புதுடெல்லி : நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் முக்கிய வகிக்கும், சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் பொருட்கள், அமேசான், அலிபாபா உள்ளிட்ட இணையத்தளங்கள் போன்று, இந்தியாவிலும் தனி இணையதளம் உருவாக்கப்பட்டு அதன் மூலம் விற்பனை செய்யப்படும் என்று சிறு குறு தொழில்கள் துறை மந்திரி நிதின் கட்காரி கடந்த வியாழக்கிழமையன்று கூறியுள்ளார்.
இந்திய பாராளுமன்ற மக்களவையில், நாட்டின் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் துறைகள் தொடர்பான கேள்விகளுக்கு, மத்திய சாலை போக்குவரத்து துறை மற்றும் சிறு குறு தொழில்கள் துறை மந்திரி நிதின் கட்காரி கடந்த வியாழக்கிழமையன்று பதிலளித்து பேசியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) முக்கிய பங்கு வகிக்கும், சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் துறைகள் 29 சதவிகிதம் பங்களிப்பை வழங்கி வருகின்றன. இதை கணிசமாக அதிகரிக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
வேலைவாய்ப்புகளும் அதிகரிக்கும்?
அதிலும் அடுத்த 5 ஆண்டுகளில் நாட்டின் ஜி.டி.பி.யில் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் துறைகளின் பங்களிப்பு 50 சதவிகிதமாக இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயித்துள்ளோம். அதோடு இந்த விரிவாக்கம் மூலம் இந்த துறையில் 15 கோடி புதிய வேலை வாய்ப்புகளுக்கும் இது வழிவகுக்கும் என்றும் கூறியுள்ளார்.
சீனாவை போல வளர்ச்சி காண முடியும்?
ஆக இந்த இலக்கை நாங்கள் எட்டவில்லை என்றால், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் என்னை கேள்வி கேட்கலாம். சாலை போக்குவரத்து அமைச்சகத்தின் அனைத்து இலக்குகளையும் எட்டியது போலவே இந்த இலக்கையும் எட்டுவோம் என்றும் அதிரடியாக கூறியுள்ளாராம். இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவெனில், சீனா போன்ற பொருளாதாரத்தில் வளர்ந்துள்ள நாடுகள் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் துறையை வலுப்படுத்தியதன் மூலம் நாட்டின் வளர்ச்சியை அதிகரிக்கின்றன. இதை தான் இந்தியாவிலும் செயல்படுத்த உள்ளோம் என்றும் சொல்லாமல் சொல்லி இருக்கிறார் மனுசன்.
இணையத்தில் சந்தை படுத்திக் கொள்ளலாம்?
ஆக அதைப்போலவே இந்தியாவும் இந்த துறைகளில் கவனம் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக சிறு குறு நடுத்தர நிறுவனங்களுக்கு உள்ள பெரிய பிரச்சினையே சந்தைப்படுத்துதல் தான், அதோடு தொழிலாளர் பிரச்சினைகள், நிர்வாக குளறுபடிகள் உள்ளிட்ட பிரச்சினைகளை இந்த துறைகள் சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது. இதனால் இணையத்தில் சந்தை படுத்துதல் மூலம் இந்த சிறு குறு உற்பத்தியாளர்களுக்கு உள்நாட்டில் மட்டும் அல்லாது வெளிநாட்டிலும் சந்தை படுத்த முடியும் என்பதில் சந்தேகமில்லை.
தனி இணைய தளம்?
இது போன்ற பிரச்சனைகளை தவிர்க்க அலிபாபா, அமேசான் போன்ற இணைய விற்பனை நிறுவனங்களின் இணையதளத்தில், சிறு குறு நடுத்தர தொழில் துறைகளுக்கு சர்வதேச அளவிலான விற்பனை தளத்தை வழங்குகின்றன. அந்த அடிப்படையில் இந்தியாவின் சிறு குறு நடுத்தர தொழில்துறை மற்றும் கதர்வாரிய உற்பத்தி பொருட்களும் இணையதளம் மூலம் விற்பனை செய்யப்படும் என்றும் கூறியுள்ளார்.
உலகின் அனைத்து பகுதிக்கும் கொண்டு செல்ல முடியும்?
அதோடு மட்டும் அல்லாது இதற்காக அலிபாபா, அமேசான் போல இணைய விற்பனை தளம் ஒன்றை தொடங்குவதற்கான பணிகள் நடந்து வருகிறது. இந்த இணைய விற்பனை தளம் மூலம் இந்த சிறு குறு நடுத்தர துறைகளில் இயங்கும் ஒருவர், தனது உற்பத்தி பொருட்களை உலகின் எந்த பகுதிக்கும் விற்பனை செய்ய முடியும். இதனால் இந்திய உற்பத்தி பொருட்களுக்கு மவுசு அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்களின் உற்பத்தி பொருட்கள் விற்பனையும் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications