Economic Survey: இந்திய ஜிடிபி 2019 - 20-ல் 7 சதவிகிதத்தில் வளரும்..! சாத்தியமா..?

டெல்லி: தற்போது, இந்தியாவின் முதன்மைப் பொருளாதார ஆலோசகர், கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன் தன் முதல் Economic Survey-யை மாநிலங்களவையில் தாக்கல் செய்து கொண்டிருக்கிறார்.

அதில் இந்தியாவின் 2019- 20 நிதி ஆண்டுக்கான ஜிடிபி 7 சதவிகிதத்தில் வளரும் எனச் சொல்லி இருக்கிறார். ஆனால் அதற்கு அடுத்தடுத்த வரிகளிலேயே கடன் வளர்ச்சி பெறும், தேவைகள் அதிகரிக்கும் எனவும் சொல்லி இருக்கிறார். மற்ற அமைப்புகள் எல்லாம் இந்திய ஜிடிபி பற்றி என்ன சொல்கிறார்கள்..? வாருங்கள் பார்ப்போம்.

Economic Survey: இந்திய ஜிடிபி 2019 - 20-ல் 7 சதவிகிதத்தில் வளரும்..! சாத்தியமா..?

மத்திய ரிசர்வ் வங்கி கூட, ஜூன் 2019-க்கான நிதிக் கொள்கையின் போது, 2019 - 20 நிதி ஆண்டில் இந்தியாவின் ஜிடிபி 7 சதவிகிதமாக இருக்கலாம் என தன் கணிப்பை குறைத்துக் கொண்டது. இதற்கு முன் 7.2 சதவிகிதமாக இருக்கலாம் எனக் கணித்திருந்தது ஆர்பிஐ.

2019 - 20 நிதி ஆண்டில் ஏப்ரல் 2019 முதல் செப்டம்பர் 2019 வரையான முதல் ஆறு மாதத்தில் இந்தியாவின் ஜிடிபி 6.4 முதல் 6.7 சதவிகிதம் வரை இருக்கலாம் எனக் கணித்திருந்தது. அக்டோபர் 2019 முதல் மார்ச் 2020 வரையான ஆறு மாத காலத்தில் இந்தியாவின் ஜிடிபி 7.2 முதல் 7.5 சதவிகிதம் வரை இருக்கலாம் எனவும் கணித்திருக்கிறது.

இப்போது ஆர்பிஐயின் கணிப்பை மெய்யாக்கும் விதத்தில் இந்தியா 2019 - 20 நிதி ஆண்டும் 7 சதவிகிதத்தில் வளரும் என இந்திய Economic Survey-யும் சொல்லி இருப்பது குறிப்பிடத்தக்கது. சர்வதேச அளவில் என்ன சொல்கிறார்கள்..?

இந்திய அரசமைப்பான ஆர்பிஐ-யைத் தாண்டி மற்ற தனியார் நிறுவன கணிப்புகளைப் பார்த்தால் கொஞ்சம் Economic Survey சொல்வது சாத்தியம் தான் எனத் தோன்றுகிறது..!

உலகின் முன்னணி ரேட்டிங் நிறுவனங்களில் ஒன்றான ஃபிட்ச் ரேட்டிங் நிறுவனம் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 2019 - 20-ம் ஆண்டுக்கு 6.6 சதவிகிதமாக இருக்கும் என கணித்திருக்கிறது. இதர்கு முன் 2019 - 20-ம் ஆண்டில் 7.1 சதவிகிதம் வளர்ச்சி காணும் எனச் சொல்லி இருந்தது. ஒரு சர்வதேச அமைப்பு இப்படிச் சொல்லி இருக்கிறது.

ஆனால் ஃபிட்ச் ரேட்டிங் நிறுவனம் போலவே உலகப் புகழ் பெற்ற நிதி நிறுவனங்களில் ஒன்றான கோல்டு மேன் சாக்ஸ் அமைப்பு இந்தியாவின் 2019 - 20 நிதி ஆண்டுக்கான ஜிடிபி வளர்ச்சி 7.2 சதவிகிதமாக இருக்கும் என கடந்த ஜூன் 2019-ல் சொன்னது.

சர்வதேச பன்னாட்டு நிதியம் (IMF) அமைப்பு, ஜி20 நாடுகளுக்கு தயாரித்த G20 surveillance note என்கிற அறிக்கையில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 2019-ம் ஆண்டில் 7.3 சதவிகிதமாகவும், 2020-ம் ஆண்டில் 7.5 சதவிகிதமாகவும் இருக்கும் எனக் கணித்திருக்கிறது இதற்கு காரணமாக தொடர்ந்து இந்தியாவில் அதிகரித்து வரும் முதலீடுகள் மற்றும் அதிகரிக்கும் நுகர்வை காரணமாகக் காட்டுகிறார்கள்.

ஆக இந்திய Economic Survey, தன் கணிப்புப் படி, ஆர்பியோடு ஒத்துப் போய் 7 சதவிகித வளர்ச்சியைத் முன் வைப்பது பாராட்டுக்குரியது. அப்படியே அந்த உயரத்தைத் தொட்டு விட்டால் இன்னும் நன்றாக இருக்கும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+