சு.சுவாமி கேள்விக்கு பதில்! விவசாயிகள் போராடாமல் உழைத்தாலே விவசாயிகள் வருமானம் இரட்டிப்பாகி விடும்!

மேலே தலைப்பில் சொன்னது ஆசிஷ் ஜோஷி என்கிற தனி மனிதரின் ட்விட்டைத் தான். இந்த சர்ச்சைக்குரிய கருத்துக்கு டிவிட்டரிலேயே பலரும் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்திருக்கிறார்கள்.

சு.சுவாமி கேள்விக்கு பதில்! விவசாயிகள் போராடாமல் உழைத்தாலே விவசாயிகள் வருமானம் இரட்டிப்பாகி விடும்!

விவசாயிகள் டிவிட்

நேற்று பட்ஜெட் முடிந்த கையோடு சுப்ரமணியன் சுவாமி பட்ஜெட் பற்றிய தன் கருத்துக்களை தன் டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

அதில் எது சரியான ஜிடிபி, எப்போதில் இருந்து 55 வருடத்தில் ஒரு ட்ரில்லியன் டாலர் மதிப்பை அதிகரித்தது, விவசாயிகள் வருமானம் இரட்டிப்பு... என 3 கேள்விகளை கேட்டிருந்தார். அதில் விவசாயிகள் வருமானம் குறித்த சுப்ரமணியன் சுவாமியின் ட்விட்டுக்குத் தான் ஆசிஷ் ஜோஷி தன் கருத்தை பதிவிட்டு சர்ச்சையில் சிக்கி இருக்கிறார். சரி ஆசிஷ் ஜோஷியை ஒரு பக்கம் வைத்து விட்டு, சுப்ரமணியன் சுவாமியின் டிவிட்களுக்கு வருவோம்.

ஜிடிபி ட்விட் -

நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசிய பட்ஜெட் பேச்சில் பத்தி எட்டில் "இந்தியாவின் ஜிடிபி கணக்கு படி உலகிலேயே 6-வது பெரிய பொருளாதாரமாக இந்தியா இருக்கிறது. வாங்கும் திறன் அடிப்படையிலான ஜிடிபியின் படி பார்த்தால் ஏற்கனவே இந்தியா அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு அடுத்து 3-வது இடத்தில் இருக்கிறது" என சொல்லப் பட்டிருக்கிறது. இதை பாஜகவின் முக்கிய தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியன் சுவாமி "இந்த இரண்டில் ஒன்று தானே சரி. இரண்டுமே சரியாக இருக்க முடியாதே என விமர்சித்திருக்கிறார்.

அனேகமாக பட்ஜெட் தரவில் சொல்லப்பட்ட முதல் ஜிடிபி (6-வது இடம்) நாமினல் ஜிடிபியாக இருக்கலாம். பல்வேறு சர்வதேச அமைப்பின் தரவுகளும் இதை உறுதி செய்கின்றன. ஆக என்னைய்யா பட்ஜெட் இது, ஒரு நாமினல் ஜிடிபி எது, வாங்கும் திறன் அடிப்படையிலான ஜிடிபி எதுன்னு கூட சொல்லலன்னா எப்புடி என நிர்மலா சீதாராமனை, சுப்ரமணியன் சுவாமி ஒரண்டைக்கு இழுக்கிறார் போல.

அதே போல பட்ஜெட் பேச்சில் பத்தி பத்தில் "இந்தியப் பொருளாதாரம் 1 ட்ரில்லியன் டாலர் மதிப்பைத் தொட 55 ஆண்டுகள் ஆனது. இன்று நாம் 3 ட்ரில்லியன் டாலர் மதிப்பு கொண்ட பொருளாதாரமாக வளர்ந்து கொண்டிருக்கிறோம்." எனச் சொல்லப்பட்டிருக்கிறது.

55 ஆண்டு ட்விட்

அதற்கு நம் சுப்ரமணியன் சுவாமி "இந்தியப் பொருளாதாரம் 1 ட்ரில்லியன் டாலரைத் தொட எந்த ஆண்டில் இருந்து, எந்த ஆண்டு வரை 55 ஆண்டுகள் எடுத்துக் கொண்டது..? மே 26, 2019-ல் தான் இந்தியப் பொருளாதாரத்தில் 1 ட்ரிலியன் டாலர் அதிகரித்ததா..? இப்போது 3 ட்ரில்லியன் டாலர் மதிப்பு கொண்ட பொருளாதாரமாக வளர்ந்து கொண்டிருக்கிறோம் எனச் சொல்லி இருக்கிறார்கள். அப்படி என்றால் மே 26, 2019-ல் இருந்து வெறும் 6 வாரத்தில், இந்திய பொருளாதாரத்தின் மதிப்பும் இன்னும் ஒரு ட்ரில்லியன் டாலர் அதிகரித்து விட்டதா...? ஹரே ராம்..!" என வெளுத்து வாங்கி இருக்கிறார்.

விவசாயிகள் வருமானம் ட்விட்

விவசாயிகளுக்கான வருமானத்தை இரட்டிப்பாக்குவதற்கான இலக்கு காலத்தை 2018-ல் இருந்து 2022-ஆக உயர்த்தி இருக்கிறார்கள். அப்படி என்றால் அடுத்த நான்கு ஆண்டுகளில் (2019-ஐயும் சேர்த்து) விவசாயிகள் வருமானம் இரட்டிப்பாக்கப்பட வேண்டும். அப்படி என்றால் ஆண்டுக்கு 18 சதவிகிதம் கூட்டு வட்டி விகிதத்தில் விவசாயிகள் வருமானம் அதிகரிக்க வேண்டும். ஆனால் உண்மையாக ஆண்டுக்கு 2 சதவிகிதம் தான் விவசாயிகள் வருமானம் அதிகரிக்கிறது. நல்ல கனவு" என அல்டிமேட்டாக போட்டு தாக்கு தாக்கு என தாக்கி இருக்கிறார்.

நம் சுப்ரமணியன் சுவாமி அடித்த அடி நிர்மலா சீதாராமனை மட்டுமல்ல, மோடி அமித் ஷா உட்பட அனைத்து பாஜக தலைவர்களையும் ஒரு ஆட்டு ஆடி இருக்கும் எனத் தோன்றுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+