ஜூலை 5ஆம் தேதி தாக்கல் செய்யவிருக்கும் முழு பட்ஜெட்டுக்கு முன்னோட்டமாக சொல்லப்படும் நாட்டின் பொருளதார ஆய்வறிக்கையை புதிய தலைமை பொருளாதார ஆலோசகர் கே.வி.சுப்ரமணியன்
டெல்லி: நடப்பு 2019-20ஆம் ஆண்டுக்கான முழு பட்ஜெட் ஜூலை 5ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. பட்ஜெட்டிற்கு முன்னோட்டமாக சொல்லப்படும் நாட்டின் பொருளதார ஆய்வறிக்கையை வரும் வியாழனன்று தலைமை பொருளாதார ஆலோசகர் கே.வி.சுப்ரமணியன் லோக்சபாவில் தாக்கல் செய்யவிருக்கிறார்.
தலைமை பொருளாதார ஆலோசகராக நியமிக்கப்பட்ட பின்னர் கே.வி. சுப்ரமணியன் தாக்கல் செய்யவிருக்கும் முதல் பொருளாதார ஆய்வறிக்கை என்பதோடு பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி இரண்டாம் முறையாக வெற்றிபெற்று ஆட்சிப் பொறுப்பேற்ற பின்பு தாக்கல் செய்யப்படவிருக்கும் முதல் பொருளாதார ஆய்வறிக்கை என்ற பெருமையும் சேரும்.
ஒவ்வொரு ஆண்டும் தாக்கல் செய்யும் பொருளாதார ஆய்வறிக்கையை வைத்தே அடுத்து வரும் ஆண்டில் நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி, கட்டமைப்பு, தொழில்வளர்ச்சி மற்றும் அதனோடு தொடர்புடைய வேலைவாய்ப்பு என அனைத்தும் நிர்ணயம் செய்யப்படும் என்பதால் பொருளாதார ஆய்வறிக்கை என்பது அனைத்து தரப்பினராலும் ஆவலோடு எதிர்பார்க்கப்படுகிறது.
செக் லிஸ்ட்
தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கும் ஒரு நபருக்கு என்னென்ன வியாதிகள் உள்ளன, அதற்காக எடுக்கப்பட்ட சிகிச்சைகள் என்ன, அடுத்து அவருக்கு என்ன மாதிரியான சிகிச்சை தேவைப்படுகிறது. ஒருவேளை அந்த சிகிச்சையை அளித்தால் அவர் பிழைப்பாரா மாட்டாரா என்ற அனைத்து விவரங்களும் அடங்கிய ஒரு பட்டியல் (check list) அவருடைய கால்மாட்டில் தொங்கவிடப்பட்டிருக்கும். அடுத்து வரும் மருத்துவர் அந்த பட்டியலைப் பார்த்து அதற்கேற்ப சிகிச்சையை தொடருவார்.
போன வருஷம் என்ன நடந்தது
அதுபோலவே, நாட்டின் பொருளாதார ஆய்வறிக்கையும். முந்தைய நிதியாண்டில் திட்டமிடப்பட்ட பொருளாதார வளர்ச்சி இலக்கு என்ன, நிதிக்கொள்கைகள் என்ன, பட்ஜெட் எதிர்பார்ப்புகள் என்ன, அவை முழுவதும் நிறைவேற்றப்பட்டள்ளதா இல்லையா என அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய ஆய்வறிக்கையாகும். இதன் அடிப்படையிலேயே அடுத்து வரும் நிதியாண்டுக்கான பட்ஜெட்டும் இருக்கும் என்பது நிதித்துறை சம்பந்தப்பட்ட பெரும்பாலானவர்களுக்கும் தெரியும்.
