டெல்லி : வாடிக்கையாளர்களை பற்றி அறிந்து கொள்ளும் கே.ஒய்.சி (KYC) பற்றிய விதிமுறைகளை மீறியதாக, நான்கு பொதுத்துறை வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அதிரடியாக அபராதம் (FINES) விதித்துள்ளது.
ஆமாங்க.. நடப்பு கணக்குகளை திறப்பதற்காக விதிமுறைகளை பின்பற்றவில்லை என்பதற்காக, இந்திய ரிசர்வ் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, யூகோ வங்கி, அலகாபாத் வங்கி, கார்ப்பரேஷன் வங்கி உள்ளிட்ட நான்கு பொதுத்துறை வங்கிகளுக்கு 1.75 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது இந்திய ரிசர்வ் வங்கி.

அதிலும் பஞ்சாப் நேஷனல் வங்கி, அலகாபாத் வங்கி, யூகோ உள்ளிட்ட வங்கிகளுக்கு தலா 50 லட்சம் ரூபாயும், இதில் கார்ப்பரேஷன் வங்கிக்கு மட்டும் 25 லட்சம் ரூபாயும் அபராத தொகையாக செலுத்துமாறும் கூறியுள்ளது இந்திய ரிசர்வ் வங்கி.
கே.ஒய்.சி பற்றிய விதிமுறைகள், பணமோசடி தடுப்பு தர நிலைகள் மற்றும் நடப்பு கணக்கு திறப்பது போன்றவற்றின் சில விதிமுறைகள் அடிப்படையில், விதிமுறைகளை மீறிய இந்த நான்கு வங்கிகளுக்கு அபராதம் விதித்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
அதோடு தவறுகள் நடந்துள்ளதாக புகார்கள் வந்ததை அடுத்து தான், மேற்கன்ட நான்கு வங்கிகளில் முறைகேடு நடந்துள்ளதை கண்டறியப்பட்டது என்கிறது ரிசர்வ் வங்கி.
அதோடு இந்த நான்கு வங்கிகளுக்கும் அபாராதம் விதிக்கப்பட்டதோடு, ரிசர்வ் வங்கி நோட்டீஸூம் அனுப்பியுள்ளது. மேலும் அதற்கான காரணத்தையும் அணுகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே வாராக்கடனால் முடங்கியுள்ள பொதுத்துறை வங்கிகளுக்கு இது பெருத்த அடியாகவே இருக்கும் என்றும் கருதப்படுகிறது. அதோடு வருகிற ஜூலை 5ம் தேதி நிதிமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது முதல் பட்ஜெட் தாக்கலை செய்ய உள்ள நிலையில், பொதுத்துறை வங்கிகளுக்கு இப்படி ஒரு அபராதம் கொடுத்திருப்பது வங்கி வட்டாரத்தில் சலசலப்பை உருவாக்கியுள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications