டெல்லி: தொலைத் தொடர்பு நிறுவனங்கள் ஏற்கனவே ஜியோவால் திண்டாடி வரும் நிலையில், பல நிறுவனங்கள் காணமல் போய் விட்டன. இந்த நிலையில் டாடா டெலிசர்வீசஸ் நுகர்வோர் மொபைல் வர்த்தகத்தை, பார்தி ஏர்டெல் நிறுவனம் முழுமையாக கையகப்படுத்தியுள்ளது.
இது குறித்து இந்த இரு நிறுவனங்களும் வெளியிட்டுள்ள அறிக்கையில், டாடா டெலிசர்வீசஸ் (Tata Teleservices Limited ) மற்றும் டாடா டெலிசர்வீசஸ் மஹாராஷ்டிரா (Tata Teleservices (Maharashtra) Limited ) நிறுவனத்தை பார்தி ஏர்டெல் மற்றும் பார்தி ஹெக்ஸாகாம் ஆகியவற்றுடன் இணைக்கும் நடவடிக்கை கடந்த திங்கட்கிழமை முழுமையாக நிறைவடைந்ததாக இந்த நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

இந்த நிலையில் டாடா டெலிசர்வீசஸ் மற்றும் டாடா டெலிசர்வீசஸ் மஹாராஷ்டிரா நிறுவனங்களுக்கு சொந்தமான அனைத்து வாடிக்கையாளர்கள், சொத்துகள் மற்றும் அலைகற்றை உள்ளிட்ட அனைத்தும் பார்தி ஏர்டெல் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் இந்த நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
ஏர்டெல் நிறுவனம் டாடா டெலி சர்வீசஸ் நிறுவனத்தை கையகப்படுத்தியதையடுத்து, டாடா டெலிசர்வீசஸ் நிறுவனத்திற்கு சொந்தமான 19 தொலைத் தொடர்பு வட்டங்களில் உள்ள செயல்பாடுகள் அனைத்தும் பார்தி ஏர்டெலுக்கு சொந்தமாகியுள்ளது.
இந்த இணைப்பின் மூலம் பார்தி ஏர்டெல் அலைகற்றை மேலும் வலுவடையும் என்றும் கருதப்படுகிறது.
இந்த நிலையில், ஏற்கனவே தொலைத் தொடர்பு துறையில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோவின் போட்டியை சமாளிக்க முடியாமல் கடந்த மாதம் பல வாடிக்கையாளர்களை இழந்ததாகவும் ஜியோ அறிவித்துள்ளது.
இதனால் ஜியோ நிறுவனத்திற்கு போட்டி போட முடியாவிட்டாலும் அதற்குண்டான நடவடிக்கைகளில் ஏர்டெல் நிறுவனம் மேற்கொண்டுள்ளது குறிப்பிடதக்கது. ஒரு புறம் வாடிக்கையாளர்கள் இழந்து வந்தாலும் ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் மிக வலுவாக தனது ஏர்டெல் நிறுவனத்தை அடித்தளமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனால் இந்தியாவில் பார்தி ஏர்டெல் நிறுவனத்திற்கு நஷ்டம் என்றாலும், வெளி நாடுகளில் முன்னிலை வகித்து வருவதால் இந்த நஷ்டத்தினை ஈடுகட்டியதாகவும் ஏர்டெல் முன்னரே அறிவித்தது.
இந்த நிலையில் ஏர்டெல் நிறுவனம் இந்தியாவில் தற்போது தான் விரிவாக்க பணிகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத் தக்கது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications