டெல்லி : மோடி 2.0 அரசின் முதல் பட்ஜெட் தாக்கல் பலத்த எதிர்பார்ப்பை மக்களிடையேயும் சரி, முதலீட்டாளர்கள் மத்தியிலும் பலத்த எதிர்பார்ப்பை உருவாக்கியது என்றே கூறலாம்.
இந்த நிலையில் முடிந்த பட்ஜெட் கூட்டத்தில், பெரிய அளவில் மாற்றம் இல்லை என்பது ஒரு புறம் சந்தோஷமே. எப்பவும் பட்ஜெட் தாக்கலின் போது காளையும் கரடியும் சண்டை போட்டுக் கொள்ளும் விதமாகவே அதிரடியான பல ஏற்ற இறக்கங்களை சந்திக்கும். இன்று அவ்வாற எந்த வித தாக்கமும் இல்லை என்றே கூறலாம்.

பொதுவாக பட்ஜெட் தாக்கலுக்கு சில நாட்களுக்கு முன்பே முதலீட்டாளர்கள் தங்கள் முதலீடுகளை வெளியேற்ற தொடங்கி விடுவார்கள். ஏனெனில் பட்ஜெட் அறிவிப்புகளில், தொழில்துறை அல்லது முதலீடு செய்திருக்கும் நிறுவனங்களுக்கு அல்லது துறைக்கு எதிரான அம்சங்கள் இடம் பெற்றால், அது முதலீட்டை பாதிக்கும் என்ற அச்சம் காணப்படும்.
ஆனால் மத்தியில் மீண்டும் இரண்டாவது முறையாக பிரதமர் மோடியே ஆட்சியை பிடித்துள்ள நிலையில், அதிகளவு மாற்றம் இருக்காது என்றும் கருதப்படுகிறது. அதோடு மிக மிகத் தெளிவான அறிவிப்புகள் வெளியாகும் என்ற கருத்தே முதலீட்டாளர்கள் மத்தியில் நிலவி வந்தது.
இதனாலேயே கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டின் போதும் கூட இந்திய பங்கு சந்தை குறியீட்டெண்கள் உயர்ந்தே காணப்பட்டது. ஆனால் இன்றைய பட்ஜெட் தாக்கலில், பெரிய அளவில் அப்படி ஏதும் பெரிய அளவில் மாற்றம் இல்லாததால், இன்றைய பங்கு சந்தைகள் காலையில் ஏற்றத்துடன் தொடங்கினாலும் முடிவில் வீழ்ச்சியையே கண்டுள்ளன.
குறிப்பாக மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் 395 புள்ளிகள் குறைந்து 39,513 ஆக முடிவடைந்துள்ளது. இதுவே தேசிய பங்கு சந்தை நிஃப்டி 135 புள்ளிகள் குறைந்து 11,811 ஆக முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது.
இதுவே டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 68.53 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக நிஃப்டி 50ல் யெஸ் பேங்க், என்.டி.பி.சி, எம் & எம், யு.பி.எல் உள்ளிட்ட பங்குகள் அதிகபட்சமாக 4 - 8 சதவிகிதம் வரை வீழ்ச்சி கண்டுள்ளன. இதுவே கோடாக் பேங்க், இந்தஸ்தங் பேங்க், எஸ்.பி.ஐ, இந்தியா புல்ஸ் ஹவுஷிங் 1 - 3 சதவிகிதம் ஏற்றம் கண்டுள்ளன.
More From GoodReturns

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தனலட்சுமி DL-47 லாட்டரி முடிவுகள் வெளியீடு: யாருக்கெல்லாம் ஜாக்பாட் கிடைத்தது?

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!



Click it and Unblock the Notifications