டெல்லி : ஒரு புறம் வேதாந்தாவின் எண்ணெய் கிணறுகள் மற்றும் இயற்கை எரிவாயு கிணறுகள் அடுத்தடுத்து அமைத்துக் கொண்டே இருக்கும் இந்த நிலையில் புதிதாக 10 இடங்களில் முதலீடு செய்ய உள்ளதாக இந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
ஏற்கனவே அனுமதி பெற்ற 10 இடங்களில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக்களை கண்டுபிடிக்க, அடுத்த மூன்று முதல் நான்கு ஆண்டுகளில் 245 மில்லியன் டாலர் முதலீடு செய்ய உள்ளதாகவும் இந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த 10 பகுதிகளில், 7 கடற்கரை பகுதிகளிலும், 3 கடலிலும் அமைக்க உள்ளதாக இந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
முன்னர் மத்திய அரசு, மொத்த 55 இடங்கள் இதற்காக ஏலம் விடப்பட்டதில், 41 பகுதிகளை வேதாந்தா நிறுவனமே ஏலத்தில் எடுத்தது குறிப்பிடத்தக்கது. அதோடு இதன் மூலம் கிட்டதட்ட 551 டாலர்களை முதலீடுகளை செய்வதாக உறுதியளித்திருந்தது வேதாந்தா நிறுவனம்.
அதன் ஒரு பகுதியாக வேதாந்தா நிறுவனம் 10 பகுதிகளில் 245 மில்லியன் டாலர் முதலீடு செய்ய உள்ளதாக தற்போது கூறியுள்ளது.
அதோடு இவ்வாறு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் இரண்டு கட்டங்களாக ஆய்வு நடத்தப்படும் என்றும் இந்த நிறுவனம் அறிவித்துள்ளது. இவ்வாறு நடத்தப்படும் ஆய்வுக்காலம் ஆறு வருட காலத்திற்கு நீட்டிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. அதோடு நீட்டிப்பு தேவை ஏற்பட்டால் அதையும் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இவ்வாறு வழங்கப்பட்ட, ஒவ்வொரு ஒப்பந்தத்தின் வளர்ச்சி மற்றும் உற்பத்தி காலம், பெட்ரோலிய சுரங்க குத்தகை வழங்கப்பட்ட நாளிலிருந்து 20 ஆண்டுகள் வரை இருக்குமாம்.
இந்த நிலையில் முன்னரே இராமநாதபுரம் மாவட்டம் முதல் கடலூர் வரையிலான காவிரி பாசன மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதிகளில் 104 எண்ணெய்க் கிணறுகளை தோண்ட ஓ.என்.ஜி.சி நிறுவனம் தீர்மானித்திருந்தது. எனினும் இந்த திட்டம் இயற்கை அழிக்கும் திட்டம் எனவும் இதை தமிழகத்தில் காவிரி கரையோரங்களில் அமைக்க கூடாது என பல கட்சிகளும் போர்க் கொடி தூக்கியது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications