டெல்லி : நாட்டில் ஒரு புறம் வேலையில்லாத் திண்டாட்டம், மறுபுறம் பொருளாதார பிரச்சனை என்பது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்லும் இந்த நிலையில், கீழ் தட்டு மக்கள் அன்றாட தேவைக்கே கஷ்டப்படும் நிலை நிலவி வருகிறது.
இந்த நிலையில் மத்திய அரசின் மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சர் மகேந்திர நாத் பாண்டே, வரும் மாதங்களில் 2.5 லட்சம் புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
தற்போது, உலகளாவிய அளவில் ஒப்பிடும்போது கிளவுட் கம்பியூட்டிங் சந்தையில் இந்தியா பெரிய அளவில் சவாலை கண்டு வருகிறது.
$7.1 பில்லியன் இலக்கு!
இந்தியா டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் விரைவான முன்னேற்றங்களால், இந்தியாவின் கிளவுட் கம்யூட்டிங் சந்தையில் 2022ம் ஆண்டில் 7.1 பில்லியன் டாலர் அளவுக்கு (இந்திய ரூபாயில் கிட்டத்தட்ட 49,000 கோடி) அளவுக்கு விரிவடையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதுவே கடந்த 2018ம் ஆண்டில் 2.5 பில்லியன் டாலர் (ரூ.17250 கோடி) இருந்தது குறிப்பிடத்தக்கது.
நான்காவது தொழில் புரட்சி!
அதோடு வரவிருக்கும் ஆண்டுகளில் இந்தியா தகவல் தொழில் நுட்ப துறையில் மற்ற நாடுகளுடன் தோலோடு தோல் சேர்ந்து நிற்கும் என்றும் கூறியுள்ளது. அதோடு நவீன அறிவு மற்றும் திறன் கொண்ட இளைஞர்களை வாருங்கள் நான்காவது தொழில் புரட்சியை ஏற்படுத்துவோம் என்றும் கூறியுள்ளார்.
டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் பயிற்சி!
இது குறித்து நாஸ்காம் தலைவர் கேசவ் முருகேஷ் விரைவில் பாதுகாப்பு மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறிவேற்றுமாறும் அரசாங்கத்திடம் கேட்டுக் கொண்டார். அட்ஹோடு தற்போது 0.6 மில்லியன் மக்கள் மட்டுமே மட்டுமே டிஜிட்டல் துறையில் பயிற்சி பெற்றவர்களாக இருக்கிறார். இது அடுத்த மூன்று நான்கு ஆண்டுகளில் 2 மில்லியன் மக்களுக்கு டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் பயிற்சி அளிக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
கிளவுட் கம்யூட்டிங்கில் பங்கேற்கிறது?
குறிப்பாக ஜப்பான், சீனா, பிரேசில், தென் கொரியா, ரஷ்யா, சிங்கப்பூர், பெல்ஜியம் மற்றும் அயர்லாந்து உள்ளிட்ட நாடுகளை சேர்ந்தவர்கள் நாஸ்காமின் உதவியுடன் கிளவுட் போட்டியில் பங்கேற்கிறது.


Click it and Unblock the Notifications