மும்பை: பணமதிப்பிழப்பு நடவடிக்கைகளுக்குப் பின் இந்த NEFT & RTGS பயன்பாடுகள் பெரிய அளவில் அதிகரித்திருப்பதை ஆர்பிஐயின் அறிக்கைகள் சொல்கின்றன.
அந்த டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்க NEFT & RTGS போன்ற வெகு ஜன மக்கள் பயன்படுத்தும் ஆன்லைன் பேமெண்ட் முறைகளுக்கு ஆர்பிஐ வசூலிக்கும் கட்டணத்தை இனி (ஜூலை 01, 2019 முதல்) வசூலிக்கப் போவதில்லை எனச் சொல்லி இருக்கிறது மத்திய ரிசர்வ் வங்கி.
அதோடு ஆர்பிஐ வசூலிக்காத கட்டணங்களை வாடிக்கையாளர்களிடம் வசூலிக்காமல், இந்த பயனை மக்களுக்கு சென்றடையும் படி தங்கள் NEFT & RTGS கட்டணங்களைக் குறைக்குமாறும் ஆர்பிஐ அறிவுறுத்தி இருக்கிறது.
NEFT
தற்போது இந்தியாவில் இரண்டு லட்சம் ரூபாய்க்குள் பணப் பரிமாற்றம் செய்ய வேண்டுமென்றால் அதற்கு NEFT பெரிய அளவில் பயன்படுத்தப்படுகிறது. இதுவரை இந்தியாவின் மிகப் பெரிய அரசு வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, NEFT பணப் பரிவர்த்தனைகளுக்கு 2.50 ரூபாய் முதல் 25 ரூபாய் வரை பணப் பரிமாற்றம் செய்யும் தொகையைப் பொறுத்து கட்டணம் வசூலித்து வந்தன. இனி ஆர்பிஐ இந்த NEFT பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்கப் போவதில்லை என்பதால் கட்டணம் பெரிய அளவில் இன்றில் இருந்தே குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
RTGS
பொதுவாகவே RTGS 2 லட்சம் ரூபாய்க்கு மேல் பணப் பரிமாற்றம் செய்யும் பெரிய தொகைகளுக்குத் தான் பயன்படுத்தப்படுகின்றன. இந்த RTGS முறையிலான பணப் பரிமாற்றங்களுக்கு 25 ரூபாய் முதல் 56 ரூபாய் வரை பணப் பரிமாற்றம் செய்யும் தொகையைப் பொறுத்து வசூலிக்கிறது ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா. இந்த RTGS முறையிலும் ஆர்பிஐ தன் கட்டணத்தை வசூலிக்கப் போவதில்லை என்பதால் இதிலும் கணிசமாக கட்டணம் குறையும் என எதிர்பார்க்கிறார்கள் வங்கி வாடிக்கையாளர்கள்.
ஏடிஎம் கட்டணம்
மத்திய ரிசர்வ் வங்கி அதோடு நிற்காமல், இந்திய வங்கிகள் சங்க முதன்மைச் செயல் அதிகாரி வி ஜி கண்ணன் தலைமையில், மக்கள் அதிகம் பயன்படுத்தும் ஏடிஎம் மற்றும் டெபிட் கார்டுகள் மீது வசூலிக்கப்படும் கட்டணங்களைக் குறித்து ஆய்வு செய்ய ஒரு உயர் மட்ட கமிட்டியையும் அமைத்திருக்கிறார்களாம். ஆக கூடிய விரைவில் ஏடிஎம் கட்டணங்களில் ஏதாவது நல்ல மாற்றங்கள் வரும் என எதிர்பார்க்கிறார்கள் சாதாரண மக்கள்.
ஏடிஎம் கோரிக்கை
ஏன் திடீரென ஏடிஎம் கார்டுகள் மற்றும் டெபிட் கார்ட் கட்டணங்களுக்கு உயர் மட்ட கமிட்டி அமைக்கிறது ஆர்பிஐ எனக் கேட்டால்... நாளுக்கு நாள் வளர்ந்து வரும் ஏடிஎம் பயன்பாட்டை சுட்டிக் காட்டுகிறார்கள் ஆர்பிஐ அதிகாரிகள். அதோடு பல காலமாக தொடர்ந்து ஏடிஎம் கட்டணங்களை மாற்றவும் கோரிக்கைகள் வந்து கொண்டே இருப்பதையும் காரணமாகச் சொல்கிறது ஆர்பிஐ. எப்படியோ நல்லது நடந்தால் சரி. வாழ்க டிஜிட்டல் இந்தியா.
More From GoodReturns

Gold loan: ஆர்பிஐ கொண்டு வந்துள்ள ”7 நாட்கள்” விதி!! தங்க நகை கடன் வாங்குவோருக்கு மேஜர் அப்டேட்!!

வீட்டு கடன், வாகன கடன் வட்டி குறையுமா? மும்பையில் ரிசர்வ் வங்கி அதிகாரிகள் தீவிர ஆலோசனை..!!

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!



Click it and Unblock the Notifications