முழு பட்ஜெட் தாக்கல்
முந்தைய தேசிய ஜனநாயக கூட்டணியின் ஐந்து ஆண்டுகால ஆட்சியின் கடைசி பட்ஜெட் என்பதால் கடந்த பிப்ரவரி மாதத்தில் இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்பட்டது. இதனால் அப்போது பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை. தற்போது லோக்சபாத் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியே ஆட்சியில் அமர்ந்துள்ளது. இதனையடுத்து வரும் நிதியமைச்சரான நிர்மலா சீதாராமன், வரும் ஜூலை 5ஆம் தேதியன்று நடப்பு 2019-20ஆம் ஆண்டுக்கான முழு பட்ஜெட் தாக்கல் செய்ய இருக்கிறார்.
புதிய பொருளாதார ஆலோசகர்
பட்ஜெட் தாக்கலுக்கு முன்னோட்டமாக கடந்த 2018-19ஆம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கை லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த ஆய்வறிக்கையை இந்தியாவின் தலைமை பொருளாதார ஆலோசகர் கே.வி.சுப்ரமணியன் தாக்கல் செய்யப்போகிறார். இவர் தாக்கல் செய்யும் முதல் பொருளாதார ஆய்வறிக்கை என்பதால் ஆர்வத்தோடு காத்திருப்பதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இவர் கடந்த டிசம்பர் மாதம்தான் தலைமை பொருளாதார ஆலோசகர் பதவிக்கு கொண்டவரப்பட்டார். இவருக்கு முன்பு இந்தப் பதவியில் இருந்த அர்விந்த் சுப்ரமணியன் தனிப்பட்ட காரணங்களுக்காக அந்தப் பதவியில் இருந்து ராஜினாமா செய்துவிட்டதால், அவருக்கு பதிலாக கே.வி.சுப்ரமணியன் கொண்டுவரப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பொய்த்துப்போன எதிர்பார்ப்பு
கடந்த 2018-19ஆம் ஆண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி நிச்சயமாக 7.5 சதவிகிதத்தை தொடும் என்று உள்ளூர் நிபுணர்கள் முதல் உலக வங்கியின் பொருளாதார நிபுணர்கள் வரை அனைவருமே கற்பூரம் அடித்து சத்தியம் செய்திருந்தனர். ஆனால் அவர்கள் அனைவரின் எதிர்பார்ப்பையும் மீறி நாட்டின் பொருளாதார வளர்ச்சி கடந்த 2018-19ஆம் நிதியாண்டில் 6.8 சதவிகிதமாக சரிந்து விட்டது.
தள்ளாட்டத்தில் தொழில் வளர்ச்சி
அதோடு, கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வேலையில்லாத் திண்டாட்டமும் அதிகரித்துவிட்டது. மொத்த பணவீக்க விகிதம் அதிகரித்ததோடு, விவசாய உற்பத்தியும், தொழில் வளர்ச்சியும் சரிந்துவிட்டது. தொழில் வளர்ச்சி மற்றும் பணப்புழக்கத்தை அதிகரிக்கும் விதமாகவே ரிசர்வ் வங்கியின் வட்டி விகிதம் கடந்த 2018-19ஆம் நிதியாண்டின் பிப்ரவரி மாதத்தில் 0.25 சதவிகிதமும், நடப்பு நிதியாண்டில் ஏப்ரலில் 0.25 சதவிகிதமும், ஜூன் மாதத்தில் 0.25 சதவிகிதம் என இரண்டு முறை வட்டி விகிதம் குறைக்கப்பட்டது. இருந்தாலும் நாட்டின் தொழில்வளர்ச்சி தள்ளாட்டத்திலேயே உள்ளது.
மோடியின் எண்ணம் நிறைவேறுமா
எனவே, இதையெல்லாம் அலசி ஆராய்ந்து பார்த்து, நடப்பு நிதியாண்டில் மோடி எதிர்பார்க்கும் மேஜிக் எண்ணான 7.5 சதவிகிதம் என்ற உயரத்தை எட்டும் வகையில், விவசாய வளர்ச்சி மற்றும் தொழில் வளர்ச்சியை அதிகரிப்பதோடு, வேலை வாய்ப்பினை அதிகரிக்கும் வகையில் நல்ல திட்டங்களை அறிவித்து மோடியின் குட்புக்கில் இடம்பெறுவாரா என்பது வரும் வியாழனன்று தெரிந்துவிடும்.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications