்த நிலையை இப்போதும் இந்தியப் பொருளாதாரத்தில் உணர முடிகிறது. ஒருவருக்கு கிடைக்கும் பணத்தில் முதலில் தன் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வார்கள். அதன் பின் சில ஆயிரம் ரூபாயில் பூர்த்தியாகும் செல் போன், டிவி, ஃப்ரிட்ஜ், வாசிங் மிஷின், பள்ளிக் கட்டணம், கல்லூரிக் கட்டணம்.... போன்றவைகளை பூர்த்தி செய்து கொள்வார்கள். அதுவும் பூர்த்தி ஆகும் பட்சத்தில் ஒரு லட்சம் ரூபாய்க்குள் சரியாகும் பிரச்னைகள், இருசக்கர வாகனங்களை எல்லாம் பூர்த்தி செய்து கொள்வார்கள். அத்தனையும் பூர்த்தி ஆன பின்னும் உபரிப் பணம் இருந்தால் தான் காருக்குச் செல்வார்கள். ஆக கார் விற்பனை தொடர்ந்து பல மாதங்களாக குறைகிறது என்றால், இந்தியாவில் பண புழக்கம் குறைந்து கொண்டே வருகிறது என்று பொருள். அதனால் ஒட்டு மொத்தப் பொருளாதாரமுமே கொஞ்சம் பெரிய அடிவாங்கப் போகிறது என்று பொருள்.

இந்தியப் பொருளாதாரத்தின் சரிவுக்கு ரத்த சாட்சியமாகவும், இந்தியப் பொருளாதார மந்த நிலைக்கு மனசாட்சியாகவும் தனியாக நிற்கிறது மாருதி சுஸிகி (Maruti suzuki).

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+