மும்பை: குமார் மங்களம் பிர்லாவின் தாத்தா மற்றும் இந்தியாவின் மிகப் பெரிய தொழிலதிபர்களின் ஒருவரான (Basant Kumar Birla) பசந்த் குமார் பிர்லா, தன் 98 ஆவது வயதில், உடல் நலக் குறைவு காரணமாக நேற்று (ஜூலை 03, 2019) புதன்கிழமை அன்று மும்பையில் காலமானார். இந்த (Basant Kumar Birla) பசந்த் குமார் பிர்லா தான், செஞ்சுரி டெக்ஸ்டைலில் தலைவராக இருந்தவர். தன்னுடைய 15 ஆவது வயதில் இருந்து வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்.
(Basant Kumar Birla) பசந்த் குமார் பிர்லா, முன்னாள் தொழிலதிபர் மற்றும் சமூகத்துக்கு நிறைய தான தர்மம் செய்த ஞான் ஷியாம் தாஸ் பிர்லாவின் கடைசி மகன். இவரின் வியாபாரம் சார்ந்த புலிப் பாய்ச்சல், கேசோராம் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டதில் இருந்து வெளிப்படத் டொடங்கியது.

பருத்தி, விஸ்காஸ், பாலியஸ்டர், நைலான் யார்ன், காகிதம், கப்பல் துறை, டயர் கார்ட், டிரான்ஸ்பரண்ட் பேப்பர், ஸ்பன் பைப், சிமெண்ட் , டீ, காபி, ஏலக்காய், ரசாயனங்கள், ப்ளை உட், எம்டிஎஃப் போர்டுகள் என இந்தியாவில் பல பொருட்களுக்கான தேவை எழுந்த போது எல்லாம், அதில் இருந்த வாய்ப்புகளை முன் கூட்டியே கண்டு கொண்டு, கச்சிதமாக பயன்படுத்திக் கொண்டார்.
பல்வேறு கல்வி நிலையங்களுக்கு தலைவராக இருந்து வழிகாட்டி இருக்கிறார். பல புத்தகங்களை எழுதி இருக்கிறார். மனைவி சர்லா பிர்லாவின் துணையோடு பல பள்ளிகளை நிறுவி இருக்கிறார். Order of Menelik II என்கிற எத்தியோப்பியாவின் மிக உயரிய விருதை வாங்கியவர் நம் (Basant Kumar Birla) பசந்த் குமார் பிர்லா.
குமார் மங்களம் பிர்லாவின் தந்தை ஆதித்யா விக்ரம் பிர்லா கடந்த 1995-ல் இறந்துவிட்டார். நம் (Basant Kumar Birla) பசந்த் குமார் பிர்லாவுக்கு மொத்தம் 3 குழந்தைகள். ஒரு மகன் ஆதித்யா விக்ரம் பிர்லா. இரண்டு மகள்கள். தற்போது (Basant Kumar Birla) பசந்த் குமார் பிர்லா தன் இரண்டு மகள்கள் ஜெயஸ்ரீ மொஹ்தா மற்றும் மஞ்சூஸ்ரீ கேய்தானுடன் தான் வாழ்ந்து வந்தார். இவர் மனைவி சர்லா பிர்லா கடந்த மார்ச் 28, 2015 அன்று காலமானார்.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications