டெல்லி: தற்போது நடந்து கொண்டிருக்கும் பட்ஜெட்டுக்கு முந்தைய, "Economic survey"யின் படி, 2019ல் நிதி ஆயோக் எலெக்ரிக் வாகன உற்பத்தியை அதிகரிக்க திட்ட மிட்டுள்ளதை அறிய முடிகிறது.
மொத்த உற்பத்தி விகிதத்தில், கிட்டதட்ட பாதி பங்கு வகிக்கும் வாகன உற்பத்தியில் பெரிய அளவில் மாற்றம் இருக்கலாம் என்றும் இதன் மூலம் அறிய முடிகிறது.

குறிப்பாக இருக்கின்ற வளங்களை திறமையாக மிகச்சிறந்த முறையில் பயன்படுத்தி வரையறுக்கப்பட்ட நோக்கங்களை குறித்த நேரத்தில் அடைவதே நிதி ஆயோக்கின் முக்கிய நோக்கமாக இருக்கும் நிலையில் இது மேலும் பொருளாதார வளர்ச்சியடைய காரணமாக இருக்கும் என்றும் நம்பப்படுகிறது.
இந்த வகையில் நிதி ஆயோக் 2019ம் நிதியாண்டில், இந்தியாவில் எலக்ரிக் வாகனத்தை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாகவும், குறிப்பாக தனியார் கார்கள் 30 சதவிகிதமும், வணிக வாகனங்கள் 70 சதவிகிதமும், பேருந்துகள் 40 சதவிகிமும் இருக்கலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதோடு 2030க்குள் இரண்டு மற்றும் 3 சக்கர வாகனங்கள் 80 சதவிகிதமும் எலக்ரிக் வாகனங்களாக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதனால் இந்தியாவில் நிலவும் மாசு வெகுவாக குறையலாம் என்றும் கருதப்படுகிறது. அதோடு ஏற்கனவே எண்ணெய் அதிகளவு இறக்குமதி செய்யப்படும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்ற நிலையில், இவ்வாறு புழக்கத்தில் அதிகளவு எலக்ரிக் வாகன விற்பனை அதிகரித்தால் எரிபொருள் தேவையும் குறையும் என்றும் அரசு எதிர்பார்க்கிறது போலும்.
இதுபோன்று எலட்ரிக் மயமாவதால், இனி நாட்டில் உற்பத்தி மேலும் அதிகரிக்கலாம் என்பதால், ஜி.டி.பி மறுபுறம் தானாக அதிகரிக்கும் என்பதே அரசின் திட்டம் போல.
இது ஒரு புறம் இருக்க, தலைவிரித்தாடும் வேலையில்லாத் திண்டாட்டமும் இதன் மூலம் குறைக்கப்படலாம் என்றும் நம்பப்படுகிறது.
ஒரு புறம் இதனால் முடங்கி போயுள்ள பொறியல் துறை மீண்டும் புத்துயிர் பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எப்படியோ பொருளாதாரமும் ஒரு புறம் அதிகரிக்கும், மறுபுறம் உற்பத்தி விகிதமும் அதிகரிக்கலாம் என்றும் கருதப்படுகிறது.


Click it and Unblock the Notifications