ரூ.25 லட்சம் பணதிற்காக குழந்தையை கொன்ற தந்தை.. இன்ஷூரன்ஸ் பணம் வரும் என்ற ஆசையில் விபரீதம்?

நேபாளம் : தற்போதைய காலத்தில் பணத்திற்காக பல கொலை, கொள்ளை சம்பவங்கள் தொடர்ந்து ஈடேறிக் கொண்டே தான் இருக்கின்றன. எனினும் பெற்ற குழந்தையை கொலை செய்யும் அளவிற்கு ஒருவர் இருப்பாரா என்பதற்கு, ஆம் என்றே இந்த செய்தி கூறுகிறது.

எனினும் வெறும் 25 லட்சம் ரூபாய் பணத்திற்காக, அதுவும் 4 வயது பெண் குழந்தையை கொலை செய்யும் அளவிற்கு துணிந்த தந்தையை இதுவரை யாரும் பார்த்திருக்க முடியாது.

ரூ.25 லட்சம்  பணதிற்காக குழந்தையை கொன்ற தந்தை.. இன்ஷூரன்ஸ் பணம் வரும் என்ற ஆசையில் விபரீதம்?

ஆனால் உண்மையில் அப்படியொரு சம்பவம் நடந்துள்ளது உண்மைதான். அட ஆமாங்க.. நேபாளம் நாட்டில் இரண்டாவது மாகாணத்துக்குட்பட்ட சிராஹா மாவட்டத்தை சேர்ந்த மவுலாபூர் நகராட்சி பகுதியில் உள்ள, ஒரு சிறிய குட்டையில் கடந்த செவ்வாய்க்கிழமை சுமார் 4 வயது மதிக்கத்தக்க சிறுமியின் உடல் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

அப்பகுதிக்கு விரைந்து சென்ற போலீசார் உடலைக் கைப்பற்றி பரிசோதனைக்கு அனுப்பி வைத்தபோது அந்த சிறுமியின் கழுத்தை யாரோ நெரித்துக் கொன்றது உறுதியாகியுள்ளது.

இதுதொடர்பாக இறந்த சிறுமியின் தந்தையான ராம் கிஷோர் யாதவ், 39 வயதுடைய நபரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஆமாங்க.. அந்த புண்ணியாவான், எப்படியாவது பணம் அதிகளவில் விரைவில் சம்பாதிக்க வேண்டும் என்று, குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க ஆசைப்பட்டு, தனது 4 வயது மகள் லஷ்மி ராயா யாதவ் பெயரால் வங்கியில் இன்சூரன்ஸ் கணக்கு பெற்றுள்ளார்.

இந்த இன்சூரன்ஸ் கணக்குக்கான முதல் தவணையாக ஒரு லட்சத்து 75 ஆயிரம் ரூபாயையும் செலுத்தியுள்ளார்.

இந்த இன்சூரன்ஸ் செய்யப்பட்ட தேதியில் இருந்து ஒரு மாதத்துக்குள் இறந்துப் போனாலும் முழுத்தொகையான 25 லட்சம் ரூபாய் கிடைத்து விடும் என்று அண்ணனின் குறுக்கு புத்தி வேலை செய்யவே இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

ஆமாங்க.. அண்ணன் திட்டமிட்டபடி பணத்தை அடைய, இன்சூரன்ஸ் பணத்தை அடையும் நோக்கத்தில் பெற்ற மகள் என்றும் கூட நினக்காமல் லஷ்மி ராயாவின் கழுத்தை நெரித்து ராம் கிஷோர் யாதவ் கொன்றுள்ளார்.

இந்த விபரத்தை எப்படியோ விசாரணை மூலம் தெரியவர, போலீசார் அவரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, தற்போது சிறை வாசம் அனுபவித்து வருகிறார்.

பணத்திற்காக எதை வேண்டுமானாலும் செய்யக்கூடிய இவனை போன்ற ஆட்களால் தான் நாட்டில் பல வேதனையான சம்பவங்கள் தொடர்ந்து நடந்து அரங்கேறிக் கொண்டே இருக்கின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+