டெல்லி: இந்தியாவின் புதிய வேலை வாய்ப்பு கொடுக்கும் இயந்திரங்களில் ஒன்று இந்த ஸ்டார்ட் அப் நிறுவனங்கள். இந்த பட்ஜெட் 2019-ல் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கும், அதில் தைரியமாக தங்கள் பணத்தை முதலீடு செய்பவர்களுக்கும் சில சலுகைகளை முன் வந்து கொடுத்திருக்கிறார் நிர்மலா சீதாராமன்.
ஏற்கனவே பிப்ரவரி 2019-ல் பியுஷ் கோயல் தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டிலும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கும் முதலீட்டாளர்களுக்கும் கொஞ்சம் தேவையானதை செய்வதைப் போல சில அறிவிப்புகள் இருந்தன. ஆனால் இந்த பட்ஜெட்டில் முழுமையாக அறிவிப்பே செய்துவிட்டார்கள்.

ஸ்டார்ட் அப் நிறுவனங்களும், ஸ்டார்ட்ப் அப் நிறுவனங்களில் முதலீடு செய்பவர்களும் அரசுக்கு தாக்கல் செய்யும், பங்கு ப்ரீமியங்களின் தொடர்பான மதிப்பீடுகளை எந்த வகையிலும் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளாது எனச் சொல்லி இருக்கிறார் நிர்மலா சீதாராமன். இது ஏஞ்சல் டேக்ஸ் எனப்படும், ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் முதலீடு செய்யும் தொகைக்கு விதிக்கும் வரிக்கு, தீர்வு காணும் வகையில் அமைந்திருக்கிறது.
ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்காகவே பிரத்யேக தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றை தூர்தர்ஷன் மூலம் தொடங்க நடவடிக்கை எடுக்க இருக்கிறார்களாம். இந்த டிவி நிகழ்ச்சியை தயாரித்துக் கொடுக்க இருப்பதே ஸ்ஆர்ட் அப் நிறுவனங்கள் தான் எனச் சொல்ல் இருக்கிறார் நிர்மலா சீதாராமன்
அதோடு ஸ்டார்ட் அப் துறையை மேம்படுத்த சுமார் 80 உணவு உற்பத்தி சார்ந்த இன்குபேட்டர்கள் மற்றும் 20 டெக்னாலஜி இன்குபேட்டர்கள் இந்த 2019 - 20 நிதி ஆண்டுக்குள் நிறுவ உதவ இருக்கிறார்களாம். இதனால் சுமார் 75,0000 தேர்ந்த தொழில்முனைவோர்கள் விவசாயத் துறையில் உருவாவார்கள் என நிதியமைச்சரே சொல்கிறார்.
ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் மீது நிலுவையில் உள்ள மதிப்பீடுகள் குறித்து ஆய்வு செய்து, அவற்றின் குறைகளை நிவர்த்தி செய்வதற்கு நேரடி வரிகளுக்கான மத்திய வாரியம் (Central Board of Direct Taxes - CBDT) மூலம் ஒரு சிறப்பு நிர்வாக ஏற்பாடு செய்ய இருப்பதாகவும் சொல்லி இருக்கிறார் நிர்மலா சீதாராமன்.
ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் முதலீடு செய்வதற்காக, தங்கள் குடியிருப்பு வீடுகளை விற்று திரட்டப்படும் முதலீட்டுக்கு, மூலதன ஆதாய வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளித்திருக்கிறார்கள். இந்த விலக்கு வழங்குவதற்கு அளிக்கப்படும் நிபந்தனைகளளும் தளர்த்தப்படும் எனச் சொல்லி இருக்கிறார் நிர்மலா சீதாராமன்.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப் அடித்த அந்தர் பல்டி.. ஈரான் மீதான தடை நீக்கம்.. எல்லாம் தலைகீழாக மாறுதே..!!

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!



Click it and Unblock the Notifications