ஐயா மோடி.. முக்கிய 8 துறைகளின் வளர்ச்சி படு வீழ்ச்சியாம்.. அடுத்து என்ன செய்ய போறீங்க?

டெல்லி :, இந்தியா பொருளாதாரத்தை முன்னேற்ற அரசு பல விதமான நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும், அரசுக்கு மிகப்பெரிய சவால்களில் ஒன்றாக இருப்பது, உற்பத்தி துறை தான்.

இந்த உற்பத்தி வளர்ச்சியே கடந்த 5 ஆண்டுகளாக மழுங்கி போய் இருப்பதாகவும், இந்தியாவின் முதன்மைப் பொருளாதார ஆலோசகர், கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன் தன்னுடைய முதல் Economic Survey-வில் கூறியுள்ளார்.

அட ஆமாங்க.. அதிலும் கடந்த ஐந்து ஆண்டுகளாகவே மழுங்கி போயுள்ள, இந்தியாவின் முக்கிய எட்டு உற்பத்தி துறைகளின் வளர்ச்சி மிக குறைந்துள்ளதாக கூறியுள்ளார்.

பெரிய வளர்ச்சி இல்லை?

பெரிய வளர்ச்சி இல்லை?

கடந்த 5 ஆண்டுகளாகவே மிகப்பெரிய அளவில் வளர்ச்சி ஏதும் இல்லை. அதிலும் கடந்த ஐந்து ஆண்டுகளில் இரண்டாவது முறையாக இந்த வளர்ச்சி, மிகக் குறைந்துள்ளதாம். குறிப்பாக கடந்த 2014 - 2015ல் 4.9 சதவிகிதமாக இருந்த வளர்ச்சி, 2015 - 2016ல் அதள பாதளாத்திற்கே சென்று 3 சதவிகிதமாக குறைந்தது. இது மீண்டும் கடந்த 2016 - 2017ல் மீண்டும் 4.8 சதவிகிதமாக உச்சம் தொட்டது. எனினும் அடுத்தடுத்த இரண்டு ஆண்டுகளாக, கடந்த 2017 - 2018 மற்றும் 2018 - 2019களில் வளர்ச்சி 4.3 சதவிகிதமாக மட்டுமே வீழ்ச்சி கண்டது குறிப்பிடத்தக்கது.

நேரிடையாக பாதிப்பு?

நேரிடையாக பாதிப்பு?

மொத்த உற்பத்தி துறையில், இந்த முக்கிய 8 துறைகள் 40 சதவிகித பங்களிப்பதால், மொத்த Index of Industrial Production (IIP) குறியீட்டில் இது நேரடியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. முக்கிய துறைகளின் நிதி செயல்திறன் குறிப்பாக கச்சா எண்ணெய், உரங்கள் மற்றும் இயற்கை எரிவாயு பிரிவுகளாள் மிக அதிகமாக குறைந்துள்ளது. இதுவே கடந்த 2018 - 2019ம் வருடத்தில் ஒரு எதிர்மறையான தாக்கத்தினை பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கச்சா எண்ணெய் வளர்ச்சி மிக மோசம்?

கச்சா எண்ணெய் வளர்ச்சி மிக மோசம்?

குறிப்பாக கச்சா எண்ணெய் பிரிவில் 5 வருடங்களில் இல்லாத அளவுக்கு மிக மோசமாக 4.1 சதவிகிதம் அளவுக்கு வீழ்ச்சி கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் இயற்கை எரிவாயு 0.8 சதவிகிதமும், உரங்கள் 0.3 சதவிகிதமும் வீழ்ச்சி கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

எஃகு துறை வீழ்ச்சி?

எஃகு துறை வீழ்ச்சி?

எனினும் மின்சாரம் உள்ளிட்ட துறைகள் மிக நல்ல வளர்ச்சி கண்டன. குறிப்பாக 5.1 சதவிகிதம் வளர்ச்சி கண்டு உற்பத்தியில் முக்கிய பங்காற்றியது. இதுவே இதற்கு எதிர்மறையாக கடந்த 5 ஆண்டுகளில் மிக மோசமாக பாதிக்கப்பட்டது இரும்பு துறை 4.7 சதவிகிதம் வீழ்ச்சி கண்டது. இதையடுத்து சுத்திகரிப்பு சார்ந்த பொருட்கள் 3.1 சதவிகிதம் வீழ்ச்சி கண்டது குறிப்பிடத்தக்கது.

சிமெண்டுக்குதான் முதலிடம்!

சிமெண்டுக்குதான் முதலிடம்!

இந்த சூழலில் மிகுந்த செயல் திறன் கொண்ட துறைகளில் சிமெண்ட் தான் முன்னணியில் இருந்தது. கடந்த 5 ஆண்டுகளில் 13.3 சதவிகிதம் வளர்ச்சி கண்டு மிகுந்த வளர்ச்சி கண்டதாகவும், இதற்கடுத்தாற்போல் நிலக்கரி 7.3 சதவிகிதம் வளர்ச்சி கண்டு இரண்டாவது இடத்தையும் பெற்றது குறிப்பிடத்தக்கது.

வளர்ச்சி காணுமா?

வளர்ச்சி காணுமா?

தற்போது இந்தியாவில் நிலவி வரும் பொருளாதார வளர்ச்சி காரணமாக, அன்னிய முதலீடுகளை அதிகரிக்க முதலீட்டு கொள்கைகள் தளர்த்தப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் அன்னிய முதலீடுகள் அதிகரித்து, அதேசமயம் உள் நாட்டு நிறுவனங்களுக்கு சலுகளைகள் வழங்கப்படுமாயின் இந்த வளர்ச்சி விகிதத்தில் மாற்றம் ஏற்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+