பட்ஜெட்டில் குறிப்பிட்ட 5 லட்சம் டாலர் பொருளாதாரம் என்ற இலக்கை அடைவதற்கு என்னென்ன சாத்தியக்கூறுகள் உள்ளது என்பது பற்றி ஆராய்வதற்கான கூட்டத்தை மத்திய கேபினர் செயலாளர் பி.கே சின்ஹா டெல்லியில் இன்று நடத்
டெல்லி: பட்ஜெட்டில் குறிப்பிட்ட 5 லட்சம் டாலர் பொருளாதாரம் என்ற இலக்கை அடைவதற்கு என்னென்ன சாத்தியக்கூறுகள் உள்ளது என்பது பற்றி ஆராய்வதற்கான கூட்டத்தை மத்திய கேபினர் செயலாளர் பி.கே சின்ஹா டெல்லியில் இன்று நடத்த உள்ளார்.
இக்கூட்டத்தில் சமூக நலத்துறை, சுகாதாரத்துறை, நிதி மற்றும் பொருளாதாரத்துறை உள்பட எட்டு துறை செயலாளர்களுடனான கூட்டத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் கலந்துகொள்கிறார் என்பது கவனிக்கத்தக்கது.

கடந்த 2018-19ஆம் ஆண்டில் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் தென்மேற்கு பருவ மழையும் வடகிழக்கு பருவ மழையும் எதிர்பார்த்த அளவில் பெய்யாமல் பொய்த்துப் போனதால், விவசாய விளைச்சலும் கடுமையாக பாதிக்கப்பட்டது. அதோடு தொழில்துறை வளர்ச்சியும் கடுமையான பாதிப்பை சந்தித்தது. இதனால் நாட்டின் பொருளாதார வளர்ச்சியும் கடும் சரிவை சந்தித்தது.
உலக வங்கி உள்பட அனைத்து பொருளாதார ஆய்வு நிறுவனங்களும் கடந்த 2018-19ஆம் ஆண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.5 சதவிகிதம் என்ற இலக்கை எட்டக்கூடும் என்று கணிப்பை வெளியிட்டிருந்தன. ஆனால் போதிய மழையின்மை, விவசாய விளைச்சல் குறைவு, தொழில் துறையில் தேக்க நிலை போன்றவற்றால் பொருளாதார வளர்ச்சி எதிர்பார்த்த இலக்கை எட்ட முடியாமல் 6.8 சதவிகிதத்தில் முடங்கி விட்டதாக கடந்த வியாழனன்று வெளியிடப்பட்ட பொருளாதார ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. கூடவே நடப்பு நிதியாண்டில் பொருளாதாரம் 8 சதவிகித வளர்ச்சியை எட்டும் என்றும் வரும் 2025ஆம் ஆண்டில் 5 லட்சம் கோடி டாலர் என்ற இலக்கை நிச்சயம் எட்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதைத் தொடர்ந்து கடந்த வெள்ளியன்று நடப்பு 2019-20ஆம் ஆண்டுக்கான முழு பட்ஜெட்டை லோக்சபாவில் வெளியிட்ட நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், கடந்த 2014ஆம் ஆண்டில் நாட்டின் பொருளாதாரம் 1.85 லட்சம் கோடி டாலராக இருந்தது. மோடி தலைமையிலான ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்த நடவடிக்கையால் தற்போது பொருளாதார வளர்ச்சி 2.7 லட்சம் கோடி டாலராக உயர்ந்துள்ளது என்று குறிப்பிட்டிருந்தார். அதோடு நில்லாமல், பொருளாதார வளர்ச்சி தொடர்ந்து மேலும் அதிகரித்து வரும் 2015ஆம் ஆண்டுக்குள் 5 லட்சம் கோடி டாலர் என்ற இலக்கை எட்டும் என்றும் உறுதியாகக் கூறினார்.
வரும் 2025ஆம் ஆண்டுக்குள் எதிர்பார்த்த இலக்கை எட்டவேண்டுமானல், உள்கட்டமைப்பு, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களில் முதலீடுகளை அதிகரிப்பது, டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிப்பதன் மூலம் டிஜிட்டல் பொருளாதாரத்தை வளப்படுத்தவது ஆகியவற்றில் நாம் அதிக கவனமும் முயற்சியும் மேற்கொள்ள வேண்டியது அவசியம் என்றும் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையில் ஆலோசனை தெரிவித்திருந்தார்.
இதையடுத்து 5 லட்சம் டாலர் பொருளாதார இலக்கை எட்டுவதற்கு என்னென்ன சாத்தியக்கூறுகள் உள்ளன என்பது பற்றி விரிவாக ஆலோசகனை செய்வதற்கான ஆய்வுக் கூட்டத்தை கேபினர் செயலாளர் பி.கே சின்ஹா இன்று கூட்ட உள்ளார். இக்கூட்டத்திற்கு, சமூக நலம், சுகாதாரம், நிதி மற்றும் பொருளாதாரம் ஆகியவை உள்பட எட்டு துறைகளின் செயலாளர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளார். மேலும் இக்கூட்டத்தில் நிதயமைச்சர் நிர்மலா சீதாராமனும் கலந்து கொள்கிறார் என்பது கவனிக்கத்தக்கது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications