Budget 2019: மோடி 2.0 அரசின் முதல் பட்ஜெட் தாக்கல்.. விவசாயத்திற்கு முக்கியத்துவம் இருக்குமா?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி : மோடி 2.0 அரசு பதவியேற்ற பின்பு தாக்கல் செய்யவிருக்கும், மத்திய பட்ஜெட் இன்று காலை 11 மணியளவில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட இருக்கிறது.

இந்த நிலையில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்யும் முழு நேர முதல் பெண் மத்திய நிதி அமைச்சர் என்கிற பெருமையை நிர்மலா சீதாராமன் பெறுகிறார்.

நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு 2-வது முறை பதவியேற்ற பிறகு இன்று ( ஜூலை 5-ல்) செய்யப்பட இருக்கிறது. மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்யும் 2-வது பெண் அமைச்சர் நிர்மலா சீதாராமன்.

Budget 2019: மோடி 2.0 அரசின் முதல் பட்ஜெட் தாக்கல்.. விவசாயத்திற்கு முக்கியத்துவம் இருக்குமா?

அதேசமயம் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்யும் முதல் முழு நேர பெண் அமைச்சர் இவர்தான். மத்திய பட்ஜெட்டுடன் ரயில்வே பட்ஜெட்டும் இணைக்கப்பட்டுவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே ரயில்வே தொடர்பான முக்கிய அறிவிப்புகளும் இடம் பெறும் என்பதும் கவனிக்கதக்கது.
.
ஏற்கனவே கடந்த பிப்ரவரி மாதம் இடைக்கால பட்ஜெட்டை முந்தைய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தாக்கல் செய்தா நிலையில், அதில் வருமான வரிச்சலுகை, விவசாயிகளுக்கு நிவாரணம் உள்ளிட்டவை அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போதைய பட்ஜெட்டிலும் அதை சார்ந்த முக்கிய அறிவிப்புகள் இருக்கலாம் என்ற எதிர்பார்ப்புகளும் உள்ளன.

இந்த நிலையில் கடந்த வியாழக்கிழமையன்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட எக்னாமிக் சர்வேயில் 2019 - 2020 நிதியாண்டில் இந்தியாவில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7 சதவிகிதமாக இருக்கும் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது.

இதையடுத்து பட்ஜெட் 2019 தாக்கலும் இதயொட்டி இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக நாட்டில் நிலவி வரும் பணவீக்க விகிதம், உற்பத்தி விகிதம், இதன் மூலம் பொருளாதார வளர்ச்சி மிக மந்தமானவே இருந்தும் வருவதால் இதையொட்டிய மாற்றங்கள் நிறைய இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அதிலும் தற்போது நிலவும் மெதுவான வளர்ச்சியால், அன்னிய முதலீடுகளுக்கு முக்கிய துவம் கொடுக்கும் வகையிலும், கொள்கைகள் தளர்த்தப்படலாம் என்றும் கருதப்படுகிறது.

அதிலும் அமெரிக்கா - சீனா பிரச்சனையால், சர்வதேச அளவில் பல பெரிய நிறுவனங்கள் சீனாவிட்டு வெளியே வர காத்திருக்கும், இந்த நிலையில் அவர்களை ஊக்குவிக்கும் விதமாக தொழில் கொள்கைகள் மாற்றப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக நாட்டில் நிலவி வரும் தண்ணீர் பிரச்சனை காரணமாக, மொத்த துறைகளும் பாதிக்கும் விதமாகவே உள்ளது. இதனால் தண்ணீர் பிரச்சனை குறித்து விரிவான திட்டம் இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகீறது.

பிரதமர் மோடி, தனது தேர்தல் வாக்குறுதிகளில் கூறியது போல விவசாயிகளுக்கும், முக்கிய அமசங்கள் இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Budget 2019 : FM Nirmala Sitharaman to present her first Budget today, here what to expects

Budget 2019 : FM Nirmala Sitharaman to present her first Budget today, here what to expects
Story first published: Friday, July 5, 2019, 8:45 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X