டெல்லி : மோடி இரண்டாவது முறையாக, பெரும்பான்மையான இடத்தை பிடித்து ஆட்சிக்கு பின்னர் தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் ஆகும். இது மக்களிடையே பலத்த எதிர்பார்ப்பை ,உருவாக்கிய நிலையில் ஒரு வழியாக தாக்கல் செய்யப்பட்டு விட்டது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி இந்த பட்ஜெட் மக்களின் நலனையும், அதோடு வளர்ச்சி மற்றும் எதிர்கால நலனை கருத்தில் கொண்ட பட்ஜெட் எனவும் புகழாரம் சூட்டியுள்ளாராம்.

நடப்பு நிதியாண்டிற்கான இடைக்கால பட்ஜெட் கடந்த பிப்ரவரியில் தாக்கல் செய்யப்பட்டிருந்தாலும், தற்போது நிதியமைச்சர் சீதாராமன் தலைமையில் புதிய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதிலும் இது முதல் பெண் முழு நேர நிதியமைச்சர் என்ற முறையில் பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்துள்ளார் நிர்மலா சீதாராமன். இந்த நிலையில் இந்த பட்ஜெட்டின் முக்கிய அம்சமாக, பிரதமர் மோடி முன்னர் இலக்கு வைத்திருந்த 5 டிரில்லியன் டாலர் இலக்கை அடைவதற்காக பல திட்டங்களை வைத்துள்ளதாகவும், அதோடு நடப்பு நிதியாண்டில் 3 டிரில்லியன் டாலராகவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அதோடு மகளிர், தொழிலாளர்கள், விவசாயிகள், என அனைவரையும் மனதில் வைக்கப்பட்டு இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதோடு நடுத்தர மக்களின் வாழ்க்கை தரத்தினை உயர்த்தும் விதமாகவும் இந்த பட்ஜெட் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது என்றும் மோடி புகழாரம் செய்துள்ளார்.
அதோடு மக்களின் பயன்பாட்டிற்காக அறிமுகப்படுத்தவுள்ள ஒரே நாடு ஒரே அட்டை மூலமாக பயணிக்கும் திட்டங்கள் குறித்தும், அதோடு டிஜிட்டல் முறையில் பணத்தை செலுத்துவோருக்கு எந்த கட்டணமும் கிடையாது என்றும் கூறப்பட்டுள்ளது.
இது எல்லாவற்றையும் விட இனி அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் அனைத்து வீடுகளுக்கும் தூய்மையான தண்ணீர் வசதி செய்து தரப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications