டெல்லி : ஒரு புறம் BSNL நிறுவனம் கடன் பிரச்சனையால் தத்தளித்து வரும் நிலையில், பல விதமான கருத்துகள் நிலவி வருகிறது. இந்த நிலையில் BSNL நிறுவனத்தை மூடுவதாகவும் என பல தவறான கருத்துகளும் வெளியாகி வந்தன.
எனினும் இந்த தவறான கருத்துக்களை பொய்யாக்கும் விதமாக, மத்திய அரசின் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
அதில் பொதுத்துறையை சேர்ந்த தொலைத்தொடர்பு நிறுவனமான BSNL மற்றும் MTNL நிறுவனங்களுக்கு, மத்திய அரசு 74000 கோடி ரூபாயை கொடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
வி.ஆர்.எஸ் உறுதி?
ஒரு புறம் மத்திய அரசு நிதியை கொடுத்து நிறுவனத்தை தூக்கி விட நினைத்தாலும், அந்த பணத்தில் ஊழியர்களுக்கான வி.ஆர்.எஸ் தொகையினையும் சேர்த்து கொடுத்துள்ளதாம். ஆமாங்க.. மத்திய அரசு கொடுக்க உள்ள 74000 கோடியில் வி.ஆர்.எஸ் பெறும் அதிகாரிகளுக்கு, இந்த நிதியின் மூலம் இழப்பீட்டு தொகையினையும், ஓய்வூதியம் உள்ளிட்ட பலவற்றை கொடுக்க முன்வந்துள்ளதாம். அதோடு மீதமுள்ள பணத்தை வைத்து 4ஜி சேவையை தொடங்கவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாம்.
நஷ்டம் கண்ட BSNL
ஜியோ உள்ளிட்ட பல தனியார் நிறுவனங்கள் 4ஜி சேவைக்கு மாறிய போதிலும், பொதுத்துறை நிறுவனமான BSNL தற்போது வரை இன்னும் எந்த மாற்றமும் செய்யவில்லை. இதனாலேயே BSNLக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டது என்றும் கூறலாம். தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் கூட 4ஜி சேவையை கொடுத்து வரும் இந்த நிலையில், ஏன் 5ஜிக்கு அடித்தளமிடும் இந்த நிலையில், அரசு நிறுவனமான BSNL தொடர்ந்து 2ஜி, 3ஜி என இருந்தால் நஷ்டத்தை காணமல் வேறு என்ன செய்யும்.
அதள பாதாளத்திற்கு சென்ற BSNL
ஒரு புறம் ஜியோவால் நஷ்டம் கண்ட அனைத்து தொலைத் தொடர்பு நிறுவனங்களே ஆட்டம் கண்டுள்ளன என்றாலும், பொதுதுறை நிறுவனமான பி.எஸ்.என்.எல் அதள பாதாளத்திற்கே சென்றது எனலாம். குறிப்பாக ஜியோவின் வாய்ஸ் கால் பேக்குகளால் பி.எஸ்.என்.எல்லின் லேண்ட் லைன் தொடர்புகள் காணமலே போய்விட்டன. அதேசமயம் மற்ற தனியார் நிறுவனங்களிடம் இருந்த 4ஜி சேவையையும் பி.எஸ்.என்.எல்லிடம் இல்லாததால், இந்த நிறுவனத்தை மக்கள் அடியோடு மறந்துவிட்டனர் என்றே கூறலாம்.
செலவைக் குறைக்க திட்டம்?
ஒரு புறம் தொடர் நஷ்டத்தை கண்டே வந்தாலும், மறுபுறம் நஷ்டத்தை குறைக்க அரசு பல திட்டங்களை தீட்டியும் வருகிறது. இந்த வகையில் தான் பி. எஸ்.என்.எல் வி.ஆர்.எஸ் திட்டத்தினை கூறியது. முதலில் விருப்ப ஓய்வூதிய திட்டத்திற்கான வயதை 60 லிருந்து 58 ஆக குறைக்கவும், இந்த வகையில் பலருக்கு வி.ஆர்.எஸ் கொடுக்கவும் முடிவு செய்துள்ளது பி.எஸ்.என்.எல். ஒரு புறம் இந்த திட்டத்திற்கான பணம் இல்லாமல் கையை பிசைந்து வந்த நிலையில், தற்போது இந்த திட்டத்தினை உறுதி செய்துள்ளது மத்திய அரசு.
இனி வேலைக்கு ஆள் சேர்ப்பு இல்லையா?
ஆதோடு தற்போது பி.எஸ்,என்.எல் நிறுவனம் தற்போது இன்னொரு குண்டையும் தூக்கி போட்டுள்ளது. அதில் இனி ஓப்பந்த அடிப்படையில் ஊழியர்கள் சேர்க்கப்படலாம் என்றும், இன்னும் சில காலத்திற்கு ஊழியர் சேர்ப்பு இப்படி தான் இருக்கும் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளன.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications