Budget 2019 : ரயில்வே துறைக்கு ரூ.50 லட்சம் கோடி முதலீடு தேவை.. தனியார் பங்களிப்பும் தேவைப்படும்!

டெல்லி : பாராளுமன்றத்தில் மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்துள்ளார், இதில் குறிப்பாக ரயில்வே துறைக்கு 50 லட்சம் கோடி முதலீடு செய்யப்பட உள்ளதாகவும், அடுத்த 2030க்குள் இந்த முதலீடுகள் என்றும் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் தனியார் பங்களிப்புகள் அவசியம் எனவும் கூறியுள்ளார் நிர்மலா சீதாராமன்.

ஏற்கனவே தனியாருக்கு தாரை வார்க்க திட்டமிட்டுள்ள அரசு, அரசின் இந்த திட்டத்தினை உறுதி படுத்தும் வகையிலேயே இந்த அறிவிப்பு உள்ளது கூறப்பட்டுள்ளது.

Budget 2019 : ரயில்வே துறைக்கு ரூ.50 லட்சம் கோடி முதலீடு தேவை.. தனியார் பங்களிப்பும் தேவைப்படும்!

கடந்த 5 ஆண்டுகளில் உணவு பாதுகாப்பு திட்டத்திற்கு இருமடங்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், தேசிய பாதுகாப்பு, பொருளாதார வளர்ச்சிக்கு அரசு முன்னுரிமை அளிக்கும். புதிய இந்தியாவை உருவாக்கும் நோக்கில் அரசின் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார் நிர்மலா.

2014ல் ஆட்சியமைக்கும்போது 1.55 லட்சம் கோடி டாலராக இருந்த பொருளாதாரம் கடந்த 5 ஆண்டுகளில் 2.7 லட்சம் கோடி டாலராக உயர்ந்துள்ளது. இது நடப்பு ஆண்டில் 3 லட்சம் கோடி டாலராக அதிகரிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

அனைவருக்கும் வீடு, கழிவறையை உறுதிபடுத்துவதில் அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. தொழில் தொடங்குவதற்கான இடையூறுகளை நீக்குவதே மத்திய அரசின் நோக்கம் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்திய பொருளாதாரம் உயர்வதற்கு தனியார் முதலீடுகளின் பங்களிப்பு இன்றியமையாதது. அதிலும் அடுத்த 2024ம் ஆண்டில், ஐந்து லட்சம் கோடி டாலருக்கு பொருளாதாரத்தை உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

மேக் இன் இந்தியா திட்டம் இந்தியாவின் சொத்தை அதிகரிக்கிறது; பாதுகாப்பு துறையிலும் சிறு, குறு தொழில்முனைவோர்களின் பங்களிப்பை அதிகரிக்க வேண்டும் என்பதே நோக்கம். பொருளாதார அளவில் இந்தியாவை முன்னனிக்கு கொண்டு வருவதில் மத்திய அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

கடந்த 5 ஆண்டுகளில் 657 கிமீ தொலைவுக்கு மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டிருக்கிறது. இதை இன்னும் அதிகரிக்கவும் உள்கட்டமைப்புகளை மேம்படுத்தவும் முதலீடு அதிகரிக்கபட உள்ளன என்றும் கூறப்பட்டுள்ளது.

ரூபே கார்டுகள் மூலமாக, ஒரே நாடு ஒரு அட்டை மூலம் போக்குவரத்து கட்டணங்கள் செலுத்தும் வசதி மேம்படுத்தப்பட்டுள்ளது. அதோடு பெட் ரொல் டீசல் வாகனங்களை குறைக்கும் வகையிலும், பேட்டரியில் இயங்கும் வாகனங்களின் தயாரிப்பை ஊக்குவிக்க அரசு நடவடிக்கை எடுக்கும். அதோடு கங்கையாற்றில் நடைபெறும் படகு சரக்கு போக்குவரத்தை 4 மடங்கு அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் என்றும் கூறியுள்ளார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+