சென்னை : என்ன தான் ஆங்காங்கே இன்று பல இயற்கை அங்காடிகள் தோன்றினாலும், அவற்றில் பல இன்னும் பிளாஸ்டிக் பாட்டில்களையும், பாலிதீன் கவர்களையுமே பயன்படுத்தி பேக்கிங் செய்து வருகின்றனர் இந்த இயற்கை அங்காடியினர்.
இந்த நிலையில் இயற்கை அங்காடி என்றாலும், அதிலும் மாற்றம் வேண்டும் என்கிறார் பிரேம் ஆண்டனி. அதோடு பிளாஸ்டிக் இல்லா உலகத்திற்கு தன்னால் முடிந்ததை செய்ய வேண்டும் என்றும் கூறுகிறார்கள் சென்னையை சேர்ந்த இந்த நண்பர்கள் குழு.
இந்த வகையில் சென்னையை சேர்ந்த பிரேம் ஆண்டணியும் அவரது நண்பர் பிரதீப் குமாரும் இணைந்து நடத்தி வரும் ஆன்லைன் மற்றும் சில்லறை வர்த்தக கடைதான் ecoindian.com.
என்ன மாற்றம்?
இது குறித்து இந்த கடையின் உரிமையாளர்களான பிரேம் ஆண்டனி மற்றும் பிரதீப் குமார் கூறுகையில், நாங்கள் முன்னர் அடையாரில் இந்த இயற்கை அங்காடி கடையை வைத்திருந்தோம். ஆனால் எல்லோரையும் போல பிளாஸ்டிக் பேக்குகளிலும், பாலீதீன் கவர்களிலும் தான் பேக் செய்து கொடுத்து வந்தோம். ஆனால் பிளாஸ்டிக்கை தவிர்க்க வேண்டும் என்பதற்காக தான், மறுசீரமைக்கும் கண்ணாடி பாட்டில்களையே, தற்போது பொருட்களை ஸ்டோர் செய்து வைப்பதற்காக உபயோகப்படுத்தி வருகிறோம் என்கிறார்கள்.
கொள்முதல்?
இங்கு விற்கப்படும் பொருட்கள் அனைத்தும் இயற்கை விவசாயத்தின் மூலம் விளைவிக்கப்படும் பொருட்கள் என்றும் கூறுகிறார்கள். அனைத்து வீட்டு உபயோகப்பொருட்கள் கோம்கேர் பொருட்கள், மறுசீரமைக்கும் நாப்கின்கள், காஸ்மெடிக் பொருட்கள், ஆண்கள் பெண்களுக்கான ஆடைகள் என அனைத்தும் ஆர்கானிக் சம்பந்தமான பொருட்களாகவே உள்ளன.
கண்டெய்னர்களை கொண்டு வருபவர்களுக்கு தள்ளுபடி!
பிளாஸ்டிக் உபயோகத்தை தவிர்க்கும் வகையிலும், இயற்கையை ஊக்குவிக்கும் வகையிலும் பொருட்களை பேக்கிங் செய்ய பேப்பர்கள் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. லிக்விட் பொருட்களுக்கு கண்ணாடி கண்டெய்னர்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவெனில், மக்களை ஊக்குவிப்பதற்காக வீட்டிலிருந்து கண்டெய்னர் பாக்ஸ் கொண்டு வருபவர்களுக்கு 5 சதவிகிதம் வரை சிறப்பு தள்ளுபடியும் உண்டாம்.
இயற்கை பொருட்கள் என்றாலே விலை விகிதம்?
பொதுவாக இயற்கை பொருட்கள் என்றாலே விலை அதிகம் என்ற கருத்து உள்ளது. இருப்பினும் ecoindian.comமில் பொருட்கள், மற்ற அங்காடிகளுடன் ஒப்பிடும்போது விலை சுமார் 10 சதவிகிதம் வரை குறைவு தான். அதோடு குறைந்த அளவு பொருட்களையும் தனியாக வாங்கிக் கொள்ளலாம் என்கிறார்கள் இந்தக் குழுவினர். ஆமாங்க. 10 கிராம், 50 கிராம் என குறைந்து அளவு பொருட்களையும் கூட வாங்கிக் கொள்ள முடியுமாம்.
கெமிக்கல் இல்லை?
பொதுவாக இயற்கை பொருட்கள் என்றாலே கெமிக்கல் இல்லாமல் தான் உற்பத்தி செய்வார்கள். அதிலும் வீடு துடைக்கும் லிக்விட் அயிட்டம், பத்ரூம்களில் உபயோகப்படுத்தும் கிளீனர்கள் என அனைத்தும் கெமிக்கல் மூல பொருட்கள் இல்லாமல் தயாரிக்கும் பொருட்களையே விற்பனை செய்யப்படுவதாகவும் கூறுகிறார்கள் இந்த நண்பர்கள்.
விதையுள்ள பென்சில்?
ஸ்டேஷனரி பொருட்களை பொறுத்தவரை தற்போதுதான் விரிவுபடுத்தி வருகிறார்களாம். அதிலும் கூட கொஞ்சம் மாற்றம் இருக்க வேண்டும் என்பதற்காக பென்சில்களில் விதை பொறுத்தப் பட்டிருக்குமாம். இதை உபயோகித்து முடித்தவுடன் அதை தூக்கி எரிந்து விட்டால் அதிலிருந்து மரம் வளரும் என்பதே இதன் திட்டமாம். அதோடு ஹேண்டுமேடு நோட்களும் விற்பனை செய்யப்படுகிறதாம்.
சிறு தொழிலாளர்கள்?
வீட்டிலிருந்து சிறிய அளவில் உற்பத்தி செய்யும் சிறு வியாபரிகளும், உற்பத்தியாளர்களும் தான் இவர்களது மெயின் சோர்ஸ். அதோடு கைவினைக் கலைஞர்கள், மற்றும் மகளிர் சுய உதவிக் குழுக்கள் என அனைவரிடம் கொள்முதல் செய்யும் இந்த குழு. விவசாயம் சார்ந்த கம்பு, ராகி, அரிசி என்று அனைத்தும் முடிந்தவரை நேரிடையாக விவசாயிகளிடமே கொள்முதல் செய்கின்றனர்.
சிறு உற்பத்தியாளரும் வளருவார்கள்?
நாங்கள் வளர வளர, விவசாயிகளுக்கும் பலன் கிடைக்கும் என்பதோடு, சிறு உற்பத்தியாளர்களும் வளருவார்கள் என்கிறார்கள். அதுமட்டுமல்ல அவர்களிடம் பொருட்கள் மிகத் தரமானதாகவும், தூய்மையானதாகவும் இருக்கும் என்றும் கூறுகிறார்கள் இந்த நண்பர்கள்.
எப்படியோ மெட்ரோ சிட்டியான சென்னையிலும் இயற்கையின் வாசத்தினை கொடுக்கும் இந்த நண்பர்களின் கடை நம்ம மயிலாப்பூரில் தான் இருக்கிறதாம்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications