டெல்லி : மத்தியில் இரண்டாவது மூறையாக ஆட்சியமைத்திருக்கும் மோடி அரசில், இரண்டாவது பட்ஜெட் தாக்கல் இன்று பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக தாக்கல் செய்தது.
இந்த நிலையில் மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்திருந்தார். இதில் பெண்களுக்கு மிக மோசமான செய்தியாகவே இருக்கலாம்.

ஏன்னு கேட்கிறீங்களா? ஆமாங்க.. தங்கத்துக்கான இறக்குமதி வரி அதிகரித்துள்ள நிலையில், இன்னும் தங்கத்தில் விலை அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே தங்கத்தின் விலை தாறுமாறாக ஏறிக் கொண்டிருக்கும் இந்த நிலையில், இந்த வரி அதிகரிப்பு இன்னும் விலையேற்றத்திற்கு வழிவகுக்கும் என்றே கூறலாம். எனினும் ஒரு புறம் வரி அதிகரிப்பு விற்பனையை குறைத்தாலும், மறுபுறம் இறக்குமதியை குறைக்கும் என்றும் எதிர்பார்க்கலாம்.
அட ஆமாங்க தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை மத்திய அரசு 10 லிருந்து 12.5 சதவிகிதமாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் விலை அதிகரித்தாலும், மறுபுறம் இறக்குமதி குறையும் என்றும் கருதப்படுகிறது.
எனினும் அத்தியாவசிய தேவையாக உள்ள பெட்ரோல் டீசலுக்கு கூடுதலாக லிட்டருக்கு ஒரு ரூபாய் வரி விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் இனி பெட்ரோல் டீசல் விலையும் அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இது மறைமுகமாக கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைத்து, எலக்ட்ரிக் வாகனங்களை ஊக்குவிக்கும் விதமாக இந்த வரி விதிப்பு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதேசமயம் எலட்ரிக் வாகனங்களுக்கு சில சலுகைகளும் வழக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
எனினும் இதுபோன்ற வரி மாற்றம் இருந்தாலும், வருமான வரி உச்சர வரம்பில் எந்த மாற்றம் இல்லை எனவும் குறிப்பிடபட்டுள்ளது. அதோடு தேசத்தின் வளர்ச்சியில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்க நடவடிக்ல்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
அதோடு தனியார் பங்களிப்பு மற்றும் அரசு பங்களிப்புடன் மகளிர் திட்டங்களை அரசு மேற்கொள்ளப்படும் என்றும் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். அதிலும் பொது வாழ்க்கையில் பெண்களின் மதிப்பு 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளதாகவும், இதற்கு எடுத்துக்காட்டு தேர்தல் முடிவுகளே எடுத்துக்காட்டுகள் என்றும் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications