Budget 2019 : இதற்கெல்லாம் வரிச் சலுகை உண்டு.. நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டில் அதிரடி?

டெல்லி : மோடி 2.0 அரசின் வெற்றிகரமான முதல் பட்ஜெட் இன்று தாக்கல் செயப்பட்டுள்ளது. அந்த வகையில் மற்ற துறைகளை வாகன துறைக்கு, குறிப்பாக எலக்ட்ரிக் வாகன துறைக்கு அதிரடியாக பல சலுகைகள் விதிக்கப்பட்டுள்ளது.

மொத்த உற்பத்தி விகிதத்தினை அதிகரிக்கும் வகையிலும், அதோடு வாகன விற்பனையை ஊக்குவிக்கும் வகையிலும், மின்சார வாகனம் வாங்குபவர்களுக்கு வருமான வரிச்சலுகையாக ரூ.1.5 லட்சம் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Budget 2019 : இதற்கெல்லாம் வரிச் சலுகை உண்டு.. நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டில் அதிரடி?

அதோடு எலக்ட்ரிக் வாகனங்கள் மீதான வரியை 12 சதவிகிதத்திலிருந்து 5 சதவிகிதமாக குறைக்கவும் ஜி.எஸ்.டி துறையை கேட்டுக் கொண்டுள்ளதும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எலக்ட்ரிக் வாகனங்கள் வாங்க வாங்கும் கடன் மீதான வட்டியில் 1.5 லட்சம் ரூபாய் வரை வரிச்சலுகை பெறலாம் என்றும் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

இந்த வரிச்சலுகை ஒரு புறம் இருந்தாலும் எனினும் அத்தியாவசிய தேவையாக உள்ள பெட்ரோல் டீசலுக்கு கூடுதலாக லிட்டருக்கு ஒரு ரூபாய் வரி விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் பெட்ரோல் டீசல் விலை அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது மறைமுகமாக கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைத்து, எலக்ட்ரிக் வாகனங்களை ஊக்குவிக்கும் விதமாக இந்த வரி விதிப்பு அதிகரித்துள்ளது கவனிக்கதக்கது.

அதோடு மின்சார வாகனங்கள் உற்பத்தி தொழில் தொடங்குவோருக்கு வரிச்சலுகையும், அதோடு ஸ்டார்டப் நிறுவனங்களை வருமான வரி விசாரணைக்கு உட்படுத்தப்பட மாட்டார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதில் கவனிக்க பட வேண்டிய முக்கிய விஷயம் என்னவெனில் இனி வருமான வரி தாக்கலுக்கு பான் கார்டுக்கு பதில் ஆதார் கார்டையும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஆண்டுக்கு 1 கோடி ரூபாய்க்கு மேல் வங்கியிலிருந்து பணம் எடுத்தால் 2 சதவிகிதம், வரி விதிக்ப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதுவே சர்வதேச சேவை நிறுவனங்களுக்கு 100 வரிச்சலுகை அளிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதோடு குறைந்த பட்ஜெட் வீடு வாங்குபவர்களுக்கு வரி சலுகை உண்டு எனவும் கூறப்பட்டுள்ளது.

ஆண்டுக்கு 400 கோடி ரூபாய் வருமானம் உள்ள நிறுவனங்களுக்கு 25 சதவிகிதம் வரி எனவும், இது தற்போது 250 கோடி ரூபாய் வரை வருமானம் கொண்டோருக்கு மட்டும் 25சதவிகிதம் வரி விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+