எண்ணெய் வாங்காவிட்டால் என்ன.. இந்தியா எங்களது நண்பன்.. ஈரான் இந்தியாவின் பாதுகாவலராக செயல்படும்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: என்னதான் அமெரிக்கா- ஈரான் குடுமிப்பிடி சண்டை போட்டு வந்தாலும், இரு நாடுகளும் அடித்துக் கொண்டாலும், இந்தியா ஈரான் உறவோ, மறுபுறம் அமெரிக்கா- இந்தியா உறவோ எந்த வகையிலும் பாதிக்கப்படவில்லை.

 

இந்த நிலையில் அமெரிக்கா மற்ற நாடுகளையும் ஈரானிடமிருந்து எண்ணெய் வாங்க கூடாது என்று அதிரடியாக கூறி வந்தது. மீறி வாங்கினால் அவர்களின் மீதும் பொருளாதார தடை விதிக்கப் போவதாக கூறி வந்தது.

இந்த நிலையில் இந்தியாவும் வேறு வழியில்லாமல் ஈரானிடம் எண்ணெய் வாங்குவதை நிறுத்திக் கொண்டது. இதனால் ஈரான் பொருளாதார ரீதியில் மிக பாதிப்படைந்து வருவது குறிப்பிடத்தக்கது. என்னதான் இந்தியா ஈரானிடம் எண்ணெய் வாங்குவதை நிறுத்திக் கொண்டாலும், இந்தியாவுக்கும் ஈரானுக்கும் இடையே ஒரு சூமுகமான உறவே போய்க் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஈரான் இந்தியாவுக்கு பாதுகாவலாக இருக்கும்?

ஈரான் இந்தியாவுக்கு பாதுகாவலாக இருக்கும்?

ஒரு புறம் அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் பிரச்சனைகள் இருந்து வந்தாலும், இந்தியா தனது சொந்த நலனுக்காக செயல்படும் என்று நாங்கள் நினைக்கிறோம். அதுபோல ஈரான் இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பின் "பாதுகாவலராக" செயல்பட முடியும் என்று ஈரான் நம்புகிறது.

பாதுகாப்பான இறக்குமதி?

பாதுகாப்பான இறக்குமதி?

இது குறித்து இந்தியாவுக்கான ஈரானின் தூதர் அலி செகேனி, ஈரான் எப்போதும் இந்தியாவுக்கு மலிவு விலையில் எண்ணெய் இறக்குமதி செய்ய முடியும், அதோடு இந்தியாவுக்கு தேவையான பாதுகாப்பினையும் தர முடியும் என்றும் கூறியுள்ளார். அதோடு இந்தியா அமெரிக்காவின் பொருளாதார தடைகளை தவிர்ப்பதற்காக, இந்தியா மற்றும் பிற நாடுகளுடன் பொருளாதார நாடுகளுடன் எண்ணெய் வர்த்தகத்திற்கு, ரூபாய் மற்றும் ஐரோப்பிய முறைகளை பயன்படுத்துவதற்கான வாய்ப்பையும் ஈரானிய தூதர் குறிப்பிட்டுள்ளனர்.

பொருளாதார தடைகள்?
 

பொருளாதார தடைகள்?

இந்தியா ஈரானிடம் எண்ணெய் வாங்குவதை தடுக்க பொருளாதார தடைகளை தவிர்பதற்காக, அமெரிக்காவின் வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ, டெல்லிக்கு கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்காக அமெரிக்கா உறுதி செய்து வருகிறது. அதோடு ஈரானிடமிருந்து எண்ணெய் இறக்குமதி செய்ய இந்தியா கடினமான தேர்வுகளைக் மேற்கொண்டதாக கூறுகிறது. இந்த நிலையில் கடந்த வாரம் மைக் பாம்பியோவுடன் சந்திப்பில் ஜெய்சங்கர் கூறிய கருத்துக்களையும் செகேனி நினைவுப்படுத்தினர். இந்தியாவுக்கு ஈரான் மட்டுமே மலிவு விலையில் தர முடியும், பாதுகாப்பாகவும் தர முடியும் என்றும் இந்தியா கூறியதை நினைவு படுத்தினார்.

நாங்கள் ஒருவருகொருவர் புரிந்துக் கொண்டோம்?

நாங்கள் ஒருவருகொருவர் புரிந்துக் கொண்டோம்?

அதோடு ஈரான், இந்தியா எங்களுக்கு நண்பன். அதோடு நாங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டோம். அதோடு நமது தேசிய நலனுக்காக செயல்படும். அதோடு இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பை பாதுகாப்பவராக ஈரான் இருக்கும் என்றும், ஈரான் இந்தியா கலாச்சார விழாவின் போது செகேனா கூறியுள்ளார்.

ஈரானுக்கு எதிராக எந்த சமிக்கையும் இல்லை?

ஈரானுக்கு எதிராக எந்த சமிக்கையும் இல்லை?

அமெரிக்காவால், ஈரான் - இந்தியா இடையேயான இறக்குமதி பாதிக்கப்பட்டிருக்கலாம். எனினும், இந்தியாவிடமிருந்து ஈரானுக்கு எதிராக எந்தவித சமிக்கையும் வரவில்லை. இந்த இரு நாடுகளுக்கு இடையே இறக்குமதி நிறுத்தப்பட்டிருக்கலாம். ஆனால் ஈரானுக்கும் இந்தியாவில் இருந்து எந்தவித எதிர்மறையான எதுவும் கிடைக்கவில்லை. அதோடு இந்தியா அழுத்தத்தில் இருப்பதாக நாங்கள் நினைக்கிறோம். அதோடு இந்தியாவின் மற்ற நாடுகளான் இந்தியாவின் உறவுகள் நம்மைப் பாதிக்காது. இந்தியாவுடனான எங்கள் உறவுகள் என்றும் எங்களை பாதிக்காது என்றும் ஈரான் அறிவித்துள்ளது.

அதிகாரப்பூர்வமற்றதாகவும் வாங்கிக் கொள்ளலாம்?

அதிகாரப்பூர்வமற்றதாகவும் வாங்கிக் கொள்ளலாம்?

இந்தியா - ஈரானின் எண்ணெய் பிரச்சனை, இந்த இரு நாடுகளின் பிரச்சனையை என்றுமே பாதிக்காது. பல நாடுகள் எங்களிடம் எண்ணெய் அதிகாரப்பூர்மாகவும், அதிகாரபூர்வமற்றதாகவும் வாங்குகிறார்கள். எண்ணெய் இலக்குகள் இரகசியமாக வைக்கப்படுள்ளது. ஈரானுடனான இந்தியாவின் வர்த்தக உறவு மேலும் விரிவடையும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. கடந்த ஏப்ரல் வரையிலான காலத்தில் இரு தரப்பு வர்த்தகம் 18 பில்லியனாக இருந்தது. இது முந்தைய காலத்தில் 13.7 பில்லியனாக இருக்கும் என்றும் கூறியுள்ளது ஈரான்.

 வணிக ரீதியாக பிரச்சனை?

வணிக ரீதியாக பிரச்சனை?

இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு வணிக ரீதியான கருத்தாய்வு, மற்றும் பொருளாதார நலங்கள் ஆகிய மூன்று காரணிகளின் அடிப்படையில் இந்த பிரச்சனைகளை கையாள்வதாக இந்தியா கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: iran ஈரான்
English summary

Iran is ready for being the protector of energy security of India

Iran is ready for being the protector of energy security of India
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X