Budget 2019 : நிர்மலா சீதாராமனின் முதல் பட்ஜெட்.. பங்குச் சந்தை கிடுகிடுக்குமா.. கலகலக்குமா?

டெல்லி : இந்தியாவில் மோடி இரண்டாவது முறையாக பதவியேற்ற பின்பு தாக்கல் செய்யவிருக்கும், மத்திய பட்ஜெட் இன்று காலை 11 மணியளவில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவிருக்கிறது.

இந்த நிலையில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்யும், முதல் பெண் நிதியமைச்சர் அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆவார். இந்த நிலையில் பட்ஜெட் தாக்கலின் முந்தைய நாளில் எக்னாமிக் சர்வே வெளியிடப்பட்டது. இதன் மூலமே ஓரளவு பட்ஜெட் பற்றிய தாக்கம் இருந்ததால் இந்திய பங்கு சந்தைகள் கடந்த வியாழக்கைழமையன்று சற்று ஏற்றத்துடன் தொடங்கியது.

Budget 2019 : நிர்மலா சீதாராமனின் முதல் பட்ஜெட்..  பங்குச் சந்தை கிடுகிடுக்குமா.. கலகலக்குமா?

இந்த நிலையில் இன்று காலை 11 மணியளவில் தாக்கல் செய்யப்பட விருக்கும் 2019 ம் ஆண்டின் பட்ஜெட் எதிரொலி இன்றைய பங்கு சந்தைகளில் இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் 109 புள்ளிகள் அதிகரித்து, 40,017 ஆக வர்த்தகமாகி கொண்டு வருகிறது. இதுவே தேசிய பங்கு சந்தையின் நிஃப்டி 28 புள்ளிகள் அதிகரித்து 11,975 ஆக உள்ளன.

இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவெனில் டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு 68.62 ஆக காணப்படுகிறது.

ஏற்கனவே 40,000 மேல் வர்த்தகமாகும் சென்செக்ஸ், இன்னும் உயரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இன்றைய பட்ஜெட் தாக்கலில் தொழில் துறைகளுக்கும் சலுகை இருக்கலாம் என்ற எதிர்பார்ப்பிலேயே பெரும்பாலான பங்குகள் ஏற்றத் தாழ்வுகள் இல்லாமல் சற்று ஏற்றத்தில் வர்த்தமாகி கொண்டிருக்கின்றன.

எனினும் வாகன துறை பங்குகள் சற்று சரிவிலேயே காணப்படுகின்றன, அதோடு வங்கி பங்குகளும் சற்று ஏற்றத்துடனேயே காணப்படுகிறது. சில பங்குகள் குறிப்பாக ஐ.டி.பி.ஐ மற்றும் என்.டி.பி.சி, ஒ.என்.ஜி.சி, ஹிண்டால் கோ, இந்தியன் ஆயில் கார்பரேஷன், யெஸ் பேங்க் உள்ளிட்ட பங்குகள் சரிவில் காணப்படுகிறது.

ஆனால் லார்சன் & டூப்ரோ, கோல் இந்தியா, இந்தியா ஃபுல்ஸ், பவர் கிரிட், எஸ்.பி.ஐ, ரிலையன்ஸ், கோடாக் மஹிந்திரா உள்ளிட்ட பங்குகள் ஏற்றத்தில் உள்ளன.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+