டெல்லி : என்னதான் அரசு பட்ஜெட்டில் மின்சார வாகனங்களுக்கு ஊக்கமளித்தாலும், ஆடோமொபைல் துறையில் உள்ள பிரச்சனைகள் களையப்படவில்லை என்கிறது ஒரு தரப்பு.
கடந்த வெள்ளிக்கிழமையன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் 2019ல், வாகன துறைக்கு, குறிப்பாக மின்சார வாகனங்கள் துறைக்கு அதிரடியாக பல சலுகைகள் விதிக்கப்பட்டது.
மொத்த உற்பத்தி விகிதத்தினை அதிகரிக்கும் வகையிலும், அதோடு வாகன விற்பனையை ஊக்குவிக்கும் வகையிலும், மின்சார வாகனம் வாங்குபவர்களுக்கு வருமான வரிச்சலுகையாக ரூ.1.5 லட்சம் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டது.
மின்சார வாகனங்கள் மீதான வரியை குறைக்க வேண்டும்?
அதோடு மின்சார வாகனங்கள் மீதான வரியை 12 சதவிகிதத்திலிருந்து 5 சதவிகிதமாக குறைக்கவும் ஜி.எஸ்.டி துறையை கேட்டுக் கொண்டுள்ளதும் குறிப்பிடப்பட்டுள்ளது. மின்சார வாகனங்கள் வாங்க வாங்கும் கடன் மீதான வட்டியில் 1.5 லட்சம் ரூபாய் வரை வரிச்சலுகை பெறலாம் என்றும் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். இந்த வரிச்சலுகை ஒரு புறம் இருந்தாலும் எனினும் அத்தியாவசிய தேவையாக உள்ள பெட்ரோல் டீசலுக்கு கூடுதலாக லிட்டருக்கு ஒரு ரூபாய் வரி விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் இபெட்ரோல் டீசல் விலை அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
உற்பத்தி நிறுவனங்களுக்கு சலுகை?
இது மறைமுகமாக கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைத்து, மின்சார வாகனங்களை ஊக்குவிக்கும் விதமாக இந்த வரி விதிப்பு அதிகரித்துள்ளது கவனிக்கதக்கது. அதோடு மின்சார வாகனங்கள் உற்பத்தி தொழில் தொடங்குவோருக்கு வரிச்சலுகையும், அதோடு ஸ்டார்டப் நிறுவனங்களை வருமான வரி விசாரணைக்கு உப்படுத்தப்பட மாட்டார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.
மின்சார வாகனங்கள் விற்பனைக்கு வரவிருக்கின்றன?
டாடா மோட்டார்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் மின்சார இயக்கம் மற்றும் வணிகத் தலைவர் சைலேஷ் சந்திரா கூறுகையில், இந்த நடவடிக்கை மின்சார வாகனங்களுக்கும், internal combustion engines இடையேயான உரிம இடைவெளியை குறைக்க உதவும் என்றும் கூறியுள்ளார். அதோடு இதில் ஒரு நல்ல விஷயம் என்னவெனில் டாடாஸ், மஹிந்திரா, ஹூண்டாய், மாருதி சுசூகி, பஜாஜ் உள்ளிட்ட உற்பத்தி நிறுவனங்களின் மின்சார வாகனங்கள் சந்தைக்கு வரும் நிலையில் இந்த அறிவிப்பு வந்துள்ளது என்றும் கூறியுள்ளார்.
இதில் பலன் இருப்பதாக தெரியவில்லை?
மத்திய அரசு தனது முதல் பட்ஜெட்டில் அறிவித்துள்ள இந்த வரிச்சலுகை ஏற்புடையதாக இல்லை. இது மின்சார வாகனங்களுக்கு வேண்டுமானால் சலுகையை கொடுக்கலாம், ஆனால் ஐ.சி.இ வாகனங்களுக்கு சலுகையை கொடுக்காது. அதிலும் இந்த ஜி.எஸ்.டி வரி குறைப்புகள் கூட மின்சாரா வாகனங்களுக்கு விலையை குறைக்கலாம். ஆனால் ஐ.சி.இ வாகனங்களை விட 40 - 50 சதவிகிதம் விலை அதிகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications